.

Pages

Tuesday, February 10, 2015

பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

பத்திரிக்கை துறையை பொறுத்த வரை அன்று முதல் இன்றுவரை
சமுதாய அவலம் முதல் சாதனையாளர் வரை அசிங்கம் முதல் அதிசயம் வரை அன்றாடம் மக்களிடம் சேர்த்ததன் விளைவு இன்று அசுர வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது. அதில் பங்கேற்கும் பத்திரிக்கையாளர் சிறந்த படைப்பாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் தான் காண்கின்ற எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் .

கொண்டு செல்லும் செய்திகளின் அடிப்படையில் அந்த பத்திரிக்கைக்கு
வாசகர்கள் அமைவார்கள். அதே போன்று வலைதளத்தில் வரும் படைப்புகள், வலைதளத்தின் வருகை கூடுதல் எப்போது என்பதை ஒரு பத்திரிக்கையாளனாய் பார்க்கிறேன் அதன் அடிப்படையில் நான் பார்த்த, படித்த, கேட்டவைகளை பகிர்ந்து கொள்ளவே இது போன்ற வித்தியாசமான தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்...

நான் கத்தார் சென்றிருந்த போது, ஒரு அருங்காட்சியத்திற்கு சென்று இருந்தேன் அங்கு அரேபிய நாட்டு பழங்காலத்து மக்கள் பயன் படுத்திய மண் பாண்டங்கள் முதல் இன்றைய நவீன உடைகள் வரை காட்சி பொருளாக வைத்து இருந்தார்கள். அதில் நான் ஒன்றும் அதிசயத்து போகவில்லை ஆனால் இந்திய விடுதலைக்கு போராடிய திப்பு சுல்த்தான் மன்னரின் உடைகள், அவர் பயன் படுத்திய பல்வேறு பொருட்களை கொண்ட பெரிய தொகுப்பை  அருங்காட்சியத்தின் பெரும் பகுதியை அதற்காக ஒதுக்கி
இருந்தார்கள். பார்த்து பிரமித்து போனேன்...

அதே போன்று ஒரு செய்தி TNTJ என்ற சமுதாய அமைப்பின் வலைதள காணொளியில் *செல்பி* என்ற மனோ வியாதியை பற்றி ஒரு செய்தி தொகுப்பு போட்டிருந்தார்கள். இந்த கால இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற நடவடிக்கை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவு பற்றியும் பதிந்திருந்தார்கள். அதாவது தன்னை தானே படம் எடுத்து கொள்ளுதல் இது சாதாரண செயலாக தெரிந்தாலும் சிலருக்கு இதுவே வெறியாக மாறி விடுகிறது. வித விதமான உடைகளில் தன்னை தானே போட்டோ எடுத்துகொள்ளுதல், அதிகமாக கண்ணாடி முன் நின்று தன்னை தானே பார்த்து குறை ஏதும் உள்ளதோ என பார்த்து கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படும் நிலையம் உண்டு. மெக்சிகோ நாட்டை சேர்ந்த வாலிபர் செல் போனில் தனக்கு தானே போட்டோ எடுத்து கொண்டு இருந்தார் ஒவ்வொரு செயல் செய்யும்போது போட்டோ எடுப்பது வழக்கம். அவருக்கு விபரீத ஆசை துப்பாக்கி சுடுவது போல போட்டோ எடுத்துக்கொண்டார்.

சரியாக அமையவில்லை மீண்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும்போது வீடியோ, போட்டோ சரியாக எடுக்க பட்டு விட்டது ஆனால் துப்பாக்கியை உண்மையாகவே அழுத்தி விட்டார். முடிவு அவராகவே எடுத்த படத்தை பார்க்க முடியவில்லை.

இளைஞர்களே ஜாக்கிரதை !
பிகார் இளைஞர் ஒருவர். கோன்..பனோ ..குரோர்பதி..என்ற நிகழ்ச்சியில் ஐந்து கோடி ஜெயித்து விட்டார். அதற்கு முன் மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்தவராம். அது வரை சொந்தங்கள், உறவினர்கள், கண்டு கொள்ளவே இல்லை. ஐந்து கோடிக்கு அதிபதியானதும் அண்ணன் தம்பி என்று பார்க்க வந்தார்களாம். பலரின் தேவைகள் பூர்த்தி செய்தாரம். கண்மூடி முளிப்பதற்க்குள், பலவகையில் செய்த அவரின் வங்கி கணக்கில், ஐம்பது லட்சமாக குறைந்து விட்டதாம்.

மீண்டும் ஏதாவது ஒரு வேலை செய்ய முயற்சிக்கும் நிலை ! பாவம் என்பதா ?
உறவுகள் ..என்ன செய்கிறதோ ...

ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சொன்ன சிரிப்பு தத்துவம் புரிந்து சிரியுங்கள்.

தாசில்தார் வீட்டு நாய் செத்து விட்டதாம் ..
ஊரே...அவர் வீட்டில்  கூடியதாம்...
தாசில்தார் செத்து போனாராம். ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு செல்ல வில்லையாம்....

புரிந்ததா ? பின்னூட்டத்தில் சந்திப்போம்...

'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

8 comments:

  1. அதிரை சித்திக் அவர்களின் 100 வது படைப்பு !

    பல நூறு விழிப்புணர்வு ஆக்கங்கள் படைத்திட வாழ்த்தி வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல பல கருத்துக்கள் ..பதிவிட ஆசை
      நல்ல பல படைப்புகள் மனதினில் ஊற்றாய் ஊரிட
      இறைவன் அருள வேண்டும் ..இறைவனிடம் இறைஞ்சுங்கள்...எனக்காக

      Delete
  2. தாங்களது இந்த நூறாவது பதிவுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.சகோதரரே ! மேலும் தாங்களது பல நூறு பதிவுகள் இந்த சமூக விழிப்புணர்வு பக்கங்களில் இடம்பெற மீண்டும் வாழ்த்துகிறேன்.

    பத்திரிகை துறையில் இருந்த தாங்கள் அதன் சுவராஸ்யமான அனுபவங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரை மெய்சா அவர்களே ..
      பழங்கால பத்திரிக்கையாளன் ...இன்றைய பதிவாளன்
      தங்களின் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. பசை உள்ளப் பக்கம் ஒட்டிக்கொள்வது பலகினமானவர்கள் இயல்பு. ஆனாலும் பலகினாமானவர்களே அதிகம் காணப்படுகிறார்கள்.
    திப்பு இஸ்லாமியனின் சின்னங்களில் ஒன்று என்பது நிரூபணமே. ஆனாலும் இஸ்லாமிய சின்னங்களை அழிப்பதில் இவர்களே முன்னோக்கபடுகிரார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவின் கருத்தையொட்டி நீங்கள் இட்ட பின்னூட்டம்
      நான் எதிர் பார்த்த உண்மையான கருத்து ..கருத்து பரிமாற்றம் பதிவின் வெற்றி .உங்களின் பதிவு உள்ளம் நிறைந்த மகிழ்வை தருகிறது ..படைப்பாளியாய் பரிணாமிக்கும் நீங்கள் என் ஆக்கத்திற்கு தந்த பின்னூட்டம் நல்ல வாசகனாய் மனம் நிறைந்து காண படுகிறீர்கள் நன்றி அறிஞர் நபி தாஸ் அவர்களே

      Delete
  4. பதவிக்கு உண்டான மரியாதை மனிதனுக்கு இல்லை

    ReplyDelete
    Replies
    1. கடைசியில் இட்ட கருத்திற்கு ஒற்றை வரியில் முழுமையாய் புரிந்து கொண்ட நண்பா உன் புரிதல்
      என் நட்பிலும் ...சரி என் கருத்து பரிமாற்றத்திலும் சரி ..
      என்னை திருப்தி அடைய செய்து விட்டாய்..நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers