kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, July 6, 2014
அடிப்படையும்... அல்லாதவையும்...
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் சிறப்பினில் கொண்டும்
பிடிப்புடன் திகழ்ந்திட முதலும்
.....பேற்றினில் உயர்ந்திடத் துணையும்
கம்பியும் மரங்களும் மண்ணும்
.....கற்களும் சிமிட்டியும் நீரும்
நம்பிட இல்லமாய் ஆகும்
.....நயத்தினில் மெச்சிடத் தகுமா ?
திறம்படக் கலைகளும் அமைத்தே
.....தேவைகள் நிறைந்திடச் செய்தே
சிறப்பினில் உயர்வினைப் பெறவே
.....சிலசில வசதிகள் மிகவே
இவ்விதம் சிறப்புகள் சமைத்தே
.....இருப்பிடம் திறம்பட அமைத்தே
அவ்விதம் யாவுமே கொண்டே
.....ஆகிடும் இல்லமும் நன்றே
வாகனம் சக்கரம் பொறியில்
..... வசதியாய் இருக்கையின் நெறியில்
பாகமும் பக்குவம் அமைத்தும்
.....பார்த்திடப் பாரினில் இல்லை !
அழகுடன் வசதிகள் நிறைந்த
.....அமைவினை நாடுவார் சூழ்ந்தே
தழுவிடும் இவைகளே இயற்கை
.....தலைவனும் அவ்விதம் முறையே
அடிப்படை வழிமுறைக் கடமை
.....அதைவிட அதிகமும் தேவை
அடியுடன் அதிகமும் சேர
.....அழகுகள் ஆற்றலும் கூடும்
அண்ணலும் தனிமையில் இணங்கி
.....அவனையே அதிகமாய் வணங்கி
உண்ணலும் உறக்கமும் குறைத்தே
.....உலகினில் அவனருள் நிறைந்தார்
வழக்கினில் வந்திடச் செயலும்
.....வழிகளில் கணக்கிட வேணும்
பழக்கமும் ஆகிடில் இன்னும்
.....பழுத்திடச் செய்யணும் வணக்கம்
எண்ணிட எல்லையும் இல்லை
.....எங்கனம் நினைப்பினில் எல்லை
உண்பதில் கணக்கிட வேண்டும்
.....உன்னிலே வணக்கமில் வேண்டாம்
அடிக்கடி மெருகிடப் பொன்னும்
.....அழகுடன் பளிச்சிட மின்னும்
துடிப்புடன் பற்றிடத் திகழ்வோம்
.....தூயவன் அருளினைப் பெறுவோம்
அடிப்படை வசதியை மட்டும்
.....அனைவரும் நாடலைச் சட்டும்
அடிப்படை அதனுடன் சேர்த்தே
.....அநேகமும் அழகுகள் பார்த்தே
விரும்பிடும் இல்லமும் நாடும்
.....விரைந்திடும் வாகனம் தேடும்
கருத்திதில் படிப்பினைக் கண்டே
.....கவனமும் கொள்ளுதல் நன்றே
அடிப்படை வணக்கமும் வேண்டும்
.....அதனுடன் அதிகமும் வேண்டும்
துடிப்புடன் நிகழ்த்தியும் சென்றார்
.....துயவனின் அருளினைச் சுமந்தார்
அனைத்திலும் அதிகமும் மனதில்
.....அவனையே வணங்குதல் கணக்கில் ?
நினைத்திட வேண்டியே இதனில்
.....நினைவுகள் கொட்டினேன் பதத்தில்
வணங்கிடப் படைத்தான் அவன்சொல்
.....வழியினில் குறைத்திடல் யார்சொல் ?
வணங்கிடும் ரகசியம் அறிந்தால்
.....வாழ்வுகள் வணக்கமாய் தெரியும்
சுருக்கிட நாடுதல் தகுமா ?
.....சுகங்களும் சுருங்கினால் புரியும் !
பெருக்கிட விரும்புதல் கொண்டே
.....பெரியவன் விரும்புவான் கண்டே
அடிப்படைக் கடமையும் ஆற்றி
.....அதனுடன் அதிகமும் போற்றி
பிடிப்புடன் வாழுதல் வேண்டும்
.....பிரியமும் காட்டுவன் அவனும்.
கருவினில் நழுவிடா நின்றே
.....கச்சிதம் கவனமும் கொண்டே
அருளினை அடைவது உண்மை
.....அவனது விருப்பமும் திண்மை
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் நிறைந்திடக் கொண்டும்
படிப்பினை இதனிலே நின்றும்
.....பக்குவம் பெற்றிடல் வேண்டும்.
நபிதாஸ்
அரையடிக்கு விளம் விளம் மா
.....அடுத்ததும் சிறப்பினில் கொண்டும்
பிடிப்புடன் திகழ்ந்திட முதலும்
.....பேற்றினில் உயர்ந்திடத் துணையும்
கம்பியும் மரங்களும் மண்ணும்
.....கற்களும் சிமிட்டியும் நீரும்
நம்பிட இல்லமாய் ஆகும்
.....நயத்தினில் மெச்சிடத் தகுமா ?
திறம்படக் கலைகளும் அமைத்தே
.....தேவைகள் நிறைந்திடச் செய்தே
சிறப்பினில் உயர்வினைப் பெறவே
.....சிலசில வசதிகள் மிகவே
இவ்விதம் சிறப்புகள் சமைத்தே
.....இருப்பிடம் திறம்பட அமைத்தே
அவ்விதம் யாவுமே கொண்டே
.....ஆகிடும் இல்லமும் நன்றே
வாகனம் சக்கரம் பொறியில்
..... வசதியாய் இருக்கையின் நெறியில்
பாகமும் பக்குவம் அமைத்தும்
.....பார்த்திடப் பாரினில் இல்லை !
அழகுடன் வசதிகள் நிறைந்த
.....அமைவினை நாடுவார் சூழ்ந்தே
தழுவிடும் இவைகளே இயற்கை
.....தலைவனும் அவ்விதம் முறையே
அடிப்படை வழிமுறைக் கடமை
.....அதைவிட அதிகமும் தேவை
அடியுடன் அதிகமும் சேர
.....அழகுகள் ஆற்றலும் கூடும்
அண்ணலும் தனிமையில் இணங்கி
.....அவனையே அதிகமாய் வணங்கி
உண்ணலும் உறக்கமும் குறைத்தே
.....உலகினில் அவனருள் நிறைந்தார்
வழக்கினில் வந்திடச் செயலும்
.....வழிகளில் கணக்கிட வேணும்
பழக்கமும் ஆகிடில் இன்னும்
.....பழுத்திடச் செய்யணும் வணக்கம்
எண்ணிட எல்லையும் இல்லை
.....எங்கனம் நினைப்பினில் எல்லை
உண்பதில் கணக்கிட வேண்டும்
.....உன்னிலே வணக்கமில் வேண்டாம்
அடிக்கடி மெருகிடப் பொன்னும்
.....அழகுடன் பளிச்சிட மின்னும்
துடிப்புடன் பற்றிடத் திகழ்வோம்
.....தூயவன் அருளினைப் பெறுவோம்
அடிப்படை வசதியை மட்டும்
.....அனைவரும் நாடலைச் சட்டும்
அடிப்படை அதனுடன் சேர்த்தே
.....அநேகமும் அழகுகள் பார்த்தே
விரும்பிடும் இல்லமும் நாடும்
.....விரைந்திடும் வாகனம் தேடும்
கருத்திதில் படிப்பினைக் கண்டே
.....கவனமும் கொள்ளுதல் நன்றே
அடிப்படை வணக்கமும் வேண்டும்
.....அதனுடன் அதிகமும் வேண்டும்
துடிப்புடன் நிகழ்த்தியும் சென்றார்
.....துயவனின் அருளினைச் சுமந்தார்
அனைத்திலும் அதிகமும் மனதில்
.....அவனையே வணங்குதல் கணக்கில் ?
நினைத்திட வேண்டியே இதனில்
.....நினைவுகள் கொட்டினேன் பதத்தில்
வணங்கிடப் படைத்தான் அவன்சொல்
.....வழியினில் குறைத்திடல் யார்சொல் ?
வணங்கிடும் ரகசியம் அறிந்தால்
.....வாழ்வுகள் வணக்கமாய் தெரியும்
சுருக்கிட நாடுதல் தகுமா ?
.....சுகங்களும் சுருங்கினால் புரியும் !
பெருக்கிட விரும்புதல் கொண்டே
.....பெரியவன் விரும்புவான் கண்டே
அடிப்படைக் கடமையும் ஆற்றி
.....அதனுடன் அதிகமும் போற்றி
பிடிப்புடன் வாழுதல் வேண்டும்
.....பிரியமும் காட்டுவன் அவனும்.
கருவினில் நழுவிடா நின்றே
.....கச்சிதம் கவனமும் கொண்டே
அருளினை அடைவது உண்மை
.....அவனது விருப்பமும் திண்மை
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் நிறைந்திடக் கொண்டும்
படிப்பினை இதனிலே நின்றும்
.....பக்குவம் பெற்றிடல் வேண்டும்.
நபிதாஸ்
அரையடிக்கு விளம் விளம் மா
Subscribe to:
Post Comments (Atom)
அடிப்படை அவசியம்
ReplyDeleteஅகிலத்தில் நாம் வாழ
கொடுப்பினை இல்லாதவர்
கூறுவர் அவசியமற்றதாய்
அல்லாதவை ஆடம்பரமாய்
அகிலத்தில் காண்பதுண்டு
இல்லாதவர் ஏக்கங்கள்
இருப்போர்கள் உணர்ந்திடல் நலமே
அடிப்படை வாழ்விலே கடமை
Delete.....அதனையும் விடுதலும் மடமை
நடித்திடும் மனிதனில் செழிப்பு
.....நழுவிடும் நன்மைகள் இழப்பு
பிடிப்புடன் அடிப்படைக் கொண்டு
.....பிடித்திடு மெருகினை நன்கு
துடிப்புடன் வாழ்ந்திட நன்றாம்
.....துணைகளே ஏணியாம் என்றும்.
அடிப்படை அற்றதன் செயலில்
.....ஆட(ம்)ப ரமாகிடும் வாழ்வில்
அடிப்படை அதனுடன் ஆற்றும்
.....அதிகமும் அவனிலே ஏற்றம்
அடிப்படை அடிப்படை என்றே
.....அதனிலே தங்குதல் நன்றா ?
அடிப்படை அடித்தளம் என்றால்
.....அதிகமும் மேல்தளம் அன்றோ !
சுகந்தரும் தமிழினைப் பயின்று
ReplyDelete....சொக்கிடும் மரபினை முயன்று
அகத்தினில் விதைத்தவுன் பாடல்
.....அளவிலா அருளினைத் தேடல்
மகிழ்ந்தனன் மெருகுடன் கூடும்
....மரபினால் வனைந்திடத் தேடும்
புகழ்பெறும் கவிதையின் கருவும்
....புலமையோன் வழங்கிடும் அருளே!
புலமையோன் வழங்கிடும் அருளும்
Delete.....புலமையார் தந்திடும் பொருளும்
புலமையோன் வழங்கிடும் அருளே
.....புரிந்திட நன்றிகள் மிகுதே !
தலமையைத் தாங்கியே முன்னால்
.....தகுதியைப் பற்றியே பின்னால்
வலம்வர புலமையோன் அருளே
.....வாழ்த்திட வேண்டினேன் அருளை.
வேதனை, தேவை மிகைக்கின் இறையை
ReplyDelete........வேண்டுதல் மனிதனின் குணமே
சாதனை செய்யத் துணிந்திடும் பொழுதில்
.........சார்ந்திட நினைத்தால் இறையின்
காதலில் விழுந்து கைகளை ஏந்திக்
........கதறியே அழுதலும் தகுமே
சாதலின் நேரம் இறைவனை வேண்டிச்
........சார்ந்திருப் பதுமுள உணர்வே
உதடுகள் கூறும் பிரார்த்தனை உன்னில்
.......உருகிடும் உணர்வுகள் ஓசைக்
கதவுகள் திறக்கும் திறவுகோல் அவனின்
.......கருணையால் பிறந்திடும் வார்த்தைப்
பதவுரை என்னும் பொழுதினில் உனக்கே
......படைத்தவன் வேண்டுதல் தேவை
நிதமுமுன் தேடல் தேவையைக் கேட்க
.....நிலைத்தவன் அவனென உணர்வாய்.
வனங்களும் கடலின் அலைகளும் பறவை
.......வகைகளும் இசைத்திடும் ஓசை
மனங்களில் மனிதன் அழுதிடும் வேண்டல்
......... மண்ணகம் வருதலின் முன்னம்
தனதருள் கொண்டு படைத்தவன் ஏற்கத்
.......தனிமையில் வேண்டியே கதறும்
உனதரும் வேண்டல் தேவையை அற்ற
உன்னிறை விரும்பும் உணர்வே!
சார்ந்தவன் மனிதன் வாழ்விலே இறையை
Delete..........சார்ந்தவைத் தானே அனைத்துமே இறையில்
சார்ந்ததை அறியா வீழ்தலும் மடமை
..........சார்ந்ததை அறிந்தே வாழ்தலே கடமை
சார்ந்ததின் சாரும் சகலமும் சாரான்
..........சார்ந்ததே, சார்ந்தோர் புரிதலும் பாரான்
சார்ந்திடும் குணமே சாக(ா)னின்ச் சாரம்
..........சரியெனக் காணச் சரித்திரம் ஆகும்
உதடுகள் கூறும் பிரார்த்தனை உன்னின்
.........உணர்வினில் அவனின் ஆளுமைத் தன்னின்
பதங்களாய் உன்னைக் காத்திட அவனின்
..........பாசமும் ஆனா வேசமும் காணேன் !
நிதமுமுன் தேவைத் தீர்த்திட அவனே
..........நின்னிலே நாடி வேண்டுதல் பாரேன் !
பதத்திலே மூழ்கி படைத்தவன் புரியா
.........பாங்கிலே போனான் பிரித்தவன், புரிவோம்.
வனங்களும் கடலின் அலைகளும் பறவை
.......வகைகளும் தன்னில் இசைத்திடும் ஓசை
மனங்களில் மனிதன் அழுதிடும் வேண்டல்
......... மண்ணகம் இவைகள் வருதலின் முன்னம்
தனதருள் கொண்டு படைத்தவன் ஏற்கத்
.......தனிமையில் நின்றே வேண்டியே கதறும்
உனதரும் வேண்டல் தேவையை அற்ற
.........உன்னிறை ஒன்றின் வெளிப்படும் உணர்வே
அஸ்ஸலாமு அலைக்கும், நீங்கள் இதில் கலந்து கொள்க. மரபுப்பாவை விரைவாக எழுதி எனக்கு அனுப்புக; திருத்தம் வேண்டினால் திருத்தி அனுப்புகின்றேன். நினைவிற் கொள்க. கவிதைப் போய்ச் சேர வேண்டிய இறுதி நாள்: 20.07.14
Deleteதிரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் அனுப்பியிருந்த செய்தியை நண்பர்கள் பங்கேற்புக்குப் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி
nellaikumarakapilan01
(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா)
‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.
படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும்.
கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது.
கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக உரூபாய் 2500, இரண்டாம் பரிசாக உரூபாய் 1500 மூன்றாம்பரிசாக உரூபாய் 1000 என அளிக்கப்படும்.
கவிதை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.07.2014
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் குமார சுப்பிரமணியம்,
செயலர்,
நெல்லை குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை
தமிழ்மனை
854, இரண்டாம் தெரு,
தி.வி.சுந்தரம் நகர்,
திருநெல்வேலி 627 011
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in
--
தங்கள் விழைவுக்கு தகுதியாக இருக்க விரைகிறேன். வல்லோன் அருள் நாடி முயல்கிறேன்.
Deleteஆஹா கவிதையிலே மறுமொழிகளை இட்டுக்கொள்ளும் கவிஞர்கள்
ReplyDeleteஆஹா வென்றுமே சொல்லும்
Delete.....அழகும் என்றுமே உந்தன்
போகா குனத்தினின் உணர்வு
.....புரிந்தேன் பரந்தவுன் மனது
சாகாச் சரித்திரம் உந்தன்
.....சாதனை, அதிரையர் பந்தம்,
பாகாய்ச் சுடச்சுடச் செய்தி,
.....பகரும் விதங்களே தகுதி
வாழ்த்துக்கள் ...
Deleteநிகழ்கால நிகழ்வுகளை
கவிகளால் விளக்கியவிதம் அருமை
நிகழும் நிகழ்வுகள் நினைக்க
Delete.....நிலையில் நீங்கியே நிற்க
அகழ அறிந்திடும் அறிவு
.....ஆழ அகலவே ஆய்ய
இகழும் இகத்தினர் இதிலே
.....இன்று இயலுதல் இழிக்க
உகந்த உள்ளதை உடனே
.....உதிர உலகிலே உயர்வே.