.

Pages

Wednesday, December 5, 2012

[ 2 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

இறுதி ஊர்வலம் செல்லும்போது...
கவிஞானி சிரித்ததை கண்டு ஒருவர்
சினம் கொண்டு சீறி எழுந்து 
ஏன் சிரித்தாய் இன்று ? என்று கேட்க
ஞானியின் பதில் இதோ
ஆயிர ஆயிரம் ஆண்டுகள்
வாழப்போவதை போல் 
வட்டிக்கு பணம் கொடுத்து
கொள்ளை லாபம் கண்டு
வறியோரை வதைத்த இவர்
சேர்த்த பணத்தை விட்டுவிட்டு
உண்ண வழியில்லாது 
உடுக்க வழி இல்லாது 
திரும்பா பயணம் செல்வதை கண்டேன்
சிரித்து கொண்டேன் 

வாழ்க்கை என்பது வாய்ப்பு ஆகும்
வரியவர்க்கு உதவி செய்து 
வாழ்கையிலே வளம் பெறலாம்
வட்டி எனும் கொடுமை செய்து
வறியவர் வெறுப்பை கொள்ள லாகாது
மரண மெனும் பிரியாவிடை
வெறியுடனே சேர்த்த பணம்
அவன் பிரிவை கண்டு அழவில்லை
மாறாக கட்டிடமாக சிரிக்குதப்பா
பலன் அடைந்தோர் மகிழ்கிறார்கள்
அதை கண்டு சிரிக்கிறேன்.. ஐயா !

அதிரை சித்திக்
'சிரிப்பது' தொடரும்...

6 comments:

  1. வட்டி - உடல் உழைப்பில்லாமல் நமக்கு கிடைக்கும் பணமல்லவா இது ! வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுவர்கள் லட்சாதிபதிகளாகவும் !? கோடீஸ்வரர்களாகவும் !? மாறுகின்றனர். மற்றவர்களோ அதுவும் குறிப்பாக ஏழைகள் பரம ஏழைகளாகவும், பரம ஏழைகள் கையேந்துபவர்களாகவும் மாறுகின்றனர்.

    வட்டியின் வகைகளாக முதலில் பணத்தைக் கொடுத்து அதற்கு வட்டி, அப்புறம் வட்டிக்கு வட்டி, டபுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி போன்ற பெயர்களில் பண வசூலும், சீட்டு, குத்தகை, அடமானம், ஒத்திக்கு போன்ற பெயர்களில் ஈடுபடும் இவ்வியாபாரத்தால் !? சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

    நல்லதொரு கவிதை !

    சமூகத்தின் அவலங்களை எண்ணி சிரிப்பது தொடரட்டும்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்லதொரு கவிதை !

    சமூகத்தின் அவலங்களை எண்ணி சிரிப்பது தொடரட்டும்...

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். கவிஞானி இன்னும் பலமாக சிரிக்கட்டும்.

    ReplyDelete
  4. அதிரை.மெய்சாDecember 5, 2012 10:52 AM
    வாழ்த்துக்கள். கவிஞானி காக்கா இன்னும் பலமாக சிரிக்கட்டும்.

    ReplyDelete
  5. சிரிப்புக்கு பல வகை அதில் ஒரு வகை அதான் அதிரை சித்திக்கின் கவி சிரிப்பு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்லதொரு கவிதை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers