.

Pages

Thursday, May 1, 2014

அன்புள்ள மணிமொழிக்கு !

அன்புள்ள மணிமொழிக்கு,

அன்பு தந்தையின் அன்பான அறிவுரைகள்.

மகளே !
அன்று செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை வென்று மனித நடைமுறை வாழ்க்கையில் ஏக்கம்; தேக்கம்.

அன்று, இன, மொழி, நிறம், இடம் வேறுபாடற்று ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம்.

இன்று, இனத்திலும், மொழியிலும், நிறத்திலும், இடத்திலும் வேற்றுமை விதைகளைத் தூவி வேற்றுமை உணர்வுகளை செழிக்கச் செய்து வருகின்றனர்.

மகளே ! வாழ்க்கையே இன்று யுத்தக் களம். போரிடுவோர்கள் ஒருவரல்ல பலர்.

அமைதியும் அன்பும் மனிதருள் தழைத்து இன்பமுடன் செழித்து வாழ அன்று போதிக்கப்பட்டது. பின்னால் அது மதம் என்று முத்திரைக் குத்தப்பட்டது.

ஒவ்வொருக் காலக் கட்டத்திலும், வேறுபட்ட ஒவ்வொரு இடத்திலும் நுண்ணறிவு ஜீவிகளால் மனித நல் வாழ்வு அமைய அவ்வாறு ஆங்காகே போதனைகள் வகுத்துத் தரப்பட்டன. மனிதர்களைப் பிரிப்பதற்கன்று மாறாக புனிதர்களாகப் பக்குவப்படுத்தப்படவே.

அந்த நுண்ணறிவு ஜீவிகள் தாங்கள் புகழப்பட வேண்டும் என்றோ, அல்லது தமக்கு முன் வாழ்ந்த நுண்ணறிவு ஜீவிகள் அல்லது மற்ற நுண்ணறிவு ஜீவிகள் அவர்களால் வகுத்துத் தந்த வழிமுறையை விட்டு தன் வழிமுறைகள் வேறுப்பட்டுக் காணப்பட வேண்டும் என்றோ எண்ணியதில்லை. அந்தந்தக் கலக்காட்டம் இடம் சூழல் இதற்கேற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துத் தந்தனர்.

அறிவு போதனைகள் தந்த அவர்கள் பெயர்களால் அல்லது போதனையின் மையக் கருவின் பொருளால் அல்லது இடத்தால் அவ்வழிமுறைகள் பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டு அமைதியும், அன்பும் போதிக்கப்பட்டே வந்தன; வருகின்றன.

பின்னாளில் காலத்தாலும், இடத்தாலும் தோன்றிய இம்மனித நல்வாழ்வுப் போதனைகளில், அதஅதனைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் அறிவு தெளிவிற்கு ஏற்ப ஆழமான நுண்ணறிவுகளை சில அனுஷ்ட்டானங்களில் அமைத்து இறைச் சிந்தனையுடன் வகுத்துத் தந்ததனால் அதனில் தெளிவடையாதனாலும், அப்போதனையின் நோக்கம் உலகில் மனிதனின் அமைதி, அன்பு என்பதை அறியாமாலும், புரிந்துக்கொள்ள முடியாமைனாலும்,
( தான் பின்பற்றும் வழிமுறைகளில் விளங்கிக்கொள்ளாமல் ஊறிப் போனதாலும்,) அனுஷ்ட்டானத்தின் தெளிவுகள் பின்னாளில் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளால் இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மக்களின் அறிவுப்பரிணாம வளர்ச்சி இதற்கேற்பவும், பழமையும் காத்து அக்கால மனித நல்வாழ்வு போதனைகளை அமைத்துத் தந்த அதனை, பழமையின் தொடர்வாகப் புரிந்துக்கொள்ள முடியாமையினாலும், அல்லது இறைச் சிந்தனையுடன் தான் ஏற்ற போதனைகள் பின்னப்பட்டதால் தெய்வக் குற்றம் என்றாகி உண்டாகி விடுமோ என்று பின் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளின் தெளிவுப் பரிணாமங்களை புரிந்துக் கொள்ளமுடியாமையினாலும்,
( அல்லது அவைகளை ஒன்றிணைத்து வழிகாட்டப்பட்டவைகளை புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாமையினாலும் ) இதுபோல அந்நுண்ணறிவு ஜீவிகளான அம்மகான்களின் நிலையை இவர்களால் எட்ட முடியாமையினாலும், அவ்வழிமுறைகளில் புனித நிலையடைந்தவர்கள்; தெளிவடைந்தவர்கள் இவ்வறிவில் பெரும்பான்மையான பாமரநிலை மக்கள் மனதில் தங்கள் வழிமுறை மீதுக் கொண்ட பற்று சிதைந்து விடாமல் இருப்பதற்காகவும், அமைதி; அன்பு இதனை உலகில் நிலைக்க வேண்டிச் செய்த நல்வழிகளை, அவ்வழிகளிலேயே இவ்வாறான நிலைகளினால் வேறு வேறாகப் பிரித்துப் பிரித்தே இனம் காட்டி, பிரிவினைகளை வளர்த்து உலகில் மனிதனின் அமைதி; அன்பு இவைகளைத் தான் அறியாமலே சிதைக்கின்றனர். இவர்கள் ஒருவகை வகையானப் போராளிகள்.

தான் ஏற்று நம்பிய வழியின் மூலம் போதனைப் பெற்றவர்கள் வழித் தலைமுறையில் பின்னாளில், இதுவரை ஏற்று வந்த அப்போதனைகளை அவர்கள் தன் சுய (த்தெளிவில்லா அல்லது தெளிவை அடைய முடிய) அறிவுக் கண்ணோட்டத்தினால் அவ்வழிமுறைகளிலே பிரிவினைக் கொண்டு; கண்டு அமைதியும், அன்பும் அதற்கு வேறுச் சுய அர்த்தங்களை கொண்டு; கற்பித்துப் பிரிவினைகளை தன் மதத்துக்குள்ளே ஏற்படுத்தினார்கள். நாங்கள் கூறுவதுதான் சரியான ஆதாரப்பூர்வ உண்மையான நல் வழிகாட்டல்கள் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு மதத்தினுள்ளும் அமைதியும்;  அன்பும் அதனை தாம் அழிக்கின்றோம் என்பதை அறியாமலே அவர்களுக்குள்ளும் அமைதி; அன்பு அதனை அழிக்கின்றானர். எங்கள் வழியே உயர்ந்தது;  சிறந்தது. அதிலே அமைதியும்;  அன்பும் கொண்டு வாழலாம் என்று சமூகத்தில் நிலைக்கவேண்டிய அமைதியையும்;  அன்பையும் பிரிவினையால் குலைக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

மகளே ! இவைகள் மனித வாழ்வியல் கொள்கையை வைத்துப் பிரிவினைகள் ஆக்கியவைகள், ஆக்கியுள்ளனர். இதோடல்லாமல் இன்னும் பலப் போராளிகள் உள்ளனர். அவர்களையும் நீ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அன்று, அமைதியும்; அன்பும் நிலைக்க, மக்கள் இனிமையாக வாழ, 'என்னிடமே அல்லது என் தலைமையின் கீழே நல்ல நிர்வாக ஆட்சி அமைப்பு உள்ளது', என்ற எண்ணத்தில், ஆளுமையில் ஆசைக்கொண்டு, நாங்களே சிறந்த திறமையுள்ளவர்கள் என்று, இம்மாதரியான இந்த குணத்தைக் கொண்டு மனிதனின் அமைதி; அன்பு இவைதான் முக்கியம் என்பதை அறியாமலும்; உணராமலும் தன் சுய நலத்திற்காக அடுத்த நாட்டுடன் போரிட்டு மனிதர்களை அழித்தார்கள்.

இன்று சமூகத்தில் பல கருத்துக்களில் பிரிவினைகளைத் தூவி அல்லது புதிதாக ஒன்றைக் கிளப்பி அதில் பிரிவினையைத் தடவித் தூவி எங்களுக்கே ஆதரவுத் தாருங்கள் என்று தன் சுய நலத்திற்காக அமைதியையும், அன்பையும் மக்கள் வாழ்வில் அழித்து; குலைத்து, ( மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி ) ஆட்சி பீடத்தில் உட்காரத் துடிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

அமைதியும், அன்பும் அதனை, 'நான் தலைவனாகி என்கீழ்தான் கொண்டு வரமுடியும், நல்லாட்சி தரமுடியும்', என்று அந்த ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அக்கட்சியில் உள்ள சிலர் தான் தலைவனாக ஆசைப்பட்டு அக்கட்சியை உடைத்துப் புதுப்புது எண்ணிறைந்த கட்சிகளையும் ஏற்படுத்தி, அமைதியும்; அன்பும் ஒரு குறிப்பிட்ட தன் இன மக்களிடம் மட்டும் என்ற இலக்கணத்திலாக்கி பொது மனித அமைதியையும், அன்பையும் அழிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

மகளே ! இதுமட்டுமல்ல ! இதோ இவர்களையும் தெரிந்துக்கொள்.

அமைதியும், அன்பும் நாங்கள் பேசும் மொழி இனத்தார்களுக்குள் மட்டும் தான் உண்டு என்று அமைதியையும், அன்பையும் மொழிக்குள்ளே அடைத்து மொழிவாரி அமைதியையும், அன்பையும் அழிக்கின்றானர். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

அமைதியும், அன்பும் இன்று குடும்பம்வாரியாக, தெருவாரியாக, ஊர்வாரியாக, மாநிலம்வாரியாக, நாடுகள்வாரியாக, கண்டங்கள்வாரியாக சுருக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் உணமைப் பொருளை அழித்து வழிகாட்டப்படுகின்றன; வழிகாட்டப்படுகின்றனர். இவ்வாறான இவர்களும் ஒருவகை வகையானப் போராளிகள்.

அறியாமையை அகற்றாமல் கற்றவர்கள்; கல்லாதவர்கள், உயர்ந்தவன்; தாழ்ந்தவன் என்றும் இனம் பிரிக்கப்பட்டு அமைதியையும், அன்பையும் அழித்தும் அறியாமையால் அறிவாக்கப்படுகிறது. இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

இவ்வாறு ஏதாவது ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைதியும், அன்பும் அழிக்கப்படுகிறது மகளே !

நீ இதற்கெல்லாம் அடிமைப்படாது தன்னைப் போலவே அனைவரையும்; அனைத்தையும் கருதி, அதுதான் உண்மை, அதனை உணர்ந்து நேசித்து வாழ்ந்தால் அமைதியும்; அன்பும், தழைக்கும்; செழிக்கும், உன்னிடமும்; உன்மூலம்.

அப்போதும் உன்னைத் தெய்வப் பிறவி என்று பிரிக்கத்தான் இவர்கள் பார்ப்பார்கள். உன் அளவிற்கு அனைவரும் உயர நீ வேறுபாடுப் பிரிவினைகளைக் காட்டாவிட்டாலும், உன் அறிவளவிற்கு இவர்கள் உயரச் சிந்திக்க மாட்டார்கள். உன் கண்ணியம்; புனிதம் புரியாமாட்டார்கள். ஆனால், அங்குமட்டும் சமத்துவம் கண்டு சக மனிதன் என்றுக் கூறி, உன்னை அவர்கள் அறிவுக்கு தாழ்த்திப் பேசுவார்கள். அல்லது "தான்; நான்" என்ற அகம்பாவத்தால் உன் புனித நிலையை மறக்கடித்து தன் பெயரை நிலைநாட்டப் பேச்சில் மட்டும் அமைதி; அன்பு என்றும் பேசுவார்கள். இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

இந்த வகை வகையானப் போராளிகளினால்தான் அன்றும் செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை ஓரளவு வென்றாலும் மனித நடைமுறை வாழ்க்கையில் அமைதி; அன்பு இல்லாமல் ஏக்கம்; தேக்கம்.

கவனம் மகளே ! அமைதியும், அன்புடனுமே நீ வாழ் வேண்டும்.
அமைதியும், அன்பும் தழைக்க, செழிக்க விரும்பும்

தந்தை

நபிதாஸ்

20 comments:

  1. தந்தையின் சிறந்த அறிவுரை !

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. மணிமொழிக்கு எழுதிய நல்லுபதேசக் கடிதம் படித்து மனம் கலங்கிப் போனேன்.

    காலசூழலுக்கு ஏற்ற கடிதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கவர்ந்த கருத்துக்கள் கண்டு காலச் சூழலுக்கு ஏற்ற கடிதம் என கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  3. பாரும் புகழ்ந்திடும் பண்டிதர் எங்களின்
    நேரு எழுதிய நீண்ட மடலாம்
    ம்களுக் கெழுதிய மாண்புறு அஞ்சல்
    புகழுக் குரியது போல்

    ReplyDelete
    Replies
    1. உள்ளதை நானும் ஒருங்கிட்டு தந்ததில்
      அள்ளிப் பருகி அழகிட்டாய் - துள்ளி
      எழுதிடத் தூண்டியநீர் எங்கனம் விட்டாய்
      அழகியது உந்தன் அகம்.

      Delete
  4. தங்கள் மடலின் கருத்து ...
    கடல் போன்றது ..
    இன்னும் பல மடலை எழுத வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அறிஞர்களின் வார்த்தைகள் ஊக்கமளிப்பது.
      சந்தர்பங்கள் தூண்டிட உள்ளம் மீட்டிடுமே.
      கருத்துக்களை மின்னச் செய்த தங்கள் எழுத்துக்கள் உன்னதமானது.

      Delete
  5. மணிமொழி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இஸ்லாமிய வார இதழாகும்.

    ReplyDelete
    Replies
    1. மௌலவி கலிலுர் ரஹ்மான் பாகவி.
      இவரை மணிமொழி மௌலானா என்றும் அழைப்பர். இவர் பள்ளப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மலேயா நண்பன் எனும் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார்.

      Delete
    2. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

      Delete
    3. அறிவியல், உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் அதற்கும் ஒரு மொழி தேவை படுகின்றது இக்காலத்தில். மொழி என்றவுடன் பலருக்கும் எழுத்து வடிவம் மட்டும்தான் கண் முன் நிற்கும். மொழி எழுத்தால் மட்டும் உருவானது அல்ல. மாறாக, அது பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்பொருள்.

      Delete
    4. உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பேசுகின்றன. அவை வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு வகையில் பரிமாறிக் கொள்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மூடமாக இருக்கலாம். ஆனால், பரிமாறிக் கொள்ளப்படுகின்ற மொழியைப் புரிந்து கொள்பவர்களுக்கும் உணர்ந்து கொள்பவர்களுக்கும் அது அதிசயம்தான்.

      Delete
    5. அன்று பிரியா வீட்டிற்கு வந்திருந்தாள். ஏழு மாதக் குழந்தை அவள். என் கணவரின் அக்காள் மகள். அவள் வருகையால் வீடே மகிழ்ச்சியில் நிரப்பியிருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் அவளின் சேட்டைகளையும் அவளின் குரலையும் கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். என்னையும் உட்பட. அடிக்கடி ஏதாவது ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருப்பாள். அவள் முட்டியிட்டு நகரும் போது ஒரு விதமான ஒலியையும் விளையாடும் போது மற்றொரு வேறுபட்ட ஒலியையும் எழுப்புவாள். அந்த ஒலியும் அவள் செய்து கொண்டிருக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த ஒலிகளின் மூலம் நான் அறிந்து கொள்ள கூடிய எந்தவொரு அர்த்தமும் அதில் ஒட்டிருக்காது. இருந்த போதும், அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்: ஏதோ ஒன்றைச் செய்வதை விரும்புகிறாள் என்பது மட்டும் எங்களுக்குப் புலப்படும். இன்னும் சிறிது நேரம் கழிந்த பின், அவள் அழும் சத்தம் கேட்கும். உடனே என் மாமியார் அவளுக்குப் பசி என்று அறிந்து கொள்வார். பாலைக் கலக்கிக் கொடுத்த பிறகு அழுகை நின்று விடும். மீண்டும் விளையாட ஆரம்பித்து விடுவாள் பலவிதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டே. அவள் பசிக்காகதான் அழுகிறாள் என்பதையும் பசிக்கு மொழி அழுகை என்பதையும் இருவரும் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர். தங்களை அறியாமலே ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

      Delete
    6. வார்த்தைகள் பேசப்படாமலே வெறும் அசைவுகளை மட்டுமே இருவரும் காட்டிக்கொண்டனர். இது போன்ற மொழி பண்டமாற்றத்தைத்தான் ‘உடலசைவு மொழி’ (body language) என்கிறது மொழியியல் துறை. உடல் உறுப்புகள் (கண்,காது, மூக்கு வாய், கால், கை, உதடு …) மற்றும் உடல் அசைவுகளைப் பயன்படுத்தி வெளிக்கொணரப்படும் தகவல்கள்தான் உடலசைவு மொழி. உடலசைவு மொழிக்கும் (Body language) அசைவு மொழிக்கும் (sign language) நிறைய வேறுபாடுகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், அசைவு மொழி வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டதொன்று. அதாவது காது கேளாதவர் மற்றும் வாய் பேசாதவர்கள் பயன்படுத்து மொழி. கை மற்றும் விரல்கள் மற்றும் வாய் அசைவின் மூலம் பேசிக் கொள்வதாகும். அசைவு மொழி ஒருவருக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

      Delete
    7. ஆனால், உடல் அசைவு மொழி அப்படியல்ல. அது வரையறுக்கப்படுதில்லை. இதற்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகம் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளும் பக்குவம் இருப்பின், இதன்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் சில பொது சிந்தனைகள் தகவல்கள் இதனை புரிந்து கொள்ள தேவைப்படுகிறது. உடலசைவு மொழியின் வழி பரிமாறப்படும் தகவல்கள் புரியாமல் போனால் கருத்து வேறுபாடுகள் நிலவ வாய்ப்புகளுண்டு. உடல் அசைவு மொழி அவரவர் குடும்ப பின்னனி, கலாசாரம், பண்பாடு, மதம்,சூழல், இடம் உறவு போன்றவறைச் சார்ந்தவையாகும்.

      Delete
    8. ஒரு நாள் வியாபார நோக்கத்திற்காக ஒரு அமெரிக்கரும் ஒரு ஜப்பானியரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். வியாபாரம் பேசிய பிறகு இருவரும் விடை பெறும் நேரம் வந்தது. விடைபெற்று கொள்கிறேன் என்பதற்கு அடையாளமாக அந்த ஜப்பானியர் முதுகை வளைத்து தலையைக் குனிந்தார். அமெரிக்கர் அப்படியே நின்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். இதை உணர்ந்த அந்த ஜப்பானியர், அமெரிக்கர் தன்னை மதிக்கவில்லையே என கவலைப்பட்டார். தலை நிமிர்ந்த பிறகு, அமெரிக்கர் ஜப்பானியரிடம் கை கொடுத்துக் குலுக்கினார். ஜப்பானியர் கொடுத்துக் மிக மென்மையாக கையைக் கொடுத்து குலுக்கினார். இதனால் அமெரிக்கரின் மனம் வருத்தமடைந்தது. இருவரும் மனம் குறைபாடோடு விடைப்பெற்றுக் கொண்டனர்.

      Delete
    9. ஜப்பானியருக்கு தலை குனிந்து விடைபெறுவது மிக மரியாதைக்குரிய செயலாகும். அது அவர்களின் பண்பாடும் கூட. அமெரிக்கர்களுக்கு அழுத்தி கை கொடுத்து குலுக்குவது மிகவும் நம்பிகையான செயல். மேலும் அவர்களிடம் நாம் பேசும் போதும் கூட அவர்களின் கண்களை பார்க்க வேண்டும் என விரும்புவார்கள். இப்படி வெவ்வேறான கலாச்சார பின்னணி கொண்டவர்கள் சந்திக்கும் நபரின் பின்னனியை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது. ஒருவர் கோபமாக இருக்கிறார் என்பதை அவரின் முகபாவனையிலிருந்ததே படித்து விடலாம். அவரின் சோகத்தையும் புரிந்து கொள்ளலாம். உணர்ச்சியை முகம் காட்டி விடும். அது போலதான் மற்ற உடல் உறுப்புகளிலும் மொழி வாழ்ந்து கொண்டிருகிறது.

      Delete

    10. ஆக, மொழியில் உன்னதம் என்றெல்லாம் ஒன்றும் இருப்பதாய் படவில்லை. அது மனித நாகரீகத்தின் ஒரு குறியீடு. அதன் சக்தி முழுமையாக வெளிபட சில பயிற்சிகள் தேவைப்படுகின்றன. எழுத்தை மட்டும் கொண்டு வாசித்து புரிந்து கொள்ளுதல் அவசியத்தைப் போல் ஒருவரின் உடலசைவுகளைப் படிக்கவும் ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. காரணம் மொழி சொல்லில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை. அது ஆய்வுக்குரியதொன்று; தேடல் மிகுந்தவையாகும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers