kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, June 5, 2014
அரசியலில் சீர்திருத்தம் வேண்டும் !
அதிசயம் இங்கே அதிசயம் - ஆமாம்
.....அனைவரும் இப்போ அறியணும்
அதிபதி ஆக்கும் அரசியல் - அதனில்
.....அறியனும் போக்கில் பிசகுகள்
பலமுனைப் போட்டிகள் தேர்தலில் - தோற்றப்
.....பார்வையில் நல்நேர்மை போலதில்
அலங்கோலம் ஆகி இருக்கிறதே - அவசியம்
.....அறிவுடன் ஆழமாய் பார்க்கணுமே
ஜனநாய கம்என்றால் ஆளுவோர் - அவரில்
.....சரிபாதி மேலே கொண்டோர்
இனஒத்த மூன்றின் ஒருபகுதி - மானிடர்
.....மத்தியில் ஆளுதலா நீதி ?
மயக்கிடும் இந்தஜன நாயகம் - வழிதனில்
.....மதிவிழித்தே காக்கனும் தாயகம்
இயக்கும் இரண்டே அமைப்புகள் - இங்கே
.....இருந்திட வேண்டுமே தேர்தலில்
அமைப்பின் இரண்டிலும் சாதிமதம் - சமமாய்
.....அணியாக நிர்பதே நீதியாகும்
சமைந்தே அவரினில் போட்டிகள் - விகிதம்
.....சார்ந்தே நிறுத்தனும் தேர்தலில்
அவரவர் தேவை உரிமைகள் - அங்கே
.....அடைவதில் இன்ப உணர்வினில்
விவரங்கள் ஆழமாய் சிந்திப்பீர் - விரைவாய்
.....விதைத்தே செழித்திட்டே வாழ்ந்திடுவீர்
வல்லரசு என்பதும் வந்திடும் - மக்கள்
.....வாழ்வினில் சொர்க்கமும் நின்றிடும்
நல்லதே வேண்டுவோர் நாடனும் - நன்கு
.....நம்மில் ஒருமித்தே பேணனும்
அமைதியில் இந்தியா நின்றிடும் - அதன்
.....அழகுநல் திட்டங்கள் வென்றிடும்
இமைகள் விழித்திட்டே நோக்கிடுமே ! - இனி
.....இந்தியா இவ்வுலகை ஆண்டிடுமே
அதனால் திருத்தங்கள் வேண்டும் - அனைத்திலும்
.....அவசியம் மாற்றங்கள் கொண்டும்
பதவிகள் ஊர்பகுதி தோறும் - சேவையாளர்
.....பகுத்தே நிறுத்திட பாரும்
தெருச்சேவைச் செய்தோரின் தேர்வில் - நல்ல
.....திறமையாளர் ஊராள சேர்ப்பீர்
அருமையாய் அவ்விதம் ஆகியே - வல்ல
.....அவரிலே சட்டமன்றம் போகியே
நபிதாஸ் (தொடரும்)
.....அனைவரும் இப்போ அறியணும்
அதிபதி ஆக்கும் அரசியல் - அதனில்
.....அறியனும் போக்கில் பிசகுகள்
பலமுனைப் போட்டிகள் தேர்தலில் - தோற்றப்
.....பார்வையில் நல்நேர்மை போலதில்
அலங்கோலம் ஆகி இருக்கிறதே - அவசியம்
.....அறிவுடன் ஆழமாய் பார்க்கணுமே
ஜனநாய கம்என்றால் ஆளுவோர் - அவரில்
.....சரிபாதி மேலே கொண்டோர்
இனஒத்த மூன்றின் ஒருபகுதி - மானிடர்
.....மத்தியில் ஆளுதலா நீதி ?
மயக்கிடும் இந்தஜன நாயகம் - வழிதனில்
.....மதிவிழித்தே காக்கனும் தாயகம்
இயக்கும் இரண்டே அமைப்புகள் - இங்கே
.....இருந்திட வேண்டுமே தேர்தலில்
அமைப்பின் இரண்டிலும் சாதிமதம் - சமமாய்
.....அணியாக நிர்பதே நீதியாகும்
சமைந்தே அவரினில் போட்டிகள் - விகிதம்
.....சார்ந்தே நிறுத்தனும் தேர்தலில்
அவரவர் தேவை உரிமைகள் - அங்கே
.....அடைவதில் இன்ப உணர்வினில்
விவரங்கள் ஆழமாய் சிந்திப்பீர் - விரைவாய்
.....விதைத்தே செழித்திட்டே வாழ்ந்திடுவீர்
வல்லரசு என்பதும் வந்திடும் - மக்கள்
.....வாழ்வினில் சொர்க்கமும் நின்றிடும்
நல்லதே வேண்டுவோர் நாடனும் - நன்கு
.....நம்மில் ஒருமித்தே பேணனும்
அமைதியில் இந்தியா நின்றிடும் - அதன்
.....அழகுநல் திட்டங்கள் வென்றிடும்
இமைகள் விழித்திட்டே நோக்கிடுமே ! - இனி
.....இந்தியா இவ்வுலகை ஆண்டிடுமே
அதனால் திருத்தங்கள் வேண்டும் - அனைத்திலும்
.....அவசியம் மாற்றங்கள் கொண்டும்
பதவிகள் ஊர்பகுதி தோறும் - சேவையாளர்
.....பகுத்தே நிறுத்திட பாரும்
தெருச்சேவைச் செய்தோரின் தேர்வில் - நல்ல
.....திறமையாளர் ஊராள சேர்ப்பீர்
அருமையாய் அவ்விதம் ஆகியே - வல்ல
.....அவரிலே சட்டமன்றம் போகியே
நபிதாஸ் (தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
சிந்தனை தரும் வரிகள் !
ReplyDeleteகவிதையின் கரு அருமை !
சிந்தனை எண்ணத்தில் நல்விதை - அது
Delete.....சிறப்பான வாழ்வின் நல்துணை
சிந்தையில் பட்டதைத் தந்தேன் - உன்னில்
.....சிறிதே மனதிலே கொள்ளேன்.
இந்தியா இவ்வுலகை ஆளும் காலம் வரட்டும்...
ReplyDeleteசிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்...
இந்தியன் இவ்வுலகை ஆளுவான் - முறையாய்
Delete.....இவனில் திருத்தங்கள் ஏறினால்
விந்தையல்லா ஒற்றுமைக் கொண்டே - விரைவில்
.....விதிகளும் மாறிடும் நன்றே.
அனைத்தும் நன்மைகளாய் நடக்கட்டும்
ReplyDeleteநாட்டு மக்கள் இன்புற்று இருக்கட்டும்
நம்பிக்கை கொள்வோம்.நற்பயன் பெறுவோம்.
நல்ல மனதில் தோன்றும் - எண்ணம்
Delete.....நன்மைகள் நித்தமே கொண்டும்
வல்ல இறைவனின் நாட்டம் - பலரில்
.....வந்திடும் வேண்டிடும் திட்டம்
மெல்ல உனதின் கருத்தாய் - இங்கு
.....மிதந்தும் வருகிறதே சொத்தாய்
சொல்ல எனக்கும் மகிழ்வே - எங்கும்
.....சுகமே நிலைக்க விரும்பிடுதே .
சிறப்பான கவிதை .
ReplyDeleteவாழ்த்துக்கள்
சிலவார்த்தை சிந்தினாய் வாழ்த்தி - நறுக்காய்
Delete.....சிக்கனம் கற்பித்தாய் மூழ்ந்தி
பலவரியில் தந்தாலும் ஆகாதே - நிறைவு
.....பட்டென்று சொல்வதில் போலே.
அரசியல் என்னும் கழிநீர் - இதனுள்
ReplyDelete......ஆழ்ந்தால் வழியும் ஏழையின் விழிநீர்
விரசமே மேடைகளின் பேச்சு - என்றே
....விளக்கமும் இற்றைப் பொழுதினில் ஆச்சு!
பாவனையும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள் ஞானியாரே!
அதனாலே மாற்றம் நிகழ்ந்திட - என்னுள்
Delete.......ஆழமாய் சிந்தித்தேன் மாசுகள் நீங்கிட
இதமான ஆட்ச்சிமுறை வேண்டும் - எனவே
.......எழுதுகிறேன் இங்கே தொடராகக் கொண்டு.