.

Pages

Saturday, April 11, 2015

[ 4 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

ஊடக பார்வை:
சென்ற வாரம் தமிழக ஊடகத்தை முற்றிலும் ஆக்கிரமித்த செய்தி தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்ட செய்தி இது தமிழக மக்களை எவ்வளவு பாதித்து உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும்
கையில் எடுத்துள்ளதை வைத்தே தெரிய முடிகிறது.

செம்மர கட்டைகளின் மதிப்பு உலக சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மரம். அதனை கடத்தி விற்று அதிக சம்பாதிக்கும் கும்பல் ஆந்திர அதிகார வர்க்கத்தில் இருப்பது ஆந்திர காவல் துறைக்கு தெரிந்த ஒன்றே. ஆயினும் அவர்களை ஒன்றும்
செய்ய முடியாத போலீசார் அப்பாவி தமிழர்களை கொன்று தனது ஆதிக்க வெறியை தீர்த்து கொண்டது. நன்றாகவே தெரிகிறது. அது அப்பட்டமான முட்டாள்தனமான செயல்.

இன்றைய கால கட்டத்தில் ஓடும் மனிதனை செயலிழக்க செய்து பிடிக்க எத்தனையோ யுக்த்திகள் காவல் துறையிடம் உண்டு அப்படி இருக்க கொல்ல துடித்தது ஏன் !?

ஏதோ இரண்டு தரப்பு கடத்தல்கார்களில் ஒரு தரப்புக்கு ஆந்திர போலீசார் துணை போனது போன்று உள்ளது. அதிகார வர்க்க கடத்தல் கும்பல் போலீசார் துணையோடு இக்காரியத்தை செய்து உள்ளதோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. இது போன்று பயமுறுத்தலால் அப்பக்கம் இனி யாரும்
வரமாட்டார்கள். இனி அதிகார வர்க்கமே செம்மர கடத்தலை அமோகமாக செய்யலாம் என்றே சந்தேகிக்க தோன்றுகிறது.

அப்பாவி இளைஞர்கள் இப்படி அரக்கர்களால் கொல்லப்படுவதை  நிறுத்த அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை பின்னணிப்  பற்றி ஒரு ஊடகவியலாளர் செய்தி தொகுப்பில் கூறும்போது அப்பகுதி இளைஞர்களின் ஆடம்பர தேவைகள், மது அருந்த அதிக பணம் தேவைகளுக்காக தனது உயிரை பணயம்
வைத்து இது போன்ற வேலைகளுக்கு செல்கிறார்கள் என குறிப்பிட்டார்.

அப்பகுதியில் அதிகமாக மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் செல்வதையும், டாஸ்மார்க் கடைகளில்  அதிகமாக இளைஞர்கள் காணப்படுவதையும் மேற்கோள் காட்டி இருந்தார். ஆடம்பர வாழ்க்கை வாழ, ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்லும் ஏஜென்ட்டுகளை முதலில் கலை எடுக்க வேண்டும். எங்கோ, எவனோ ஒருவன் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஏழை அப்பாவிகள் கொல்ல படுவது யாராலும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.

பத்திரிகை துறையில் செய்தி பற்றிய ஆய்வுகளில் முக்கியமாக  நினைவில் கொள்வது ஒரு செய்தி எத்தனை நாட்கள் பேசப்படுகிறது அதன் அடிப்படையில் அதன் வீரியம் கணக்கிடப்படும்.

இதே நாட்களில் இரண்டு பிரபலங்களின் மறவு செய்தி, முதல் நாள்  நாகூர் ஹனிபா அவர்களின் மறைவு செய்தி. இரண்டாம் நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மறைவு பற்றிய செய்தி. இரு வேறு துறைகளில் பெரிய தூண்களாய்  திகழ்ந்த இவர்களின் மறைவு கூட செய்திகளின் தாக்கம் அவ்வளவாக இல்லை இது ஊடகத்தில் பார்க்கப்படும் ஆய்வுகளில் ஒன்று. ..

இருபது தமிழர்களின் மறைவு எனது மனதை மிகவும் பாதித்தது. வருத்தமளிக்கும் இந்நிகழ்வால் நான் ரசித்த படைப்பு பற்றி இவ்வாரம் எழுத விரும்பவில்லை.

இறைவா ! பலியான அப்பாவி தமிழர்களின் குடும்பத்தினருக்கு பொறுமையையும், மனதில் அமைதியையும் கொடுத்து, எந்த செல்வம் தேடி உயிர் விட்டார்களோ, அந்த செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு கொண்டு போய் சேர்ப்பாயாக...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

4 comments:

 1. மிகவும் மனதை பாதித்த செய்தி.. அப்பாவித் தமிழர்கள் கொத்தாக கொள்ளப்பட்டது மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயல். இச்செயலை செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிடாமல் தகுந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அப்போதே அந்த அப்பாவி குடும்பத்தினரின் மனம் ஆறுதல் அடையும்.

  ReplyDelete
  Replies
  1. தே.மு.தி .க ...தலைவர் விஜயகாந்த் அவர்கள் பேட்டியில் கூறியதை
   இங்கு நினைவு கூற விரும்புகிறேன் ..

   மாட்டுக்கு கொடுக்கும் மரியாதையை மனுஷனுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் .
   முகநூளில் ஒருவர் கூறும்போது ..மரத்திற்கு உள்ள மதிப்பு மனிதனுக்கு
   இல்லையா ..என வினவினார் ....

   Delete
 2. மனித உருவில் காட்டுமிராண்டிகள். மனிதனை சித்தரவதை செய்தார்கள் என்பதைக் காட்டிலும் தொடர் சித்திரவதை செய்து கொலை செய்து இருக்கின்றார்கள். மிருகம்கூட இவ்வாறு செய்யாது. மிருகத்தைக் காட்டிலும் கொடூரமானமுறையில் கொலை செய்துள்ளனர்.

  மனித நேயம் அறவே இல்லை. தன்னைப்போல் பிறரைக் காணும் போக்கு எப்பொழுது மனதில் நிலைகொள்கிறதோ அப்பொழுது இம்மனிதவுருவினர்கள் திருந்திய மனிதர்களாக இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழனுக்கு ...
   சுற்றி எல்லா பகுதியிலும் பகை ..
   கர்நாடகா ..
   கேரளா ..
   இப்போது ஆந்திரா ...
   கடல் கடந்து பார்த்தல் இலங்கை ..
   ஏன் இந்த சாப கேடு தமிழகத்துக்கு

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers