.

Pages

Monday, December 2, 2013

அங்கீகாரமும், தனியிடமும் வேண்டி முதல்வருக்கு கோரிக்கை !?

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைவில்லை என்று ஆண்கள் செய்த அல்லது ஆண்கள் மட்டுமே செய்யும் வேலைகள் என்று இருந்த காவலர்கள் வேலை ஓட்டுனர்கள் வேலை [ விமானம் உள்பட ] இராணுவம் என்று எல்லா துறைகளிலும் பெண்களும் வந்துவிட்டார்கள் இது நல்ல முன்னேற்றமா அல்லது இவ்வளவு முன்னேற்றம் தேவை இல்லையா என்பதனை வாசகர்களாகிய நீங்கள் கருத்திடுங்கள்.
       
எப்படி ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று இருந்ததோ அதுபோல் பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய செய்து கொண்டு இருக்கிற ஒரு வேலை இருக்கிறது இது இன்றள்ள நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருக்கிறது. அதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டியும் அதற்காக ஓர் இடம் தனியாக ஒதுக்கி தர வேண்டியும் நமது முதல்வரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள் இதற்கு தேசிய மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி என்பவர் நம் அரசு மதுக்கடைகள் நடத்தும் பொழுது பாலியல் தொழிலுக்கும் அங்கீகாரம் வழங்கி தனியாக இடம் ஒதுக்கலாம் என்கிறார்.

உங்கள் கருத்தென்ன வாசகர்களே ?     
பெண்களுக்கு ஏன் இந்த நிலை அரசர் காலம் தொட்டு தேவதாசி என்ற ஒரு பழக்கமும் அதற்காக ஒரு சமுதாயமும் இருந்தது பின் நாடகம் நாட்டியம் என்று தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டனர். பெரிய ஜமின்கள் தனக்கு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இருக்க வேண்டும் என்று கேடுகெட்ட பழக்கத்தை வைத்து இருந்தனர் ஆண்களின் குணமே மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர துடிக்கும் குணம் கன்னியரை கண்டு சபலம் கொள்ளும் தீய குணம் இதுவே கெட்ட பெண்களை ஆண்கள் பக்கம் போகச்செய்தது.
     
காதலித்து பின் ஆண்களால் கைவிடப்பட்டவர்கள்,  தன்னை பாதுகாத்து பராமரிக்க கூடிய ஆண்கள் சோடையாக இருக்கும் பொழுது வருமானம் வேண்டி பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர் இந்த சூழல் இல்லாது போகவேண்டுமானால் தன் மனைவிக்கோ,கணவருக்கோ துரோகம் செய்யக்கூடாது என்று அனைவரும் ஒழுக்கத்தை பேணவேண்டும்.பாலியல் செய்யும் எந்தப்பெண்ணும் தன்னிலைக்கு ஒரு காரணம் சொல்வாள் எப்படி இருந்தாலும் சுய ஒழுக்கம் என்பது அனைவர்களும் தம் வாழ்வில் கொண்டுவர வேண்டும்
     
அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்தால் !?

எக்மோர் = இரயில் நிலையம்
கீழ்பாக்கம் = மனநல காப்பகம் [ பைத்தியகார மருத்துவமனை ]
புழல் = மத்திய சிறைச்சாலை
சௌகார் பேட்டை = சேட்டுகள் அதிகம் வசிக்கும் இடம்    
கோடம்பாக்கம் = சினிமாத்துறை சம்மந்தப்பட்ட இடம்
??????????????? = சிவப்பு விளக்கு பகுதியாக முத்திரை குத்தப்பட்டுவிடும் குடிமகன்களை உருவாக்கி கெட்டபெயர் எடுத்துக்கொண்ட நம் அரசு இதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.
   
இப்படி ஒரு மக்கள் மனதில் நீங்காத ஒரு இடம் சென்னையில் முத்திரை குத்தப்பட வேண்டுமா ?

ஆகவே நம்மால் முடிந்தவரை நமது எதிர்ப்பை காட்டுவோமே !

மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

 1. விபச்சாரம் என்ற சமூகத்தீமையை சென்னை என்ன தமிழகத்தில் எந்தவொரு பகுதியிலும் இவற்றை அனுமதிக்கக்கூடாது.

  சகோ. சபீர் அவர்களின் நியாமான கோரிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ.நிஜம் அவர்களே இது நமது வலைதளத்தின் கோரிக்கையாகும் நாட்டில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளை எந்த சூழலிலும் நாம் எதிர்ப்பதில் ஒன்றாய் கைகோர்த்து நிற்ப்போம்

   Delete
 2. நல்ல விளக்கம்...

  அருமை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. // சகோ.நிஜம் அவர்களே இது நமது வலைதளத்தின் கோரிக்கையாகும் நாட்டில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளை எந்த சூழலிலும் நாம் எதிர்ப்பதில் ஒன்றாய் கைகோர்த்து நிற்ப்போம் //

  நிச்சயமாக...

  நமது வலைத்தளம் தாங்கி வருகின்ற முக்கிய கோரிக்கையாக இருந்தாலும் எண்ணமும் எழுத்தும் உங்களுடையதல்லவா

  அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். கண்டிப்பாக நமது வலைத்தள பங்களிப்பாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைதான் இது.

  ReplyDelete
 4. கியாமத் நாள்/ கலியுகத்தின் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும்; இதை விட மோசமாகவும் பரவும் நிலைகள் உள. முகநூலிலும் மற்றும் இணையங்களிலும் விபச்சார வலைத்தளங்களாக வலைவிரிக்கப்பட்டு, அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஆண்களும் உளர்; பெண்களும் உளர்.

  மதுவை அனுமதிக்கும் அரசு;
  மணம் முடிக்காமல் உட்லுறவு கொள்ளலாம் என்ற அனுமதிக்கான கோரிக்கைகள், தீர்ப்புகள் மற்றும் இந்த ஆக்கத்தில் உள்ளபடியான மிகவும் மோசமான கோரிக்கைகள் எல்லாம் தண்டிக்க முடியாமல் தாரள மயமாக்கப்பட்டத் தீமைகள் ஆகும்.

  நாம் ஊதுவது செவிடன் காதில் விழாமற்போவது போலவே; இருப்பினும், சொல்லி வைப்போம். அதற்கான நனமையை நமக்குப் படைத்தவன் அருள்வான்.

  மேலும், மற்றவர்க்குச் சொல்லும் பொழுது நமக்குச் சொல்லிக் கொள்வதாகவே ஓர் உறுத்தல் ஏற்பட்டு நம்மை நாமே பாதுகாக்கும் என்பது இதன் நோக்கமாகும்.

  இறைவன் தடுத்துள்ள “ஹராம்” என்னும் தடுக்கப்பட்டவைகள் யாவற்றிலும் ஈருலக நன்மைகளும் ஒருங்கே பின்னிப் பிணைந்து இருப்பதும் ஓர் வியப்பென்று அறிவோம்.

  விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதீர்கள் என்னும் கட்டளையைப் பின்பற்றும் பொழுது, உடலுக்கு (இம்மைக்கு) எய்ட்ஸ் போன்ற தீராத வியாதியிலிருந்தும் விடுதலை; நாளை மரணத்திற்குப்பின்னர் (மறுமைக்கு) இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்ததால் நன்மைகள் கிட்டும்; இம்மையில் நிராசையான அச்சிற்றின்பத்திற்குப் பகரமாக சுவனத்தில் நிரந்தரமான பேரின்பம் கிட்டும்.

  இதுவே போன்று, மதுவருந்தாமையால் இம்மையில் உடலுக்கு உண்டாகும் தீமைகள், நோய்களிலிலிருந்து விடுதலை; நாளை மறுமையில் இறைவன் கட்டளைக்குப் பணீந்ததால் நன்மைகள் சுவனமாகக் கிட்டும்.

  இந்த நம்பிக்கையுடையோர்க்கு இவ்வுலகம் ஒரு சிறைச்சாலையே;’ அதனால் எவ்வள்வு தான் மது, மாது என்று ஆசைகள் காட்டினாலும் நம்பிக்கை உள்ளோரை சாத்தானால் ஒன்றும் செய்யவே முடியாது. இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete
 5. கவியன்பரின் கருத்தாக்கம்போல் அனைவர்களது கருத்துக்களும் விபச்சாரத்திற்கு எதிராக மிக கடுமையாக இருக்கவேண்டும் என்பது எனது அவா

  ReplyDelete
 6. அடப்பாவியளா ....
  விபச்சாரம் என்றால் கட்டிவைத்து உதைக்கும் சமுதாயம்
  நம் தமிழ் சமுதாயம் ...அப்படி இருக்க அரசாலும் பெண்ணிடமே விபசாரத்திற்கு அனுமதி கேட்ட சதிகாரனுக்கு என்ன தைரியம் ...

  ReplyDelete
 7. விபச்சாரம் செய்தால் தண்டனை வழங்கும் சட்டம். சில பெரு நகரங்களில் விபச்சார விடுதிகளுக்கு அனுமதியளிப்பது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது. இதுபோன்று புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அவசியம் ஒவ்வொரு பாக்கெட்டிலும் அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் செய்யப்படுகிறது.. இப்படி விளம்பரத்தைக் பார்த்து எத்தனை பேர் புகை பிடிப்பதை விட்டிருக்கிறார்கள்....??? குடி குடியைக் கெடுக்கும் என்று எத்தனையோ விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரம் செய்து என்ன புண்ணியம். எல்லாவற்றையும் படித்து விட்டு அந்த சோகத்தில் இன்னும் ஒரு பெக் போட்டுக்கிர்றேன் மாப்ள என்று சொல்லிக் கொண்டு மேலும் குடிப்பவர்கள் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

  உடலுக்குமட்டுமல்ல மனதிற்கும், மானத்திற்கும் பங்கம் விளைவித்து மனிதனுக்கு தீமையை உண்டாக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் மாறுவதற்கு முழுமையாக தடைசெய்ய அரசு முன்வந்து அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்திவிட்டால் சுகாதாரத்திலிருந்து நேர்மை,நியாயம் தர்மம்,ஒழுக்கம்,அமைதி என்று அனைத்திலுமே நம் நாடு இவ்வுலகிலேயே முதன்மை நாடாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
 8. // நம் அரசு மதுக்கடைகள் நடத்தும் பொழுது பாலியல் தொழிலுக்கும் அங்கீகாரம் வழங்கி தனியாக இடம் ஒதுக்கலாம் //

  நல்லாட்சி என்றால் மக்கள் நல்லவழிகளில் வாழவும் என்ற கருத்தை விட்டு மனிதத்தை அழிக்கும் கொடும் செயல்களையும் செயல்படுத்தி ஆட்சிபுரிவது என்பது எவ்வாறு நல்லாட்சி ஆகும் ?

  ஏற்கனவே மது இனி மாது என்றும் போனால் குற்றம் இழைக்க தூண்டுதலும் அதனை அகற்ற போராடுவதும் என்பதற்கு ஆள ஆட்சிகள் தேவையில்லை.

  நல்வழி என்று அறிந்தவைகளை செயல்படுத்துதலே நல்லாட்சி. வேறு எந்தக் காரணங்களையும் காட்டி மனித தருமங்களை அழிப்பது மகா கொடுமை. இறைவனால் மன்னிக்கமுடியாத கொடுமை.

  ReplyDelete
 9. பதிவுக்கு நன்றி.

  என்ன செய்வது?

  ஒரு சில மக்களும் அதைத்தானே எதிர்பார்கின்றனர், மது அருந்துபவர்கள் இருக்கின்றதுனாலே மதுக்கடைகள் திறந்து இருக்கின்றது, இப்படியே பார்த்தோமானால் நுகர்வோர்கள் இருக்கும்வரை வியாபாரமும் இருக்கும், அது என்ன மாதிரியான வியாபாரமாக இருந்தாலும் சரிதான்.

  ஹராம் ஹலால் தெரியாதவர்களிடம் பேசி என்ன பயன்?

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 10. ஒத்த கருத்தை அனைவர்களும் சொல்லி இருக்கின்றீர்கள் இது அரசுவரை போய் சேரவேண்டும் என்பதே நம் ஆவா

  ReplyDelete
  Replies
  1. அதுக்கென்னா காக்கா

   மின்னஞ்சலில் இந்த லிங்கை தட்டிவிட்டால் போச்சு

   Delete
 11. தேசிய மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அவர்களுக்கு எனது கண்டனம்!

  ReplyDelete
 12. நாட்டு பற்றுள்ள யாரும் இது போன்று அனாச்சரமான காரியகளில் ஈடுபடமாற்றர்கள். எனவே பாலாஜிக்கு எனது கண்டனம்!

  உங்களின் இந்த ஆக்கம் நிச்சயம் தமிழக முதல்வர் அவர்களுக்கு சென்று அடையவேண்டும்.

  ReplyDelete
 13. பாலியலைத் தொழிலாக அங்கீகரிக்க வேண்டி கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, எனபது ஒருபுறம் இருந்தாலும், இதனை முதல்வர் அங்கீகரிக்க மாட்டார் என்றே பலர் நம்புகின்றனர். அவ்வாறே நாமும் நம்புவோம்.

  ஒருவேளை அங்கீகரித்தால் மிகப்பெரிய எதிர்ப்பை முதல்வர் சந்திப்பார் எனப்தில் ஐயமில்லை.. இதில் நாமும் கைகோர்ப்போம்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers