.

Pages

Saturday, January 25, 2014

நட்பு !?

நல்லது செய்வது நட்பு, நல்லோர்க்கு கிட்டும் நட்பு, நளினமாய் நடக்கும் நட்பு நபிகளாருக்கு கிட்டியது அபூபக்கரின் [ ரலி ] நட்பு எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஹீராக் குகையில் மறைகையில் நடந்த களைப்பில் நபிகளாரின் சோர்வு அபூபக்கரின் [ ரலி ] மடியில் தலைசாய தூக்க மிகுதியால் பொழுது சாய பாம்புகளும் விஷ ஜந்துகளும் குடிகொள்ளும் இடமாதலால் தன்னிடம் உள்ள உடைகாளில் உள்ள அத்துணை துணிகளையும் சிறுது சிறிதாக்கி எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட கடைசியா எஞ்சிய ஒரு ஓட்டைக்கு தன் கால் கட்டைவிரலை பயன்படுத்தி அடைத்த தியாகத்தொழர் அவர் கால் கட்டை விரலை பாம்பு தீண்ட வழியால் துடி துடித்து  மல்கி அவர்கள் வடித்த கண்ணீரில் ஓர் துளி பெருமானாரின் முகத்தில் விழ பதறி எழுந்தவர்கள் என்ன அபூபக்கரே கண்கள் கலங்கி இருக்கிறீர் உடல் வேர்த்து இருக்கிறீர் என்று கேட்டு நடப்புகள் புரிந்து அல்லாஹ்வின் உதவியால் நலவுகள் நடந்தேறிய சம்பவங்கள் நாம் அறிந்ததுதான் இருந்தும் நட்புக்கு இதைவிட வேறு உதாரணம் வேறு சொல்வதற்கு உண்டோ என்பதுபோல் இந்த சம்பவம் சொல்லலாம்.
   
ஒரு பாலினம் கொள்ளும் நட்பு என்பது போற்றுதலுக்குரியது ஆனால் . இருவேறு பாலினம் கொள்ளும் நட்பானது கூடா நட்பாகும் பெண் ஆணிடம் கொள்ளும் நட்பு Boy friend ஆண் பெண்ணிடம் கொள்ளும் நட்பு Girl friend இது மேலை நாட்டு கலாச்சாரம் ஆகுமே தவிர இது இந்திய கலாச்சாரமோ இந்து கலாச்சாரமோ ஆகாது காரணம் முந்தைய இதிகாசங்கள், புராணங்கள், பண்டைய நாகரிகங்களில் எல்லாம் ஆணும் பெண்ணும்  காதலித்ததாகவும், கலவிகொண்டதாகவுமே படித்து இருக்கிறோம் ஆண் பெண் நட்பு கொண்டதாய் எங்குமே கண்டதில்லை ஆண் பெண் நட்பை இந்திய கலாச்சாரம் அங்கீகரித்ததில்லை அவ்வையார் பாட்டியும் அதியமானும் அரசனுக்கும் புலவருக்கும் உண்டான நட்பு ஆண் பெண் நட்பல்ல.
 
மேலும் விரிவாக சொல்லப்போனால் ஆண் தெய்வமும் பெண் தெய்வமும் காதல் வயப்படும் கலவிகொண்டு பிள்ளை பேருகொள்ளும் இந்து மதத்தில். ஆனால் ஆண் பெண் நட்பு அங்கீகாரமில்லை ஆதாரமுமில்லை அதுவெல்லாம் மேலை நாட்டு கலாச்சாரம் என்றே சொல்லும்.
 
இஸ்லாம் சட்டம் அங்கீகாரம் கொண்ட நாட்டில் ஆண் பெண் நட்பும் பாவம் காதலும் பாவம் இரண்டிற்குமே ஒரே தண்டனை அதன் தண்டனை இறைவனால் விதிக்கப்பட்ட தண்டனையாகும் அந்நிய ஆணும் பெண்ணும் நண்பர்கள் ஆகலாம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம் ! காதலர்கள் ஆகலாம் என்பது இந்திய கலாச்சாரம் ! கணவன் மனைவியாக மட்டுமே ஆகமுடியும் என்பது இஸ்லாமிய கலாச்சாரம்.

மு.செ.மு.சபீர் அஹமது

8 comments:

  1. நட்பின் பெருமை அருமை - ஆண் பெண் உறவு முறை விளக்கம் சூப்பர்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நட்பின் விளக்கம் அருமை.

    நெருப்பும் பஞ்சும் நட்பாகாது, நீரும் நெருப்பும் நட்பாகும்

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. //எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஹீராக் குகையில்// என்பதல்ல ! எதிரியியை தந்திரமாக வென்றிட என்பதே சரியானது. நம்பெருமானார் யாருக்கும் அஞ்சுவதில்லை இறைவனையன்றி. எதிரியும் மனிதனாக வாழ வேண்டும் என்ற கவலை மிகுந்தவர்கள் அன்னவர்கள். வேதத்தில் பதிந்த,..... போரில் அண்ணவர்கள் எறிந்த மண்ணின் துகள்கள் பட்டவர்களே வலிதாங்காமல் துடிதுடித்த சம்பவம் நினைவில் கொள்ளவேண்டும். அம்மண்ணை தான் எறிந்ததாக இறைவனே உண்மைப்படுத்திணன்.

    // அவர் கால் கட்டை விரலை பாம்பு தீண்ட// அண்ணலார் தன் எச்சிலால் தீண்டப்பட்ட இடத்தில் தடவ, விஷம் நீங்கியதையும் எழுதிட வேண்டும்.

    படிக்கும் போது உள்ளத்தில் சீறி வந்தவை.

    ReplyDelete
  4. நட்பின் விளக்கம் மிகச் சிறப்பு. நல்ல நட்புடன் ஒன்று பட்டு இருப்போம்.

    ReplyDelete
  5. \\கணவன் மனைவியாக மட்டுமே ஆகமுடியும் என்பது இஸ்லாமிய கலாச்சாரம்.\\

    முத்தான முத்தாய்ப்பு வரிகள்.

    நபிதாஸ் அவர்கள் சுட்டியக்காட்டியதன் பிரகாரம் மாற்றி எழுதுக

    எம் கண்மணியாம் நபிகளார் (ஸல்) யாருக்கும் அஞ்சி ஓடவில்லை; அன்றிரவு அல்லாஹ்வின் ஆணை வந்தது; அதுபோல் வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததால் தான் அவர்களின் அணுக்கத்தோழர் அபூபக்ரு(ரலி) அவர்களிடமும் முற்கூட்டியே அறிவித்து பயணத்திற்கு ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டியிருந்தார்கள்; எனவே எல்லாம் அல்லாஹ்வின் ஆணைக்குக் கட்டுப்பட்டப் பயணமே அன்றி அஞ்சுதல் என்பதே அவர்களின் நெஞ்சிலே கிஞ்சிற்றும் கிடையாது, யாம் இய்ற்றி ஈண்டுப் பதிவாகியுள்ள “நபிகளார் (ஸல்) நற்றவ தோழர்கள் (ரழி-அன்ஹூம்)” என்ற பாடலின் கருவும் அத்த்கைய அருமை சஹாபாக்கள் என்னு தோழர்களைப் பற்றிய நினைவூட்டலே ஆகும்.

    அவர்களின் தியாகம், அவர்கள் எல்லாரும் அண்ணல் நபிகளார்(ஸல்) அவ்ர்களின் பால் வைத்திருந்த பேரன்பு இவைகளைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் இற்றைப் பொழுதினில் இழிவாகப் பேசப்படும் வேளையில், உங்களின் ஆக்கம் நிறைவைத் தருகின்றது; வாழ்த்துகள்; இதற்குரிய நற்கூலியை அல்லாஹ் உறுதியாகத் தருவானாகவும் (ஆமீன்)

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களையும்; அவர்களின் தோழர்கள் (ரழி-அன்ஹூம்) அவர்களையும் இழிவாகப் பேசுவோர்க்கு இவ்வுலகிலேயே இழிவையே அல்லாஹ்வும் வழ்ங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், இடையில் மனந்திருந்தியவர்களும் உளர். அண்மையில் ஹஜ்ஜூக்கு வந்தவர்களில் பிரபலமாகப் பேசப்படட்வர்: இந்த நபிகளார்(ஸல்) அவர்களைப் பற்றி மோசமாகத் திரைப்படம் எடுத்த நெதர்லாந்து இயக்குநர் தான் திருந்தி வருந்தி இஸ்லாத்தை ஏற்று மக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று; குறிப்பாக எம் கணமணியாம் நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்களின் ரவ்ழா முன்னால் தேம்பித் தேம்பி அழுதுமிருக்கின்றார்.

    ReplyDelete
  6. நபிதாஸ் அவர்கள் கவியன்பர் அவர்கள் இருவரும் சுட்டிக்காட்டிய விஷயம் ஏற்புடையதே

    ReplyDelete
  7. இணிய சகோ.தி,தனபாலன் அவர்களின் எதிர்ப்பில்ல ஆதரவு .சகோ.KMJA அவர்களின் அருமையான ஒப்பீடல்.சகோ.நபிதாஸ் அவர்களின் சுட்டிக்காட்டல் எல்லாம் நலமாய் அமைய மற்ற இதில் பங்கேற்ற மற்ற நண்பர்கள் சகோதரர்கள் அனைவர்களுக்கும் நம் தாய் நாட்டின் குடியரசு தின வாழ்த்துக்கள் வாழ்க வையகம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers