kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, July 3, 2015
அதில் பங்கு வேண்டாம் !
உன்னோன்பு ஏற்கலாகாதாம்
தண்மை குணங்களாக
தகுதி வரவேண்டும்
பொய்யான பேச்சுகளும்
பொய்யானநடவடிக்கைகளும்
மெய்யாக விட்டிட்டே
மேன்மை பெறவேண்டும்
வணக்கங்கள் எதற்காக ?
வல்லோனே கேட்க்கின்றான்
இணக்கமான குணமில்லை
எப்பொழுது மனிதத்தன்மை ?
பரந்த மனமில்லை !
பக்குவமும் இன்னுமில்லை !
அரவ குணங்களே
அப்பப்ப அரங்கேற்றம்
'எல்லாப் புகழும்
இறைவனுக்கே' என்றானே
வல்லோன் மொழிதனிலே
வாசிப்பு மட்டும்தானா !?
திட்டங்கள் தீட்டி
தேகம் குளிரலாமோ !
பட்டங்கள் சூற்றி
பதவி பெறலாமோ !?
தானே ! வரவேண்டும்
தருவதும் அவன்தானே
வீணே ? வருத்தங்களும்
விலகிடத்தான் வைத்திடுமே
அற்ப ஆசைகளும்
அப்பப்ப அரங்கேற்றம்
சொற்ப நேரம்தானே
சுகமும் நிற்கும் !?
நித்தியன் ஒன்றே
நிறைவான நோக்கம்
சத்தியமாக வாழ்தலே
சன்மார்க்க வழியாகும்
புத்திகளில் புகுந்திட்ட
புதுமைகளைக் களைந்திடுவோம்
பத்தினித் தன்மைகளை
பயன்பாட்டில் கொண்டிடுவோம்
அகங்காரம் அவனுடையது
அதில் பங்குவேண்டாம் !
இகத்தினில் வாழ்ந்திடவே
இதனையும் மனம்கொள்வோம்
'தான்''நான்' அழிந்தே
தகுதி உயரவேண்டும்
ஏன்னென்றால் அந்நிலை
ஏகனின் தனிநிலையாகுமே.
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
இறைமாட்சியின் சிறப்பை ஏகத்துவத்தின் உயர்வை அருமையாக நபிதாஸ் அவர்கள் தனது கவிதையில் விளக்கியுள்ளார்.வாழ்த்துகள்
ReplyDeleteஇறையின், ஏகத்துவத்தின் நிலையினை அறிந்தோர் தங்கள் போன்றோர் வாழ்த்துக்கள் ஊக்கத்தைத் தூண்டும்.
ReplyDelete