.

Pages

Wednesday, June 4, 2014

[ 5 ] மகவே கேள் ! சமுதாய சேவை

சமுதாய சேவை :
இளமை காலத்தில் கிடைக்கும் அறிய வாய்ப்பு ! அதை நீ பயன்படுத்தி
கொண்டால் உனது எதிர் காலத்தில் நல்ல பயனுள்ள பாடமாக அமையும். சமுதாயம் என்பது அண்டை வீட்டார், உறவினர் எனலாம் அவர்களுக்கு உதவி செய்வது என்பதே ! நான் சமுதாய சேவையாக கருத்துகிறேன்..

நான் சிறுவனாக இருந்த காலத்தில் சில மூதாட்டிகள் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வர சொல்வர். மறுப்பேதும் சொல்லாது வங்கி வருவேன். அவர்கள் உதவி கிடைத்த திருப்தியில் நல்வாழ்த்து கூறுவார் . அது மனநிறைவை தரும். நமது வயது வரம்பை பொறுத்து உதவிகளின் தன்மை மாறும்.

மின்சார கட்டணம் கட்டி வருவது.
மின் இணைப்பு பற்றி புகார் செய்து வருவது.
நகராட்சி...ஊராட்சி நிர்வாகத்தில் ..வீட்டு வரி செலுத்துவது.
இரயில் ..விரைவு பேருந்துகளுக்கு முன் பதிவு செய்வது ..

என்று எழுத்து பூர்வமான அலுவலக வேலைகள் செய்ய கோறுவர். இது உனக்கு கிடைக்கும் அறிய வாய்ப்பாய்கருதி சேவை செய். தலை சாய்த்து செய்யும் சேவை ..உனக்கு அரும் மருந்தாய் அமையும் எதிர் காலத்தில் நீ பட்டதாரியாய் ஆனா பின்பு நீ சுய தொழில் செய்வதாக இருந்தாலும் சரி ..அலுவலக அதிகாரியாய் வளம் வருவதாக இருந்தாலும் சரி ..துரிதமாய் செயல் படஏதுவாக அமையும்  .

"முகமது நபி அவர்கள் சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்கு செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?.. என வினவி ..செல்வார்களாம். எனவே
அவர்களை அக்கம் பக்கத்தினர்  "அல்-அமீன் (நபிக்கைக்கு உரியவர் ) என்று
அன்பாய் அழைப்பார்களாம்

உன்னை பற்றி அண்டை வீட்டார் .நல்லவர் சொல்லாதவரை
நீ நல்லவனாக இருக்க முடியாது. அண்டை வீட்டார் என்ற அளவுகோல் யாது என நபிகளாரின் தோழர் வினவ .. பதிநான்காவது வீடு வரை உனது அண்டை வீடாகும்.

அண்டை வீட்டார் மரணித்தால் ..உணவிற்கு ஏற்பாடு செய்வது மிக நன்மையான ஒன்று என நபிகளார் உபதேசித்து உள்ளார்கள். அண்டை வீட்டார் .எந்த மதமாக இருப்பினும் சரியே .. உனது உறவு நலமாக இருக்க வேண்டும் .மகவே கேள் ...உன் வாழ்வு நலமாகட்டும்
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

8 comments:

  1. சேவை குறித்த தகவல் அருமை !

    அடுத்த அறிவுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆவலுக்கு நன்றி ..
      இலவல்களிடம் இவ்வறிவுரை போய் சேரவேண்டும்

      Delete
  2. //"முகமது நபி(ஸல்) அவர்கள்
    சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்கு செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?..
    என வினவிச் ..செல்வார்களாம். //

    நன்றி,




    "முகமது நபி(ஸல்) அவர்கள்
    சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்குச் செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?.. என வினவி ..செல்வார்களாம். //

    நன்றி,
    நல்லபதிவு.

























    ReplyDelete
    Replies
    1. நபிகளாரின் அறிவுரையில் ..
      அண்டை வீட்டாரிடம் கனிவாய் நடக்க வேண்டும்
      என்பதை பலமுறை குறிப்பிட்டு உள்ளார்கள்
      அண்டை வீட்டுகாரர் பசித்திருக்க தான் மட்டும்
      வயிராற உணவு உண்பவன் என்னை சார்ந்தவன் அல்லன் என பகர்ந்துள்ளார்கள்

      Delete
  3. நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரீதியிலான சமூக சேவை செய்தாலே அனைவரும் சுபிட்சமாக வாழலாம்.

    சமூக சேவையை நினைவூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..அதிரை மெய்சா ..அவர்களே

      Delete
  4. அதிரைத் தமிழூற்றே! அந்தக் காலம் போல வருமா இந்தக் காலம்; இவை எல்லாம் இந்தக் காலம் செய்து வைத்தக் இயல்பான கோலம்!

    “பெரியோர்க்கு மரியாதை செலுத்தாதவன்; சிறியோர்க்கு அன்பு பாராட்டாதவன் என் சமூகத்தைச் சார்ந்தவனில்லை” என்ற நபிகளார்(ஸல்)அவர்களின் நன்மொழியை நாம் கேட்ட அளவுக்கு இற்றைப் பொழுதின் இளைஞர்கள் செவியுற்றார்களா? அல்லது அப்படிப் பட்ட நற்செய்திக் கூட்டங்களுக்காவது- அதனை அண்மித்தாவாது சென்றார்களா? கொடி பிடிக்கவும் , கொலை செய்யவும் மட்டும் தான் மூளைச் சலவை செய்யப்பட்டு விட்ட இளைஞ்ர்களை எண்ணி எண்ணி வருந்துகின்றோம். தங்களின் ஆக்கபூர்வமான ஆக்கத்திற்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
  5. நல்ல கருத்தை பதிந்தீர்கள்
    கவியன்பரே

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers