.

Pages

Monday, November 4, 2013

சமூக சீர்கேட்டிற்கு காரணம் ? சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி [ காணொளி ]


'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 


தகவல் தொழில்நுட்பமா !?   மாறிவரும் கலாச்சாரமா !? 

என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள். இதில் நடுவராக 'முத்தமிழ் நேசன்' கவிஞர் M.R. முத்து அவர்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி T.V. பேச்சாளர் மதுக்கூர் இராமச்சந்திரன் மற்றும் 'நிருபர்' இல. சிவா M.A. ஆகியோர் இணைந்து ஓர் அணியிலும், இல்லையில்லை மாறிவரும் கலாச்சாராம்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி மற்றும் 'சிந்தனை பேச்சாளர்' கவிஞர் தியாக. புருஷோத்தமன் ஆகிய இருவரும் மற்றறொரு அணியாக இருந்துகொண்டு நம்மையெல்லாம் நகைச்சுவையூட்டி சிந்திக்க வைக்கின்றனர்.

வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்ற இந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை சமூக விழிப்புணர்வு பக்கங்களின் வாசகர்களுக்கு அன்புடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

இதோ அதன் காணொளி...
 

 நன்றி : அதிரை நியூஸ்

7 comments:

  1. வயிறுகுலுங்க சிரிக்க வைத்து நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த பட்டிமன்ற குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்...

    உலகெங்குமுள்ள தமிழ் பேசும் அன்பர்கள் இந்த பேச்சாளர்களின் சிறந்த சேவையை பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

    ReplyDelete
  2. ரசிக்க ருசிக்க அருமையான பட்டிமன்றம் மற்றைய[TV]சேனல்களோடு போட்டி போடும் அளவிற்கு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் happy new year [ஹிஜ்ரி 1935]

    ReplyDelete
  3. அதிரை நியூஸ் குழுமத்தினரின் இப்புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    நான் youtube-ல் முழுவதுமாக பார்த்தேன். நிகழ்ச்சி கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ரசிக்கும்படி இருந்தது.

    தற்காலம் நாட்டிற்குத் தேவையான நல்ல தொரு விழிப்புணர்வுத் தலைப்பெடுத்து எளிமையான பேச்சாளர்களையும் நடுவரையும் வைத்து சிறப்புடன் நிகழ்ச்சியை நிகழ்த்தி வெற்றியடைய செய்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    முதல் முயற்சி முத்தாக இருந்தது. எல்லோரும் நயம்பட பேசினார்கள், அவர்களுடைய வார்த்தையில் நகைச்சுவையோடு அர்த்தமும் இருந்தது, இக்கால கட்டத்தில் இதுபோன்ற பட்டிமன்றங்கள் தேவை.

    இது உலகத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் பொருந்தும், ஏன் அதிரை இளைஞர்களையும் செர்த்துதான்.

    பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. முதல் முயற்சி
    முத்தான முயற்சி!

    ReplyDelete
  6. நல்ல முயற்சி ..
    இன்னும் பல தலைப்புகளில் ..
    பட்டிமன்றம் நிகழ்த்த வேண்டும் ...
    கவியன்பர் கூறியது போல முதல் முயற்சி முத்தான முயற்சி

    ReplyDelete
  7. எழுத்தாற்றல்களை இனங்கண்டு இவ்வுலகிற்கு அறிமுகம் காணும் பணியைச் செய்கின்றார், வளர்க்கின்றார்.
    பேச்சாற்றல்களை இப்பொழுது இனங்கண்டு அறிமுகம் காணும் பணிகளையும் செய்கின்றார், வளர்க்கின்றார்.
    என்னே இவரின் முயற்சி !
    நல் வளமுடன் வாழ்க பல்லாண்டு !

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers