.

Pages

Sunday, July 20, 2014

போலிகள் !? [ தரவித்தியாசங்கள் ]

அறிவுத்தேன் II
ஐந்தாவதாக சில பெரிய நிறுவனங்கள் தனது உற்பத்திசெயப்படும் பொருள்களுக்கு உதிரிப்பொருள்கள் அதே தரத்தில் தருவதில்லை. இதனை உபயோகிப்பாளர்கள் அப்பொருளின் பயன்பாட்டில் நன்கு உணர்வார்கள். ஒருவகையில் அடிக்கடி அவர்களின் முழுமை செய்யப்பட பொருளையே வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோர் வங்கும்படி செய்தலாகும். இந்த வகையில் சில நிறுவனங்கள் நுகர்வோர்கள் அப்பொருளை இடையிடையே சீர் செய்து பயன்பாட்டு தரத்தை நீண்டகாலம் அனுபவிக்க விடுவதில்லை. வியாபார இலாப நோக்கமே மையப்படுத்தப்படுகிறது.

ஆறாவதாக சில பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் எல்லா நாட்டிலும் இலகுவாக உற்பத்திப் பொருள்கள்  உடன் கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டாலும், அவர்களுக்கு இலாபம் அதிகப்படுத்தும் நோக்கிலும் வேறு சில நாட்டில் அவர்கள் அப்பொருளை உற்பத்தி செய்வார்கள். அவைகள் யாவும் ஒத்த தரம் உடையதாக இருப்பதில் சமம் இல்லை. அதிக தரம் உள்ளது எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. ஒரே பொருளின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி தரம் வேறுபாட்டால் உலக நுகர்வோர்களும் ஒருவகையில் பிரிக்கப்படுகிறார்கள். இதிலும் வியாபார இலாப நோக்கமே மையப்படுத்தப்படுகிறது.

ஒரு நிறுவனம் ஒருப் பொருளை திறமையாகவும், சிறந்ததாகவும், தன் நாட்டின் சட்டத் திட்டத்திற்கு உட்பட்டும், அதன் செயல்பாடு சோதனைகள் பல செய்தும் மனித பயன்பாட்டுக்கு குந்தகமில்லாமல் தரமானதாக உற்பத்தி செய்து, திருப்த்தியானவுடன் அதனைச் சந்தையில் விற்பனைச் செய்ய வரும். இது முறையான நல்ல வழிமுறையாகும்.

தரமானப் பொருள் என்பதால் அதன் மூலப்பொருளும், அது செய்யும் விதங்களும் உயர்வானதாக இருக்கும். அதனால் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். அந்தப் பொருளை வாங்கி உபயோகப்படுத்துபவர்கள் அதன் நம்பகத்தன்மை, அது உழைக்கும் விதம் அதனைப் பொருத்து அதன் விலை அதிகமாக இருந்தாலும் அதனையே விரும்பி வாங்குவார்கள்.

இவ்வாறு விற்கப்படும் பொருள் மிகப் பிரபலம் அடைந்து அதிகமாக விற்பனையானால், சில குறுக்குவழியில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் அந்த அசல் செய்து விற்பவர் பெயரிலேயும், அதனின் சந்தை அடையாளத்திலும் ( பிரான்ட் )  தரமற்ற நிலையில் அதே போன்ற உருவத்தில் ஒத்த நிலையாக போலிகளை உற்பத்தி செய்து இவர்கள் விற்பார்கள். இது முற்றிலும் தவறானது. தனது பெயரிலோ, தனது சந்தை அடையாளத்திலோ (பிராண்ட்) உற்பத்தி செய்து பொருள்கள் விற்பதில் தவறு இல்லை அது போலியாகாது. அசல் பொருள் செய்து விற்பவர்கள் இந்த போலிகள் செய்து விற்பவர்களைக் அடிக்கடிக் கண்டு பிடித்து தண்டனை பெற்றுத் தருவதும் உண்டு.

இந்த போலிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ,மூலப் பொருள்களின் தரத்தைக் குறைத்தும், அதன் உற்பத்தி முறையில் செலவுகள் குறைவான முறையிலும் அல்லது சில பொருள்களில் மூலப் பொருளையே மாற்றி அந்த அசல் பொருள் போலவே தோற்றத்திலும், அசல் உற்பத்தியாளர் பெயரிலும், பிராண்டிலும் அதனைச் செய்து முறையற்ற வழியில் விற்பனைக்கு விடுவதால், அது விலையில் மிகவும் குறைவானதாகவும், வாங்கி விற்பவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும் வகையிலும் இருக்கும். சிலர் அதனை அசல் என்று வாங்குபவர்கள் கவனத்தை ஈர்க்க அசலின் விலைக்கு சிறிது குறைவாக விலையிட்டும் விற்றுவிடுவார்கள்.

போலிகள் அல்லது தரமற்றவைகள் உபயோகத்தில் நீண்டகாலம் மட்டுமல்லாது செயல்பாடிலும் திருப்பதி இல்லாமல் இருக்கும். சில சமயம் உணவுப் பொருளானால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.

சில நடுத்தர மக்கள் தெரிந்தும் உணவுப் பொருள்களையும், பயன்பாட்டுப் பொருள்களையும் விலைக் குறைவானதாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
(தொடரும்)  
நபிதாஸ்

10 comments:

  1. Replies
    1. உள்ளும் புறமும் தங்கம். அது தேயத்தேய மின்னும். தங்க முலம் அவ்வாறல்ல. ஒருநாள் சாயம் வெளுத்துவிடும்தான்.

      நன்றி. தங்கம் பழனியின் வருகைக்கும் நன்றி.

      Delete
  2. அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர்...

    சமூகத்தில் போலிகள் என்றும் நிலைத்ததில்லை !

    ReplyDelete
    Replies
    1. அமாம். போலிகள் அழிந்துவிடும். சத்தியமே நிலைக்கும்.

      நன்றி.

      Delete
  3. போலிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய பதிவு அவசியமானதே.! தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக மிக வருந்த வேண்டிய விடயம் தான். போலிகள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது.

      நன்றி.

      Delete
    2. அதிக லாபம் ஈட்ட நினைக்கும்
      கயவர்களால் போலிகள் உருவாகிறது .
      அரசாங்கத்தின் மென்மையான போக்கும்
      ஒரு காரணம் .
      பாமர மக்களின் மலிவான விலை எதிர்பார்ப்பும்
      ஒரு காரணம் ...நல்ல பதிவு வாழ்த்துக்கள்

      Delete
    3. கடைசி பத்தில் 7 நாள் பள்ளியில் தங்கும் பாக்கியம் பெற்றேன். அதனால் உடன் மறுமொழி இடமுடியவில்லை. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ரம்ஜான் வாழ்த்துக்கள்.

      Delete
  4. கவிதையும் கட்டுரையும்
    கவின்மிகுத் தமிழால்
    புவியோர்க்குப் படைக்கும்
    புலமை வியக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் வியப்பு
      கவனம் கூட்டுகிறது
      குவித்திடும் வார்த்தையில்
      குதுகலம் கொள்கிறது.

      இரம்ஜான் வாழ்த்துக்கள்
      இதயத்தால் வார்க்கிறேன்
      அரங்கில் உந்தன்
      ஆழுமை வேண்டுகிறேன்.



      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers