.

Pages

Saturday, March 29, 2014

மகவே கேள் ! புதிய தொடர்...

அன்பு வலைதள வாசக நெஞ்சங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். 'மகவே கேள் !' என்ற புதிய தொடருக்கான கரு பெயரிலேயே தெரிகிறது என்று அன்பு சகோ நபிதாஸ் அவர்கள் கடந்த பதிவில் குறிப்பிட்டது மிக சரியானதே. பதிவு துறையில் காலம் காலமாய் வெளியாகும் புத்தகங்களில், சுய சரிதை, தளப் புராணம், பயணக் கட்டுரை இவைகளை போன்று அறிவுரை கூறும் பதிவுகள் காலம் காலமாய் வந்துள்ளது.

பழங்காலத்தில் மன்னர் ஆட்சி நிகழ்ந்த தருணத்தில் பிள்ளை பேரு இல்லாத மன்னர்கள் அருந்தவம் இருந்து முதுமை அடைந்த தருவாயில் குழந்தை பேரு பெறுவார். பெற்ற பிள்ளையை சகல கலையும் கற்ற வல்லவனாக திகழ முனைவர். இளம் பருவத்தில் உள்ள மகனிடம் எதிர்காலத்தை பற்றிய அறிவை பல கல்வியாளர்கள் மூலம் அறிவூட்டி வருவர். இளவல் இளைஞனாய் உருவெடுக்கு முன் சில மன்னர்கள் மரண படுக்கைக்கு செல்ல நேரிடும்போது தனது அன்பு மகனை அழைத்து அறிவரை கூறுவர். அது இன்றி அமையாத ஒன்றாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவாய் அமையும்.

கால போக்கில் நாகரீக உலகில் பதிவுத்துறை மேம்பட்டு கல்வியாளர் கையில் வந்ததன் காரணமாக நல்ல பல எதிர்கால முன்னேற்றத்துக்கான நூற்கள் வெளியாயின. வெளியாகி கொண்டு இருக்கின்றன. இணையதள வாயிலாக பல கட்டுரைகள் வந்து நல்ல பல கருத்துக்களை வழங்கி
வருவது அறிவு சார் உலகிற்கு நல்ல விருந்தாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதன் அடிப்படையில் எனது சில கருத்துக்களை பதிய விரும்பி 'மகவே கேள் !' என்ற புதிய தொடர்...

மகன் என்றால் ஆண் பால், மகளே என்றால் பெண் பால். வயிற்றில் கருவாகி ஒரு வாரிசு உருவாகும் தருவாயில் அக்கருவை மகவு என்பார்கள் எனவே மகவே என்றால் எதிர்கால இருபாலருக்கும் உள்ள அறிவுரை என்று வைத்து
கொள்ளலாம்.

இனி தொடருக்குள் செல்லலாமா !?
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

12 comments:

  1. ஆஹா... தொடரின் தலைப்பே வித்தியாசமாக இருக்கு ' மகவே' குறித்த விளக்கம் அருமை.

    தொடரை உன்னிப்பாக வாசிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...சகோ ..நிஜாம் அவர்களே ..
      நல்ல பகிர்வு மூலம் ..நாம் நலம் பெறுவோம்

      Delete
  2. அறிவுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ...
      மூத்த சகோவான ..உங்களின் எதிர்பார்ப்பு
      என்னை உற்சாக படுத்துகிறது

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    அருமையான விளக்கம்.
    உங்களின் இந்த கட்டுரை தொடர வாழ்த்துக்கள், உங்கள். கட்டுரை நிச்சயமாக தொடர்ந்து வரும் என்று நம்பலாம், ஆனால் நமதூருக்கு தொடர்ந்து தண்ணீர், தடையில்லா மின்சாரம், கம்பன் எக்ஸ்பிரஸ், போன்றவைகள் வருமா என்று எப்படி நம்புறது?

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ..
      தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி

      Delete
  4. நல்லதொரு தொடரில் பயனுள்ள ஆலோசனைகள், அறிவுரைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே
      தங்கள் வருகைக்கு நன்றி ..
      வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் தளத்தில் இணைந்து நல்லதொரு தொடரை ஆரம்பித்துள்ளீர்கள். கடந்த தொடரைப்போல் இத்தொடரும் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேலானான பாசத்திற்கும் ..
      ஆதரவிற்கும் நன்றி

      Delete
  6. Replies
    1. ஒற்றை வரியில் ..
      ஓராயிரம் அன்பை காட்டிய நண்பருக்கு நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers