.

Pages

Thursday, July 31, 2014

புத்தியைத் தீட்டு !

புடமிட்டத் தங்கமாகப் புத்தியைத் தீட்ட
தடம்வகுத்தே தந்தாரே தங்கனபி இங்கே
மடமைமிகு மாந்தரும் மான்புதனை நீக்கி
கடமையென உண்ணாமல் காட்டுகிறார் வாழ்வில்
நடுவினிலே நாயகன் நாட்டமே நிற்க
விடுதலிலே நற்பிறப்பு வீசிடுமாம், நோக்கம்
விடுபட்ட வீணர்கள் வேற்றுமையில் நின்றே
கடும்தவமாய் வேசங்கள் காண்பதே மிச்சம்

படைத்தவனும் ஆசையினைப் பாங்காகக் கூறி
நடைமுறைகள் பற்பலவை நாயகர் மூலம்
உடையவனே தந்தாலும் உற்றுநோக்க வில்லை
விடைகளிலே நீத வேற்றுமைகள் கண்டார்
தடைப்பட்டே ஒற்றுமை தங்காமல் வேறாய்
குடைகுடையாய் ஆகினக் கோலங்கள் பாராய்
எடையெடையாய் புத்தகங்கள் எத்தனை வந்தும்
விடைதனிலே சாந்திநிலை விட்டகன்றால் தோல்வியே.

நபிதாஸ் 


10 comments:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அறிஞரின் இரசனை
      ஆர்வத்தை மீட்டுது.

      நன்றிகள் பல.

      Delete
  2. கற்ப்போம் - கற்பிப்போம் !

    ReplyDelete
    Replies
    1. தான் பெற்ற இன்பம்
      தரணியில் யாவரும் பெறுவதும் இன்பம்.

      Delete
  3. best word

    எடையெடையாய் புத்தகங்கள் எத்தனை வந்தும்
    விடைதனிலே சாந்திநிலை விட்டகன்றால் தோல்வியே.

    ReplyDelete
    Replies
    1. எல்லா அறிவும் இனிக்கத்தான் செய்யும்.
      எந்த அறிவு தன் மனத்தையும் பிறர் மனதையும் அமைத்தியில் நிலைக்கச் செய்கிறதோ அதுவேதான் அறிவு.

      பாடலின் கருவைச் சுவைத்த ஜனாப் சாதிக் பாட்சா தங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    புத்தியைத் தீட்டு.‎
    அருமையான படைப்பாக்கம். படிக்க வெகு கூர்மை, படித்து அர்த்தம் புரிய ‎என் புத்திக்கு கூர்மை போதாது.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நோன்பிற்கு தன்னையே கூலியாகத் தருகிறேன் என்று இறைவனே கூறுகிறான். அந்தக் கூலியைப்பெறத் தகுதியாக இருக்க வேண்டும் நாம் அனைவரும் என்ற ஆதங்கமே.

      Delete
  5. எத்தனை எண்ணியும்
    ஏமாறும் மாந்தர்கள்
    அத்தனைப் பாடமும்
    அடங்கிடும் புத்தியில்
    புத்தியைத் தீட்டினால்
    புகழினை அடையலாம்
    புன்னகை மலர்ந்திட
    பாரினில் வாழலாம்

    யுக்தியை செய்வதும்
    புத்தியின் வேலையே
    யுகத்தினில் வாழ்ந்திட
    புத்தியும் வேணுமே

    புத்தியைத் தீட்டிடு
    பூமணம் வீசிடு
    பக்தியில் ஆழ்ந்திடு
    படைத்தவன் அருள்பெறு

    ReplyDelete
    Replies
    1. படைத்தவன் அருள் பூரணமாகப் பெறப்
      படைப்பினங்கள் பக்குவம் ஆக வேண்டும்.
      படைத்தவன் அதனால் பல அனுஷ்ட்டான வழிகள்
      படைத்தே தந்துள்ளான். பாவம்
      படப்பினமோ கருவைப் புரிந்து தன்னை அர்ப்பணிக்க வேண்டுமே.
      ஆதனால்
      அதற்கு புத்தியை தீட்ட.வேண்டுகிறேன்.

      நன்றிகள் பல.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers