.

Pages

Friday, February 28, 2014

பருவம் [ பாடலுடன் கவிதை ]

முந்தியப்  பருவம் கருவறை வளர்ச்சி
**** முதன்முதற் அங்குதான் சுழற்சி
தந்தையும் தாயும் இறையவ னருளால்
****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
*******வளமையும் இளமையும் தேயும்!

இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
வளமையில் இறையை மறந்ததை யோசி
****வறுமையின் புயலதும் வீசி
உளமதில் பருவ மாற்றமும் வந்து
*****உறுதியும் குலைந்துநீ நொந்து
களமதில் மாறும் காட்சியாய் உருவம்
******கரைந்ததும் காலமெனும் பருவம்!

கருவறைப் பருவம் பெற்றதை மறந்தாய்
****கனவினில் மிதந்துநீ திரிந்தாய்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் கண்டே
****ஒருயுகப் பருவமும் உண்டே
பெருகிடும் துயரம்; பேறெனச் சுவனம்
******பெற்றிடத் தீர்ப்பிலே கவனம்
பருவமாம் மறுமை நிரந்தரம் அன்றோ?
.********படித்திடு வாழ்வினில் நன்றாய்!

அறுவடைப் பருவம் மட்டுமே ஆங்கு
*********அதற்கென விதைத்திடு இங்கு
மறுமுறை உலகின் பருவமும் தீண்டா
*********மறுமையை நம்புவோர் வென்றார்
நெறிமுறை பேணி வாழ்ந்திடும் பருவம்
*******நிழலெனத் தொடரும் உருவம்
பறிமுதல் செய்த உயிருடன் வாழ்க்கைப்
.**********பருவமும் சென்றிடும் காற்றாய்!

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்,(அபுதபி)
பாடியவர்: அதிரை பாடகர்: ஜாஃபர் (ஜித்தாஹ்)

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை நேற்று [ 27-02-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

19 comments:

  1. வாழ்வில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்ப பருவம், முதுமை பருவம் என்றுகொண்டால் இதில் ரொம்ப முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வாலிபப் பருவமே.

    பருவத்தை இனிய குரலில் வழங்கிய பாடகர் அதிரை
    ஜாஃபர் மற்றும் கவிக்குறள் ஆகியோருக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எப்பருவத்திலும் இனிமை சேர்க்கும் எம்பாடகரின் இனிய குரலில் யான் மயங்கினேன். உங்களின் துரிதமானப் பதிவுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      Delete
  2. வணக்கம்

    கவிதைைய பாடலாக சீரமைத்தது மிகச் சிறப்பு.....வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. சீர், அசைக்குள் அடங்கும் மரபிலக்கணம் பயினறவனாதலால் பாடலாக வடிவமைத்துப் பாடகரின் வாயசைவுக்குள் வார்த்தைகள் உட்காரும் வண்ணம் இயற்றித் தருவதென்பதே எம் எண்ணம்.

      Delete
    2. திரு.உரூபன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  3. பருவமும் வகைகள் பலப்பலத் தந்தாய்
    .....பாடலின் தேன்னிசைக் கேட்டேன்
    உருவமும் மாறும் பருவத்தில் நின்றும்
    .....உள்ளமும் வளர்ந்திடும் ஒன்றாய்
    துருவமும் எதிற்கும் குணமதில் கொண்டு
    .....துன்பமும் இன்பமும் போன்று
    தருவதில் பெற்றோம் நின்னது நுண்மை
    .....தவறிடோம் என்றுமே உண்மை..

    ReplyDelete
    Replies
    1. நித்தமும் மாறும் இவ்வுல கிற்றான்
      .....நிம்மதி தேடியே அலைந்து
      பித்தனாய்த் திரிந்த போதிலும் எமக்குப்
      .....பிடித்துள மார்க்கமாம் இஸ்லாம்
      வைத்துள சட்டம் பேணுதல் வேண்டும்
      ....வையக வாழ்வெனும் பருவம்
      தைத்துள ஆடையை அணிந்துத்
      ....தரமுடன் வாழ்ந்திடச் சொன்னேன்!

      கற்பதில் ஆர்வம் கவனமும் கொண்டுக்
      .....கவிதையும் யாத்திடும் நீங்கள்
      சொற்பதம் புரிந்து பாவிலே கருத்தும்
      ....சொரிந்திடும் அறிவெனும் மழைதான்
      அற்புதம் காணும் உங்களின் தமிழில்
      ......அழகுற கவிதையின் பாங்கும்
      நிற்பதைக் கண்டே என்மனம் துடிக்குதே
      ,,,நித்தமும் உன்முகம் காண!

      Delete
    2. \\தைத்துள ஆடையை அணிந்துத்\\

      தைத்துள ஒழுக்க ஆடையை அணிந்துத்

      என்று வாசிக்கவும்

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.
    நல்ல கருத்துகளோடு மிகவும் அழகாக இருக்கின்றது.

    உண்மையில் நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கின்றது, இப்போ உள்ள தலைமுறைகள் நடத்தைகள் வேருங்க,

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

      Delete
    2. சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே கருதப்படுகிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல்ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக உள்ளது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம் மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாகும்.

      Delete
    3. பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண் மூடித்தனமானதாக இருக்கக் கூடாது! இன்றைய இளம் பருவத்தினரிடையே ‘டேட்டிங்’ கலாசாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிறது.

      Delete
    4. பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண் மூடித்தனமானதாக இருக்கக் கூடாது! இன்றைய இளம் பருவத்தினரிடையே ‘டேட்டிங்’ கலாசாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிறது.

      Delete
    5. அந்த உரையாடலின் போது, ‘இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கோட்பாடுகள் அமைத்தீர்களேயானால், உங்கள் பிள்ளைகள் அதை மீறத்தான் நினைப்பார்கள். மாறாக அவர்களுடைய குறிக்கோள்களுக்கும், எதிர்காலத்துக்கும் எது நல்லது, எது உதவாது என்று அவர்களே உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.

      இந்த வயதில் பார்ட்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். அதற்கு தடை போடாதீர்கள். அதை விட்டு விட்டு ‘பார்ட்டிக்கு செல்லக்கூடாது, ஆண் பிள்ளைகளுடன் நட்பு கூடாது, 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும்’ என்று நீங்கள் கட்டுப்பாடுகளை விதித்தால் உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு உள்ள உறவு முறிவதுடன், அவள் உங்கள் பேச்சை மீறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என அர்த்தம்.

      தவிர அவள், தன் நடவடிக்கைகளை உங்களிடமிருந்து மறைக்கவும் துணிவாள். அவளுடன் சேர்ந்து முடிவெடுப்பதால் அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது என்ற உணர்வு ஏற்படுவதுடன், அந்த முடிவுக்கு அவளும் பொறுப்பு என்ற உணர்ச்சியை உண்டாகும். அதோடு, உங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடி, உங்கள் இருவருக்குமான பந்தம் பலப்படுத்தப்படும்.

      Delete
    6. தகாத உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் இன்னல்கள் (பாலியல் நோய் முதல் இளவயது கர்ப்பம் வரை) பற்றி, இளவயதில் காதல் வயப்பட்டு, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து, குடும்பம் மற்றும் சமுதாய ஆதரவின்றி, தவிக்கிறவர்களைப் பற்றி… இவை எல்லாவற்றையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தலாம்.

      ‘என் பெண் அப்படிப்பட்டவள் அல்ல. தவறு செய்ய மாட்டாள்’ என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கும் பெற்றோர், அவர்களின் பெண் ‘காம’ வலையில் சிக்கிய பிறகு படும் அவஸ்தைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு.

      காலத்துக்கேற்ற விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதே நல்லது. இந்த விஷயத்தில் பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புகிற ஒரே அட்வைஸ்… விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோரே!

      Delete
    7. தற்பொழுது இலண்டன் வானொலியார் விதித்துள்ள ஆணைக்கிணங்க கவிதையின் வரிகள் “பதினாறு அடிகள்” மட்டும் என்றிருந்தால் மட்டுமே ஒலிபரப்புக்கும் யூட்யூப் பதிவுக்கும் எடுத்துக் கொள்ளப்படும் என்கின்றனர். என்வே தான் என் பாடலின் வரிகளைச் ச்ருக்கினேன் (இதில் 4x8=32) வரிகள் என்று காட்சிக்குத் தோன்றினாலும், உண்மையில் அவைகள் 1 ஆம் சீருக்கும் 5-ஆம் சீருக்கும் மோனை வெளிப்பாட்டை அறியப்படுத்தவே மடக்கி எழுதியிய்ப்பதால் 32 வரிகளாய்த் தோன்றலாம். எனினும் இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை நீட்டியே (மடக்காமல்) எழுதி விட்டால் அவர்களின் ஆணைக்கும் உட்பட்டு “பதினாறு” வரிகளாய் அமையும் (உண்மையில் பதினாறு வரிகள் தான்) இப்படி வரி வரம்புகட்குக் கட்டுப்பட மரபிலக்கணப் பாக்களால் மட்டுமே கருவுக்குள்ளாகவே அமைத்திட இயலும் என்பதும் எனக்கு இயலுமானதாகவே உள்ளது. யான் அவர்களின் கட்டுப்பாட்டிற்காகச் சுருக்கிக் கொண்டாலும் (பதினாறு வரிகட்குள்), என் பாடலுக்கான “விரிவுரையாக” என் மச்சானின் கருத்துரைகள் பக்க பலமாய் நிற்கின்றன; பாராட்டுகள் மச்சான்!

      Delete
  5. கருத்திட்ட அனைவருக்கும் நன்றியும் துஆவும்..

    ReplyDelete
  6. தற்ப் போது நான் தாயகம் வந்திருப்பதால் இன்டர்நெட் வசதியில்லாமல் தமிழில் கருத்துக்கள் டைப் செய்து பதிய முடியவில்லை அத்துடன் எனது கவிதைகளும் கட்டுரைகளும் கொஞ்சம் தாமதமாக தளத்தில் இடம்பெறும் என்பதினை சக பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு இதன்மூலம் தெரியப் படுத்திக்கொள்கிறேன். விரைவில் இணைப்பு பெற்று வருகை தருவேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் ஏப்ரலில் ஊரில் இருப்பீர்களா, கவிஞரே!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers