.

Pages

Saturday, November 30, 2013

[ 22 ] 'வளைகுடா வாழ்க்கை' [ பாலைவனத்தில் கலைதாகம் !? ]

பாலைவனத்தில் கலைதாகம் !?
பொதுவாக வறண்ட பூமியில் பாலைவனத்தில் தாகம் ஏற்படும். நம்மவர் மனதில் கலை தாகம் கலைதாகம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட விளைவை
இவ்வார ஆக்கத்தில் பதிய விரும்புகிறேன்....

வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சந்தோசப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் தான் உண்டு வேலையுண்டு என்ற நிலை மாறி பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்திட மன்றங்கள் உருவாகின. பெரும் பதவியில் உள்ள தமிழர்கள் தமிழ் மன்றங்கள்
நிறுவி மாதம் ஒருமுறையாவது இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வர். வருடங்களில் இருமுறையாவது தமிழக கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவர். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பின்னணி பாடகர்கள்
பங்கு கொள்ளும் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அது போன்ற நிகழ்வுகளில் வளைகுடாவாழ் தமிழர்களில் கலைதிறமை உடையவர்களை பங்குபெற செய்வர். இது போன்ற நிகழ்வுகள் நம்மவர்களை மகிழ்வடைய செய்யும் என்றாலும் நிகழ்வுகளில் பங்கு பெற்று கலை நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு தினமும் காதில் கரஒலி  கேட்டு கொண்டே இருக்கும் எப்பொழுது அடுத்த நிகழ்வு நடை பெரும் என்று மனம் ஏங்கிகொண்டே இருக்கும் வேலை முடிந்ததும் மன்றங்களுக்கு சென்று
பல மணி நேரங்களை கழித்து வருவர். இதில் பல பேர் பல கெட்ட பழக்க வழக்கங்களை பழகியயவர்களும்உண்டு.

கலை  தாகத்தால் தனது வேலையை இழந்து நாடு திரும்பி கஷ்ட்டப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிமிக்கிரி செய்வதில் கலை தேர்ந்தவன். நன்கு பாடவும் தெரியும். எல்லா கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வான் இவன் படைப்பு கரஒலிக்கு தப்பாது, பார்க்கவும் நல்ல பார்வையாக இருப்பான்.

ஒரு முறை தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டது. அந்த இளைஞனுக்கு ஏகபட்ட சந்தோசம் அரங்க அமைப்பு முதல் குளிர்பானம் விநியோகம் வரை எல்லா ஏற்பாட்டையும் சுறு சுறுப்பாக செய்து முடித்தான். நிகழ்வு நடை பெற இரண்டு நாட்களுக்கு முன் தமிழக சினிமா கலைஞர்களும் வந்து சேர்ந்தனர். அந்த இளைஞன் இரண்டு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து சினிமா கலைஞர்களுக்கு உதவியாக இருந்தான்.

நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அந்த இளைஞனின்
திறமையை கண்ட ஒரு நடிகர், தம்பி நீ தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புண்டு சென்னை வந்தால் என்னை வந்து பார் என்று குடிபோதையில் உளறி விட்டு சென்றார்.

கலை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அந்த இளைஞனின் பங்கு சிறப்பாக அமைந்ததை அரங்கின் கர ஒலி பறை சாட்டியது. அந்த இளைஞனின் கலைதாகம் மேலும் கூடியது. ஊருக்கு செல்ல முடிவெடுத்து கம்பெனியில் அனுமதி கேட்டான். கம்பெனி மறுக்கவே வேலையை உதறி தள்ளி நான் ஊர் செல்கிறேன் என்று கூறி வீடு திரும்பினான். உடன் தங்கி இருந்த நண்பர்கள் எவ்வளவோ அறிவுரை கூறினர். அவன் செவியில் விழவேயில்லை.

ஊர் சென்றான் வீட்டில் உள்ளவர்கள் வினவினர்...
தம்பி நீ வளைகுடா நாடு சென்று ஒருவருடம் கூட ஆகவில்லையே அதற்குள் விடுமுறையா ! என வினவினர்...

அதற்கு அவன் பதிலேதும் கூறவில்லை... ஒரு வாரம் கழித்து சினிமா நடிகர் முகவரியை எடுத்து கொண்டு சென்னை சென்றான். முகவரி உள்ள இடத்தை அடைந்தான். பெரிய வீடு, வாசலில் வாட்ச்மேன் நிற்க அவரிடம் தான் வந்த நோக்கத்தை கூறினான். அந்த இளைஞனை பாவமாக பார்த்தான். தம்பி உன்னை போல எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள் ஒன்றுக்கும் உதவாத விஷயம் இப்போ அவர் ஊரில் இல்லை என்றார் ஆனால் அவரின் கார் உள்ளே இருந்தது.

வாசலிலேயே காத்திருந்தான்... அவன் எதிர்பார்த்தது போல கார் வெளியே வர
நடிகர் அதி இருந்தார். ஓடி சென்று மூன்றாம் பிறை சார் சார் என்று ஓடினார். அந்த இளைஞன்.

கார் நின்றது...
என்ன வேண்டும் தம்பி ?
என்ன தெரியல சார்...
யாருப்பா நீ ? என்றார் நடிகர்

அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவு கூறினான்...

தம்பி இப்போ வாய்ப்பு இல்லை ஏதாவது வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறினார் பதில்  எதிர்பாராமல் கார் கிளம்பி சென்றது. கலங்கி போனான் தலைக்கேறிய பித்தம் ஒரு நொடியில் தெளிந்தவனாக காரையே வெறித்து பார்த்து விட்டு ஊர் திரும்பினான். ஆறு மாதம் கஷ்டம்.... இருந்த காசெல்லாம்
கரைந்து போனது. யாரும் உதவ முன் வரவில்லை. மீண்டும் வளைகுடா நண்பர்களுக்கு போன் செய்தான். போப்பா உன்னை நம்பி விசா எடுத்தால்
கச்சேரி கலை நிகழ்ச்சி என்று அலைவாய் விசா எடுத்து எனக்கு கெட்ட பெயர் வரும் என்றார்.

மறு முனையில் அழுதே விட்டான் அவ்விளைஞன் இனி அந்த தவறே செய் மாட்டேன் உதவி வேண்டினான். நண்பர்கள் உதவிடவே மீண்டும் வளைகுடா வந்தான். தம்பி நாளைக்கு கச்சேரி வருகிறாயா என அழைத்ததும் காததூரம் ஓடினான் அந்த இளைஞன்.

நிழல் வேறு நிஜம் வேறு அறிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே !

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

17 comments:

 1. வாவ் நல்ல நிகழ்வை அருமையாய் கட்டுரைப்படுத்தினாய் நண்பா அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதாய்யை இருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. எந்த ஒரு கலையாக இருந்தாலும் .மனதில் புகுந்து விட்டால் ..அதுவே வாழ்க்கை என்று சொல்லும் ..
   உழைக்க வந்த இடத்தில் ..கலை மீது தேட்டம் கொண்டால் ..இவ்விளைஞனுக்கு ஏற்பட்ட கதி தான்
   உழைக்க வந்த இடத்தில் உழைப்பு மட்டுமே பிரதானம்

   Delete
 2. வளைகுடாவில் நடக்கும் நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று. நன்றாக கட்டுரை வடித்துள்ளீர்கள்.அருமை வாழ்த்துக்கள்.

  அது மட்டுமல்ல பல இளைஞர்கள் தீய நட்புக்களை வளர்த்துக் கொண்டு கேளிக்கை விடுதிக்குச் சென்று நன்கு குடித்து விட்டு அங்கு நடக்கும் கேளிக்கை நடனங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாது உழைத்துசம்பாரித்த பணத்தை தண்ணீராய் இரைத்து கெட்டதொடர்புகளை ஏற்ப்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கையை கேள்விக்குறியாய் ஆக்கிக் கொண்டவர்களும் நிறைய பேர் உண்டு..

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல்களை தந்தீர்கள் அதிரை மெய்சா அவர்களே ..நன்றி

   Delete
 3. சினிமா மோகத்தில் அலைவோருக்கு சரியான சாட்டையடி !

  திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் இதுபோன்ற அனுபவத்தில் மூலம்...

  ஒவ்வொன்றும் பயனுள்ள தொடர்கள்...

  வாழ்த்துக்கள் காக்கா

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...தம்பி நிஜாம் அவர்களே

   Delete
 4. சினிமா மோகம்... சினிமா தாகம் இன்றும் வளைகுடாவில் உள்ள நம் சகோதரர்களிடம் கொட்டிக் கிடக்கிறது.

  ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு சினிமா பிரமுகர் வருகிறார் என்றால் அந்நிகழ்ச்சிக்கு கலர் சேர்ப்பதும்.. கூட்டம் சேர்வதும் இயற்கைதான் ஆனால் அதற்காக நம் வேலையை எல்லாம் விட்டு அவனுக்காக உழைப்பது ஏற்புடையதல்ல..

  தற்போது நம் சகோதரர்களும் சிலர் அடிமைப் பட்டுக் கிடக்கின்றனர்.

  நல்ல நினைவூட்டல்....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்து ..மிக சரியானதே ..
   தனக்கென குடும்பம் உள்ளவர்கள் ..உழைப்பை மட்டுமே பிரதானமாக கொள்ளல் வேண்டும்

   Delete
 5. நல்லதோர் விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..சகோ..ஹபீப் அவர்களே

   Delete
 6. ஒவ்வொரு வாரமும் நல்ல புத்திமதிகள். அவசியம் ஒவ்வொரு வளைகுடாவாழ் தமிழ் மக்கள்கள் தங்கள் இதயத்தில் இருத்த வேண்டியவைகள் மட்டும்மல்லாது, எவ்வூராகினும் என்னாடாகினும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நல்ல அறிவுரைகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..அறிஞர் நபிதாஸ் அவர்களே ..நம்மவர்
   வாழும் இடம் எதுவாகிலும் அறிவுரை ஏற்பது அவசியம்

   Delete
 7. இந்த நேரத்தில் யான் கண்ட ஓர் அதிர்ச்சியான நிகழ்வை ஈண்டுப் பதிகின்றேன்:

  நம் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ஒரு சகோதரர் இருக்கக்கூடிய அமீரகத் தமிழ்ச் சங்கங்களுக்கு எண்ணிக்கையே இல்லாத நிலையி அவரும் ஓர் அமைப்பு ஏற்படுத்தினார் (ஆனால் இப்பொழுது உள்ள சட்டப்படி அப்படிப்பட்ட அமைப்புகள் எதுவும் இயங்க முடியாமல் அரசு ஆப்பு வைத்துவிட்டது!) அந்தச் சகோதரர் திரைப்படக் கலைஞர்களை அழைத்துக் கலைநிகழ்ச்சி நடத்தும் சென்னை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நடத்தி விட்டார். ஆனால், வந்தவர்கட்கான அனைத்துச் செலவுகளையும் அவருடன் இணைந்திருந்தவர்கள் எல்லாம் இவரைக் கைகாட்டி விட்டுச் சென்று விட்டதுடன், அந்தச் சென்னை நிறுவனத்தாரிடம் சொல்லி, அந்தச் சகோதரரைக் கட்டிப் போட்டு , அடித்து மிரட்டி இவர்தான் எல்லாச் செலவுகட்கும் பொறுப்பு என்று காகிதத்தில் ஒப்பம் வாங்கி விட்டனர். இதுவிடயமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அவர் என் ஆங்கிலப் புலமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் சார்பாக ஆங்கிலத்தில் நம் நாட்டின் தூதரகத்திற்கு நீண்ட மடல் எழுதிக் கொடுத்தேன். பின்னர் அந்த நகலை எடுத்துக் கொண்டு போய் (நல்லவேளை இந்தச் சகோதரர்க்கு இரு அமைச்சர்களை நன்குத் தெரியும்) தமிழக அமைச்சர்களைச் சந்தித்து என் ஆங்கிலக் கடிதம் (தூதரகத்திற்கு அனுப்பியதின்) நகலைக் காட்டியுள்ளார். அவ்வமைச்சர்கள் கூறினர் ‘தூதரகம் வழியாகச் செய்யப்படும் இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகட்கு நாங்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்போம்” என்று வாக்களித்துள்ளனர்.

  குறிப்பு: அந்தச் சகோதரர் ஊருக்குப் போகுமுன்பு என்னிடம் கடன்கேட்டார்; நான் கொடுக்கவில்லை; நான் நினைத்தது போல் அவர் நீண்ட நாட்கள் தாயகத்தில் இருந்து அவ்வமச்சர்கள் மூலம் மேற்படித் திருடர்கட்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. உழைக்க வந்த இடத்தில் ஏன் இந்த வேலை ...
   நீங்கள் செய்த காரியம் மிக சரியானதே ...
   சிலர் இழந்த பணத்தை மீளாமல் தவிப்பவர்களும் உண்டு

   Delete
 8. உங்கள் ஆக்கத்தின் தலைப்பே உங்களின் வினாவிற்கான விடை!

  ReplyDelete
 9. பதிவுக்கு நன்றி.

  வளைகுடாவை முடித்துக் கொண்டு ஊரில் வந்து அமர்ந்து இருக்கும் என்னை திரும்ப அசைபோட வைத்து விட்டீர்கள்.

  பாராட்டுக்கள்

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 10. நன்றிகள் பல ஜமால் காக்கா ..
  இடர் முடிந்தாலும் ..புத்தகமாக பல தகவல்களுடன் தொடரும்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers