.

Pages

Friday, June 12, 2015

விதை !

விதை புதைந்து
வெளியுலகில் விரிச்சமாக
வீரியமாய் காட்சி தரும்.
வீராப்பாய் விதை ஒன்றும்
விரிச்சத்திடம் வாதங்கள் செய்வதில்லை

என்னை மறந்து நீ
தென்றலிடம் உறவாடுகிறாய்
குயிலிடம் இசை பாடுகிறாய்
கூட்டமாய் இருக்குமிடம்
சோலை என்று கூறும்போது
விதைகள் என்றும் வெம்புவதில்லை.

விதைப்பவன்
ஒருவனென்றாள்
சுவைப்பவன்  மற்றவன்
அதுதான் இயற்கை

வருத்தங்கள்
விதைகளுக்கு புதைக்கும் போது
வருவதுண்டு புதைந்த பின்
வெடித்து அது வீரியமாய்
வெளி வரும் அது அன்று அது அரும்பு
அரும்பு அது அயராமல்
நீர் தேடி வேர் ஊரும்

ஊடுரும் வேருக்கு
விருச்சத்தின் பார்வைகள்
வேருக்கு கிடைப்பதில்லை
வேர் அதும் விருச்சத்தின் மேல்
கோபம் ஏதும் கொள்வதில்லை

மனிதருள் பலர் விருச்சம்
சிலர் வேர் அதிலும் சிலர் விதை
நீ எதுவாக இருக்கிறாய்
உணர்ந்து கொள்
உன்னை அறிந்தால் நீ
உலகத்தில் போராடலாம்.
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

2 comments:

  1. உன்னை யறிந்தால் - நீ
    உன்னை யறிந்தால்

    உலகத்தில் போராடுவாய்- நீ
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

    தன்னை அறிந்திடேன்- நீ
    தன்னை அறிந்திடேன்

    தலைவனை அறிந்திடுவாயே- நீ
    தகுதியில் உயர்ந்திடுவாயே

    ReplyDelete
  2. விதையே மரமாகி
    வளைவைத் தரும்
    புதையலை கண்டபின்
    புழுக்கங்கள் ஏன் ?
    விதைக்குமுன் வேண்டியதை
    விதைப்பதே விவேகம்
    இதை மனதிலிருத்த
    இன்பங்கள் சூழலாம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers