.

Pages

Tuesday, December 10, 2013

சுவர்க்கமும் ! நரகமும் !!

சொர்க்கமும் நரகமும்
விவாதம் பண்ண
நாம்தான் அங்கே
நடுவராம்!

முதலில்
சுவர்க்கம் சொல்ல
நாமும் கேட்போம்

நல்லோரும்
நன்றாய் தொழுதோரும்
என் நண்பர்

பாவப்பட்டோரும்
பண்பாளரும்
என் மடியில்
துயில் கொள்வர்

நான் அவர்களை
நேசிக்க
அவர்களோ
என்னை நேசிப்பார்

ஆஹா சப்பாஷ்

இனி நரகம்
"உன் பெருமை
சொல்லேன்"
நாமும் கேட்க

ஆன்றோரே சான்றோரே
என் அருமை நண்பர்களே
என் பெருமை சொல்கிறேன்
கேளுங்கள்

அரசாட்சி புரிந்தோரும்
அரசியல் செய்தோரும்
சினிமாவில் சிறந்தோரும்
சீவி சிங்காரித்து
தன் அழகை
பிறருக்கு
பறை சாற்றியோரும்
என் சொந்தங்கள்
அறிவீரோ ?

பணம் பணம் என்று
கொள்ளை லாபம் ஈட்டி
கோடிகளை தன்பக்கம்
வைத்துக்கொண்டோரும்

படைத்தவனை மறந்திட்டு
பகட்டு வாழ்க்கை வாழ்தோறும்
படை படையாய்
வருவாரே எனை நோக்கி

அவர்கள் எனை
விரும்பாவிடினும்
என் விருப்பம்
அவர்கள் தான்

கூறுங்கள் நடுவரே
யார் பக்கம் அதிக கூட்டம்

நடுவர் நான் கூறுகின்றேன்
கேளுங்கள் செவி தீட்டி

நல்லாட்சி புரிந்தோரும்
உண்டு
நாகரிகமாய் அரசியல்
செய்தோரும்
உண்டு

ஆனால் அதுவெல்லாம்
சொற்ப எண்ணிக்கையே!

நாளைய
நம் விருப்பம்
சொர்க்கமென்றால்
அது தானே
நமக்கு வேண்டும்

விரும்பியவை
வேண்டுமென்றால்
வகுத்திடுங்கள்
நல் வாழ்வு

கெட்ட
பணமும் வேண்டாம்
பகட்டும் வேண்டாம்
படைத்தவனின்
சட்டங்களை
சரியாக செய்திடுவோம்
சன்மார்க்க வழியில்
சமத்துவமாய்
வாழ்ந்திடுவோம்.
மு.செ.மு.சபீர் அஹமது

16 comments:

  1. சிறந்த விழிப்புணர்வு !

    அனைவரும் முதலில் சொன்னவர் கேட்டு வழிநடப்போம்...

    ReplyDelete
  2. ஆஹா !

    நடுவரின் தீர்ப்பு அருமை !

    ReplyDelete
  3. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்கு உணர்ந்து அனைவரும் முதலில் சொல்லப்பட்டிருப்பது போல் அதனைக்கடை பிடித்து இறைநெருக்கத்தைப் பெற்று சுவர்க்கம் புகுவோமாக.!

    ReplyDelete
  4. சரியான தீர்ப்பு!

    அறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
    நெறியான வாழ்வை நினை.



    ஆழ்மன நம்பிக்கை ஆன்மீக மார்க்கறிவு
    வாழ்வதர்க் கான வழி

    ReplyDelete
  5. சொல்ல வேண்டிய கருத்தை சுவையாய் சொன்னீர்கள் ..
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. நல்லவர்களுக்கான நல்ல தீர்ப்பு!

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    சகோ மு.செ.மு.சபீர் நீங்க ரொம்பதான் அசத்திட்டீங்க.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான்.

      Delete
  8. நாம் அனைவர்களும் பல்வேறு கருத்துடையவர்களாய் இருந்தாலும் சுவர்க்கம் எனும் வஷயத்தில் ஒரே கருத்தாய் இருப்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கப்போவதில்லை

    இவ்வாக்கத்தை வரவேற்றதிலும் எந்த சந்தேகமும் இல்லை நம் அனைவருக்கும் நம் மனித குலத்திற்கும் மறுமை சுவர்க்கம் கிடைக்கட்டுமாக இறைவனின் ஹிதாயத்,தௌபீக் கிடைக்கட்டுமாக

    ReplyDelete
  9. ஒன்று கவனித்தீர சுவர்க்கம் சுருக்கமாய் தன்னிலை சொல்ல நரகமோ நம் அனைவரையும் நண்பர்களே! என்று அழைத்துள்ளது பசப்பு வார்த்தைகள், நண்பன்போல் பாவனை இதுவெல்லாம் சைத்தாநியத்

    என்னை விரும்பினால்தான் நான் அவர்களை விரும்புவேன் என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சுவர்க்கம் பேசிடுச்சி. நரகமோ அவர்கள் என்னை விரும்பாவிட்டாலும் i don care என்பதுபோல் நான் அவர்களைத்தான் விரும்புகிறேன் என்கிறது நாம் உஷாராக இருக்கவேண்டும் நம் விஷயத்தில் நரகத்திற்கும் நமக்கும் ஒருதலை காதலாய் இருக்கட்டும் நாம் சுவர்க்க விரும்பியாய் இருப்போம் ஆமீன்

    ReplyDelete
  10. சொற்ப எண்ணிக்கை அதிகம் ஆக வேண்டும்...

    அருமையான வரிகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. மனிதா !

    மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்கள் சுவர்க்கமும் ! நரகமும் !! என்ற ஒரு மாயக் கண்ணாடி அண்மையில் தயாரித்துள்ளார். அதில் உன் முகத்தைப் பார்த்தால் நீ இப்பொழுது சுவர்கத்திற்கு தகுதியா அல்லது நரகத்திற்கு தகுதியா என்பது தெரிந்துவிடும்.

    ReplyDelete
  12. சகோ.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தாவது நம் சுய பரிசோதனை செய்வது அவசியம் என்பதாகிறது நாம் படுக்கைக்கு செல்லும் முன் இன்று நாம் நல்லது அதிகம் செய்தோமா தீயது அதிகம் செய்தோமா என்பதை ரீவைண்டிங் செய்யவேண்டும் பின் நாளை நாம் நல்லது மட்டுமே செய்யவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கவேண்டும்

    ReplyDelete
  13. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.. இத்தீர்ப்பு திருத்தப்பட மாட்டாது.

    தீர்ப்பு நாளின் அதிபதியே நமக்கு தீர்ப்பளிப்பவன்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு நரகம் சொர்க்கம் இவை தான் நமது முழக்கம் நரகத்தின் பண்பும் சொர்கத்தின் பண்பும் பதிவில் எத்திவைத்தீர்கள் மிக அழகு.வாழ்த்துக்கள் சகோ சபீர் அஹமது அவர்களே .

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers