.

Pages

Monday, January 6, 2014

அயலக வாழ்வும்... அண்டை வீடும்...

1.  எல்லோரையும் போல் நாமும் இருக்க வேண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஒருவகை...

2. பெரும்பாலும் அந்த ஊர் காரர்கள் வெளிநாட்டு பொழைப்பையே  நம்பி இருப்பதாலும் நாமும் போவோமே என்ற ஆசையும் ஓர் காரணம்.

3. உள்நாட்டில் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று நன்றாக படித்து இருக்கவேண்டும் அல்லது சொந்தமாய் வியாபாரம் செய்யவேண்டும் வியாபாரம் செய்ய பணம் வேண்டும் படிப்பும் பணமும் குறைவிருந்தால் வெளிநாட்டிற்கு சென்றால்தான் அதிக பொருள் ஈட்ட முடியும் அதுவும் ஓர் காரணம்.
   
இப்படி பல  காரணங்களால் அயலகத்தில் பணிபுரிய செல்கிறார்கள் அதுபோல் பணிபுரிய சென்றவரில் ஒருவர் பற்றி இங்கே பார்ப்போம்...         
அவர் ஓரளவிற்கு படித்தவர்தான் சொந்தமாய் அவரின் தகப்பனார் செய்த தொழிலை இவர் இப்பொழுது கவனித்து வருகிறார் ஆரம்பகாலத்தில் இருந்த வியாபாரம் இப்பொழுது இல்லை கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தொழிலை மேம்படுத்தாமல் விட்டது இன்று தொழிலில் சற்று பின்னடைவு பொறுப்பேற்றக்கொண்ட மகன் மனதைரியத்தோடு முழு ஈடுபாட்டோடு சற்று சிரமம் பார்க்காது உழைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். படிப்பே இல்லாத பக்கத்துவீட்டுக்காரன் அமெரிக்கா சென்று பணத்தை வாரி வழங்குகிறான் தமது மனைவிக்கும் தாய்க்கும் சகோதரிகளுக்கும் சொல்லவாவேனும் !?

இந்த வியாபாரியின் மனைவிக்கு எப்பொழுது கடையைவிட்டு வந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனின் சுகபோகத்தை சொல்லிக்கொண்டு சோறுபோடுவாள் இவனும் எத்தனையோ தடவை சொல்லிவிட்டான். "சாப்பிடும்பொழுது டென்சன் பண்ணாதே"ன்னு அவள் கேட்ட பாடில்லை இவனுக்கும் வியாபாரம் சுறுசுறுப்பில்லாமல் இருப்பது,மனைவி தொந்தரவு பண்ணுவது இவைகளை கண்டு சரி நாமும் வெளிநாடு போய்தான் பார்ப்போமே என்ற ஆவல் பிறந்துவிட்டது சென்னைக்கு மேல் எங்கும் போகாதவன் வெளிநாடு செல்லப்போகிறான்.
 
நண்பர்களை பிடித்து பாஸ்போர்ட்டை கொடுத்து அவர்கள் கேட்ட டாக்குமென்ட் சமாச்சாரங்களை கொடுத்து இன்டர்வியூம் செலக்ட் ஆயாச்சு ஏஜென்ட்கள் கேட்ட தொகையை நினைக்கையில் அந்த தொகையை சொந்த வியாபாரத்தில் போட்டு ஈடுபாட்டோடு உழைத்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்ன செய்வது வெளிநாட்டுக்கு போவதற்கு தூரத்து சொந்தங்கள் கூட கடன் தருகிறார்கள் உள்ளூர் வியாபாரத்திற்கு கடன் தர மறுக்கிறார்கள் ? என்னமோ பயணத் தேதி குறித்தாகிவிட்டது நல்லபடியாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டார்.
     
அமெரிக்கா வந்தது ஏற்கனவே தயாராக இருந்த ரூம் சென்றாகி விட்டது அங்கு எல்லோருமே பார்த்த முகங்கள் ஒரே ஊர்காரர்கள் இவருக்கு அளவிலா சந்தோஷம் வேலை கிடைக்கும் வரை டூட்டி முடித்து வருபவர்களிடம் அந்த நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வார் வெளியில் சென்று வருவார் காணாததை கண்ட சந்தோஷம் வேலை கிடைக்க சில காலம் பிடித்தது ஒரு வகையாய் வேலை கிடைத்து வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே வெளி மாநிலத்தவர்கள் தங்கும் ரூமில் போய் சேர்ந்தார் வேலை செய்யும் பொழுது பல இடர்பாடுகள் ஊரில் முதலாளியாய் இருந்துவிட்டு இங்கே வேலைக்காரனாய் இருப்பது அடிமை வாழ்க்கைபோல் உணர்ந்தார் சாப்பாடும் ஒத்துக்கொள்ளவில்லை ஊருக்கு போன் செய்தால் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஊரில் உள்ளவர்களும் அமெரிக்காவில் உள்ள ஊர்காரர்களும் சமாதானம் செய்து வைத்தனர் நாங்கள் வந்தபொழுது உனக்கு ஏற்பட்டதுபோல்தான் நினைப்பு வந்தது போகப்போக சரியாகிவிடும் என்றனர் குளிர்காலமும் வந்துவிட்டது நகக்கண்களில் ஊசி குத்துவதுபோல் இருந்தது என்ன பாவம் செய்து இங்கு அனுபவிக்கிறேனே என்று தனக்குத்தானே புலம்பினார்.

புலம்பல் எல்லாம் நான்கு மாதங்கள் தான் அப்புறம் தெம்பாகிவிட்டார் கை நிறைய காசு பணம் கிடைகிறது  பணத்தை செலவழித்தால் சொகுசு வாழ்க்கை ஊர்காரர்களும் இல்லாத வெகு தூர இடம் நல்ல வசதியாகிப்போனது காய்ந்த மாடு கம்பங்காட்டுக்குள் நுழைந்ததுபோல் ஊருக்கு செல் பேசுவது குறைந்தது பணம் காசுகள் அனுப்புவது குறைந்தது அங்குள்ள ஊர் காரர்கள் வந்து என்ன ஆச்சு உனக்கு என்று  கேட்க்கும் அளவிற்கு போனது இவரோ உன்வேலையை பார்த்துக்கொண்டுபோ என்று சொல்லும் அளவிற்கு சூழல் மாறியது நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஜெட்வேக பயணம் போனது. இவர் பெற்ற பிள்ளை வயதுக்கு வந்து கல்யாண தேதி குறித்து கல்யாண ஏற்பாடுகள் நடக்க இவர் ஊர் காரர்களின் தொந்தரவால் கொஞ்சம் பணம் பிள்ளை கல்யாணத்திற்கு என்று கொடுக்கிறார் மனைவியோ உங்கள் பணமெல்லாம் வேண்டாம் இத்தனை வருடங்கள் உங்கள் பணத்தில வாழ்ந்தோம் அதுபோல் வாழ்ந்து கொள்கிறோம் நீங்கள் ஊர் வந்து சேருங்கள் என்று கதறுகிறார் அவர் காதிற்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

கல்யாணமும் முடிந்தாகிவிட்டது காலங்கள் கனிகிறது இவருக்கு லேசாய் உடல் சோர்வு ரத்தம் சுண்டினால் திமிர் அடங்கும் என்பார்கள் ஊர், குடும்பம், என்ற கவலை வந்துவிட்டது சம்பாதித்த காசுகளை ஊருக்கு அனுப்பி வைக்கிறார் அமெரிக்காவில் வேலை செய்ய செய்ய காசு. இவருக்கு ரெஸ்ட் எடுக்க மனம் இல்லை காலங்கள் ஓட மனைவிக்கோ கவலை இந்த மனுசர் மறந்தாலும் ஒரேடியாய் மறந்துபோகிறார் உழைத்தாலும் போதும் போதும் என்கிற அளவிற்கு உழைக்கிறாரே கதறாத குறையாய் மனைவி ஊருக்கு அழைக்க இவருக்கு கிடைக்கும் பணத்தை விட்டுவிட்டு வர மனமில்லை உடல் சோர்வோ ஊருக்கு போகச்சொல்கிறது பண ஆசையோ விட மறுக்கிறது இப்படி பட்ட சூழ்நிலைக்கு சிறிய குட்டிக்கதை...

கணவனும் மனைவியும் ஆற்றோரமாய் நடந்து செல்கிறார்கள் ஆற்றில் ஒரு கம்பளி மூட்டை மிதந்து செல்கிறது மனைவி சொல்கிறாள் நீங்கள் ஆற்றில் இறங்கி நீந்தி சென்று அந்த கம்பளி முட்டையை எடுத்து வாருங்கள் என்று ஆற்றில் இறங்க சொல்கிறாள் கணவன் சற்று தயங்கிவிட்டு சரியென்று ஆற்றில் நீந்தி அந்த கம்பளி மூட்டையை அடைகிறார் சற்று நேரத்தில் அந்த கம்பளி மூட்டையோடு கட்டி புரள்கிறார் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் அதிகமாகி விட்டது ஆற்றில் இறங்கிய கணவன் வெகு நேரமாகி விட்டதே என்ற கவலையில் சப்தமாக மூட்டை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் கரை வந்து சேருங்கள் என்று கவலையாய் பதருகிறாள் இவன் காதிற்கு மனைவி சொன்னது விளங்கவில்லை பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மனைவி சப்தமாக கத்த சொல்கிறாள் அவர்களும் சப்தமிட்டு கரைக்கு வந்து சேரும் வழியை பாருங்கள் மூட்டையை விட்டுவிடுங்கள் என்று கத்துகிறார்கள் ஆற்றில் இருந்த கணவன் சொல்கிறான் நான் மூட்டையை விடத்தான் முயற்சிக்கிறேன் அது என்னை விட மறுக்கிறது என்று சப்தமிடுகிறார் கரையில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! உண்மை காரணம் அந்த கம்பளி மூட்டை என்று மனைவி நினைத்தது தவறாகிப்போனது அது க ர டி ! [ ஆம் கம்பளி மூட்டை கரடியாகிப்போனது ! ]
மு.செ.மு.சபீர் அஹமது

13 comments:

  1. சிறந்த படிப்பினை தரும் பாடம் !

    ரசித்து வாசித்தேன்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கட்டுரை .கட்டுரையை படிப்பதில் தொய்வு வரவில்லை . சிறப்பான விளக்கமும் அதற்க்கு தகுந்ததுபோல் உதாரணக் கதையும் கட்டுரையில் உள்ளது. . பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கையை இழந்தவர்கள் பலர் நம் சமுதாயத்தில் உண்டு .வெளிநாடு சென்று தனது இருபது ஆண்டு கால வாழ்க்கையில் நான்கு ஆண்டுதான் மனைவி மக்களோடு இருந்திருப்பேன் என்று புலம்பியவர்கள் உண்டு . குடும்ப வாழ்வில் மனைவி ஒரு உந்துதல் சக்தியாக இருக்க வேண்டும் மாறாக கணவனை தொய்வு விழக் கூடிய குணமுடையவளாக வந்து விடக் கூடாது. கட்டுரை ஆசிரியருக்கும் கட்டுரையை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துகள் . அன்புடன்

    ReplyDelete
  3. இந்த கட்டுரைக்கு கம்பளி மூட்டை கதை மிகப்பொருத்தமாக அமைந்துவிட்டது

    ReplyDelete
  4. சொல்லிக் கொண்டே இருந்தாலும், விட்டு விட்டு வந்த அந்த அமெரிக்காவுக்கு மீண்டும் போக மாட்டோமா என்றே தோன்றுகின்றது அது ஏன்?

    ஊரில் இருக்க விடாமல் ஊரார் கூட விடுப்பில் வந்ததுமே “ எப்ப கிளம்புறீங்க?” “அப்பமா? தோசையா?” என்றெல்லாம் நச்சரிப்பதில் அவர்கள் நம்மீது கொண்ட் அக்கறையா? விடையறியா வினாக்களில் இதுவும் ஒன்றாகும்.

    நல்லதொரு விழிப்புணர்வுப் பக்கத்தை எடுத்துக் கையாண்ட விதம், கட்டுரையில் தொய்வின்றி ஓட்டமும் சரளமான கதை அமைப்பும் வெகு ஜோர். பல்கலை வேந்தராய் உருவாகிக் கொண்டிருக்கின்றீர்கள்; சபாஷ். வாழ்த்துகள்; பாராட்டுகள்!

    ReplyDelete
  5. பணிசுமையிலும் திரும்ப திரும்ப வாசிக்க தோனுகிறது...

    ReplyDelete
  6. அருமையான உதாரணத்துடன் கட்டுரையை அழகாக முடித்துள்ளீர்கள். தாங்கள் சொன்ன கரடிக் கதை போல வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊர் போய் செட்டில் ஆகிவிடவேண்டும் என்று உறுதியாய்ச் சொன்ன எத்தனையோ பேரை சிறிது காலம் கழித்து மீண்டும் துபாயில் நான் பார்த்துள்ளேன்.

    ReplyDelete
  7. அன்புடையீர்,

    உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html

    தங்கள் தகவலுக்காக!

    நட்புடன்
    ஆதி வெங்கட்
    திருவரங்கம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு ஆதி வெங்கட்

      சிறந்த படைப்பை வழங்கிய எழுத்தாளர் - கவிஞர் சபீர் அஹ்மது அவர்களுக்கும், எங்களின் படைப்பை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும், இவற்றை தாங்கி வந்துள்ள வலைசரத்திற்கும், கருத்திட்டு ஊக்கப்படுத்தி வரும் எங்கள் பங்களிப்பாளர்கள் - வாசக நேசங்கள் அனைவருக்கும் நன்றி !

      Delete
  8. வணக்கம்
    இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. எதிலும் அதிக பற்று ஆபத்து. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது போன்றவைகளின் எண்ணங்களும் படிக்கும்போது மனதில் தோன்றின. வெளிநாடுகளுக்கு செல்லாதவர்களுக்கு ஒரு ஆதரவாகவும் கட்டுரைச் செல்கிறது. எது எப்படியோ வாழ்க்கையின் தத்துவங்கள் புரியாவிட்டால் இப்படிதான் கரடிக்கையில் மாட்டிக்கொள்ளும் அவலம் எங்கும் ஏற்ப்படாமல் போகாது தானே...

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி.

    அமெரிக்காவா அதிரையா?
    கம்பளி மூட்டையா கட்டு கட்டா பணமா?

    செம பின்னல்.

    அருமையான ஒரு வடிவாக்கம்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  11. மதிப்பிற்க்குரியோர் அனைவர்களும் உங்கள் மதிப்பான வாக்குகளை இவ்வாக்கத்திற்கு தந்துள்ளீர்கள் பிரபல வலை தளத்திற்கும் பரிந்துரைத்து இருக்கின்றீர்கள் மிக்க சந்தோஷம் மேலும் இவ்வலைத்தளம் சிறப்பாக செயல்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers