kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, June 30, 2014
[ 7 ] மகவே கேள் : நேரம் செலவிடும் முறை !
மகவே கேள் :
நேரம் செலவிடும் முறை !
நீ ..பள்ளி வாழ்வை முடித்து கல்லூரி வாழ்வை துவங்கும் நீ ஒவ்வொரு நொடி பொழுதையும் கவனமாய் செலவிட கற்றுக் கொள் அதுவே உனது குறிக்கோள் நிறைவேற செய்யும் செயலாய் அமையும்.
கல்லூரி காலம் என்றால் கலாட்டா காலம் ..வசந்தம் பொங்கும் காலம் என்று கடந்து வந்த காலத்தை கூறும் எத்தனையோ பேர் வறுமையில் வாடும் நபராக பார்க்கிறேன் .கல்லூரி காலத்தைப்பற்றி கூறும் அவரின் முகத்தில் புன்னகை பூக்கும் .நிகழ காலத்திற்கு திரும்பும் அவர் சோகம் கொள்வார் .எனவே உனது நேரத்தை வீணடிக்கும் பொழுது போக்கு விசயங்களை தூர எறிந்து விடு .
உன் பருவம் அறிந்து செயல் படு நான்கு ஆண்டு தவம் நாற்பது ஆண்டுகாலம் பலன் தரும் என்பதை மறக்காதே .வழி காட்டும் ஒவ்வொரு ஆசான் இடமும் நீயே சென்று ஆலோசனை கேள் நேரம் இன்றி அமையாதது என்பதை நன்றாய் புரிந்து கொள்.
நேரம் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டதை போல பிறந்த குழந்தைக்கு உறக்கம் முக்கியம் உறக்கத்தின் மூலம் நேரத்தை கழிக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை ..ஆனால் வாலிப பருவத்தை அடைந்த வாலிபன் உறக்கத்தை குறைத்து கடின உழைப்பில் ஈடு பாடு உள்ளவனாக இருத்தல் வேண்டும். உன் பருவத்தில் கிடைக்கும் நேரம் பொக்கிசமான நேரம்
விரயம் செய்து விடாதே !
மீண்டும் கூறுகிறேன்...
உனது நேரம் பொன் போன்றது. விரயம் செய்து விடாதே ..
போன் ...விரயத்தின் வழி காட்டி ஊடகம் ..அப்படியே விழுங்கும் ராட்சஸமிருகம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டும் சினிமா வீண்
நேரம் ஒதுக்கி வீண் அரட்டை அடிக்கும் கும்பலில் சிக்கி வீணாகி விடாதே ..
கோடி கோடி தொண்டனில் ஒருவனாய் கொடிபிடித்து அலைந்து விடாதே
குறிக்கோள் கொள் வெல்வாய் உன் வாழ்வை எல்லாம் முடிந்த பின் நேரத்தை குறை கூறாதே நேரம் சரியில்லை என்பவன் .பின்பம் இல்லா ஒன்றை காட்டி குற்றம் சாட்டுவதை போன்றது ..இலக்கை அடைய நேரம் வகுத்து வாழ்வை வகு ..வெற்றி நிச்சயம்.

அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
அறிவுரை அருமை !
ReplyDeleteசிறந்த கருத்துகளை தாங்கி வருகிறது தொடர்...
நன்றி அன்பு தம்பி நிஜாம் அவர்களே
Deleteஅன்பாகவும், அழகாகவும் கூறும் தங்களின் அறிவுரையைக் கேட்கும் பேறினைப் பெற வேண்டும் நம் மக்கள்!
ReplyDeleteதிட்டமிடும் வாழ்க்கையிற்றான் என்றென்றும்
....திடமான வெற்றிகளைக் குவிக்கின்றோம்
வட்டமிடும் கவலைகளும் தீர்வதற்கு
....வரைகின்றத் திட்டங்கள் வழிகாட்டும்!
கனிவான கருத்துக்களை
Deleteகவியால் எடுத்துரைத்த
கவியன்பர் வாழியவே
// நான்கு ஆண்டு தவம் நாற்பது ஆண்டுகாலம் பலன் தரும்//
ReplyDelete//கோடி கோடி தொண்டனில் ஒருவனாய் கொடிபிடித்து அலைந்து விடாதே//
நான்கின் ஆண்டு தவம்
.....நாற்பது ஆண்டு பலன்
தேன்னின் இன்பம் போல
.....தீர்க்கும் துன்பம் அகல
கோடிக் கோடி தொண்டன்
.....கொடியைப் பிடிக்கும் ஒருவன்
தேடி ஓடி அலைந்தே
.....தெருவைச் சுற்றி சிதைந்தே
வாடிப் போக வேண்டாம்
.....வாலிபம் சிறக்க வேண்டி
நாடித் துடிப்பைப் பிடித்தே
.....நன்றே அறிவை கொடுத்தே
மகனே கேள் அறிவு
.....மதிக்கும் உங்கள் தெளிவு
சுகமே வாழ்வு என்றும்
.....சுவைக்க படிக்க நன்கே.
அறிஞர் நபிதாசின்
Deleteஅருமையான கவிநடையில்
கட்டுரையின் கருவை
கண் முன்னே காண்கின்ற போது
இன்னும் பல கருத்துக்களை
பதிகின்ற ஆவல் மேலோங்குகிறது
நரம் செலவிடுதலைப்பற்றி மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
ReplyDeleteநேரம் செலவிடுதலைப்பற்றி மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
ReplyDeleteஒவ்வொரு பதிவிற்கும்
Deleteதவறாது வருகை தரும் அன்பு சகோ அதிரை மெய்சா
அவர்களுக்கு நன்றிகள் பல
அமுத மொழிகளாய் கட்டடுறை அமைந்துள்ளது
ReplyDeleteவளம் சேர்க்கும் வார்த்தைகள் ...
Deleteபின்னூட்டம் மூலம் ஆர்வமளிக்கும்
அன்பு நண்பா வாழ்க
Amazing words for all
ReplyDeleteஅமீரகம் அய்மான் சங்க தலைவர்
Deleteஅன்பு சொந்தம் சாகுல் ஹமீது அவர்களின்
பின்னூட்டம் என் பதிவிற்கு வலு சேர்கிறது