.

Pages

Thursday, October 3, 2013

நபிதாஸின் அறிவுத்தேன் - குறுந்தொடர் [ 3 ]

சேக்கனா நிஜாம் அவர்களே !
இப்பொழுது தாங்கள் விளக்கம் வினவிய "வணக்கம்" என்ற தலைப்பில் எழுதிய கவிதைக்கு வருவோம். மேற்கண்டவைகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

இரண்டு தனித்தனியான உள்ளமைகள் என்ற கருத்தில் உள்ள உருவங்கள். இரண்டும் தெளிவாகத் தெரியும் உருவங்கள். ஒன்றை மற்றது வணங்கினால் அது உருவ வணக்கம்.

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

இரண்டு தனித்தனியான உள்ளமைகள், ஆனால் வணங்கும் உருவம் ஒன்று தெளிவாகத்தெரியும். மற்றது அதன் உருவம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் எதோ ஒரு இலக்கணத்திர்குட்பட்டு அது வணங்கப்படுகிறது.

அது அவனின் கற்பனையான உருவமாக இருக்கலாம் அல்லது கற்பனை செய்யமுடியாத வெறுமையாகவும்  இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இரண்டு வெவ்வேறு உள்ளமைகள். ஒன்று தெரியும் மற்றது உருவம் தெரியாது, புரியாது. அதுவும் உருவ வணக்கத்தைச் சேர்ந்ததுதான்.

எண்ண அசையும்
நினைக்க நடக்கும்
எண்ணமும் புலனும்
இதுவும் வணக்கம் !

நடக்க நீ நினைக்கின்றாய் உனது கால் நடக்கின்றது. அவ்வாறு கால் நடக்காவிட்டால் அது உனக்கு இணங்கவில்லை என்றாகிவிடும். ஆனால் கால் இனங்கி நடக்கின்றது. அரூப எண்ணத்திற்கு உருவ கால் இணங்கி நடக்கின்றது. இதுவும் வணக்கம்.

இனிதது வாழ்வு
இதனை புரிய
மனிதன் மற்றவை
வணங்க படைத்தான்.

மனித வர்க்கத்தையும், ஜின் வர்கத்தையும் தன்னை வணங்கவே படைத்தேன் என்கிறான் இறைவன். இங்கு வணக்கத்தை தவிர மற்ற செயல்கள் செய்யக்கூடாது என்று பொருள் அல்ல. வணக்கத்தின் தாத்பரியத்தை அறிந்து வாழ்க்கையையே வணக்கமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இறைவன் சொல்படி, அவன் விருப்பப்படி நம் வாழ்வின் செயல்பாடுகள் இருந்தால் அது இறை வணக்கம் தான். அவ்வாறு வாழ்ந்தால் வாழ்வு சுவர்க வாழ்வாக இனிக்கும். நிம்மதி நிலவும்.

வல்லவனின் சொல்லது
வணக்கத்தி லனைத்தும்
வழுவாதிருக் கின்றன -அது
அரூப வணக்கம் !

அனைத்தும் தன்னை வணங்கிகொண்டுதான் இருக்கின்றது என்று இறைவன் சொல்கிறான். அவ்வாறு வணங்கவில்லை என்றால் பிரபஞ்ச இயக்கமில்லை. ஒன்றோடு  ஒன்று கிரககோலங்கள் மோதி அதனோடு மற்ற யாவும் அழிந்துவிடும். அவ்வாறானால் இறையல்லாத  இன்னொரு ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தும் உண்டாகிவிடும். ஆனால் அவ்வாறு இல்லை. எல்லாம் அததற்கு வகுத்தப்படி வழுவாதுதான் இயங்குகிறது.

இதில் எப்படி அரூப வணக்கம் என்றால், இறைவன் வகுத்த எண்ணப்படி அவைகள் இயங்குகிறது. அதற்கு மாற்றமாக இயங்கினால் அழிவு ஏற்பட்டுவிடும். இறைவனின் அரூப திட்ட இலக்கணத்திற்கு உட்பட்டு இயங்குவது அரூப வணக்கம் தானே.

இதன் தாத்பரியத்தை உணர்ந்தால் வணக்க நிலைகள் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மைகள் தெரியலாம். செய்கின்ற வணக்க எண்ணச்செயலைத் தவிர வேறு எண்ணங்கள், செயல்கள் குறிக்கீடு இல்லாது வணங்கவேண்டும் என்ற உண்மை மறை பொருளாக விளங்கலாம்.
'அறிவுத்தேன்' தொடரும்...
நபிதாஸ்

14 comments:

  1. வணக்கத்துக்கு இத்தனை வகைகலா இத்தனை வகைகள் இருத்தாலும் வணக்கத்துக்கு உரியவன் ஒருவனே.

    ReplyDelete
    Replies
    1. தொடர் சில குரிக்கீடுகளால் காலதாமதமாக வருகிறது. இருப்பினும் ஞாபகமூட்டளுக்காக இவைகளை காண்க:
      ******
      காலத்துக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு காலப்பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பவும்; அறிவு தெளிவிற்கு ஏற்பவும் தத்துவங்கள் பல வந்தன. துவைதம், விசிஷ்டா துவைதம், அத்வைதம் என்பன அவைகள்.
      ******
      இக்கொள்கைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பல பிரிவுகள் உண்டாகிவிட்டது.
      ******
      எதாவது ஒரு மதத்தையோ/மார்கத்தையோ விளக்கம் தெளிவுபெற எடுத்தாள்வது புரிதலுக்கு துணைபுரியும் என்பதால், அவற்றில் ஒன்றான இஸ்லாமியத்தை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துதல் தவறாகா.
      ******
      அன்பர் ஹபீப் அவர்கள்,
      //வணக்கத்துக்கு இத்தனை வகைகலா இத்தனை வகைகள் இருத்தாலும் வணக்கத்துக்கு உரியவன் ஒருவனே.// என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். நன்றி !

      தொடரின் ஆரம்ப நோக்கம் இறைவன் ஒருவன் என்பதைப் பற்றியது அல்ல. ஒவ்வொரு மத/மார்க வழிகாட்டலிலும் வணக்கம், அதன் தார்ப்பரியம் எவ்வாறு காலப்போக்கில் பின்பற்றும் மனிதர்களிடம் இருக்கின்றது என்பதை புரிந்துக் கொள்வதற்காகத்தான்.

      Delete
  2. நல்ல விளக்கங்கள் அறிஞ்ஞரே [வணக்கத்திர்க்குரியோன் அல்லாஹ்வையன்றி வேரெவரும் இல்லை என நான் சாட்சியம் கூருக்கிறேன்]

    ReplyDelete
    Replies
    1. //நல்ல விளக்கங்கள் அறிஞ்ஞரே [வணக்கத்திர்க்குரியோன் அல்லாஹ்வையன்றி வேரெவரும் இல்லை என நான் சாட்சியம் கூருக்கிறேன்] //
      நன்றி ! அறிஞர் மு.செ.மு. சபீர் அஹமது அவேகளே. உங்களது நம்பிக்கை பலம்பொருந்தியது. அதனைப்பற்றி எழுதுவது தொடரின் நோக்கமன்று.

      இறைவன் சம்பந்தப்பட்ட செயல்கள் ஆரம்பத்தில் மத/மார்கங்களில் அதன் நோக்கம் அறிந்து நிறைவேற்றப்பட்டது. காலப்போக்கில் எங்கிலும் அது ஒரு சம்பிரதாய செயலாக பலரிடம் ஏற்பட்டுவிட்டது. செய்வதை அறிந்து செய் என்பதற்கேற்ப விழிப்புணர்வு தருவதே தொடரின் நோக்கம்.

      Delete
  3. வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.! அவன் தனித்தவன், இணை துணையற்றவன், தேவைகள் அற்றவன். இரக்கமுள்ளவன். அவனுக்கு நிகராக இவ்வுலகில் யாருமில்லை.அவனே அனைத்தையும் படைத்து இவ்வுலகை ஆண்டுகொண்டிருப்பவனாவான்.

    இதை முழுமையாக உணர்ந்து உண்மையாக விசுவாசம் கொண்டால் இவ்வுலகு அமைதி பெரும்.

    அறியாதவர்களை சிந்திக்க வைத்துள்ளீர்கள். நன்றி நபிதாஸ் அவர்களே.!

    ReplyDelete
    Replies
    1. //
      வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.! அவன் தனித்தவன், இணை துணையற்றவன், தேவைகள் அற்றவன். இரக்கமுள்ளவன். அவனுக்கு நிகராக இவ்வுலகில் யாருமில்லை.அவனே அனைத்தையும் படைத்து இவ்வுலகை ஆண்டுகொண்டிருப்பவனாவான்.

      இதை முழுமையாக உணர்ந்து உண்மையாக விசுவாசம் கொண்டால் இவ்வுலகு அமைதி பெரும்.

      அறியாதவர்களை சிந்திக்க வைத்துள்ளீர்கள். நன்றி நபிதாஸ் அவர்களே.!
      //
      நன்றி ! அதிரை.மெய்சா அவர்களே.

      அனைத்து மத/மார்கங்களிலும் வணக்கம் உள்ளது. அனைவரும் அவரவர்களுக்கு வழிகாட்டப்பட்ட வழிமுறைகளில் இறைவனை வணக்குகின்றனர். எல்லா மத/மார்கங்களிலும் தருபவன் இறைவன் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால் இம்மானிடரிடத்தில் இருந்து எதுவும் இறைவனுக்கு தேவையில்லை. அவ்வாறெனில் எதற்காக மனிதனை இறைவன் வணக்கச் சொல்லவேண்டும் என்றால் அவ்வனக்கத்தின் மூலம் வணங்கிய மனிதன் நன்மை பெறவேண்டும் என்பதற்காக. இங்கு மனிதன் பெறவேண்டும் என்பதுதான் மறைபொருள். அவ்வாறானால் வணக்கத்தின் மூலம் இவன் பெரும் நன்மைகள் என்ன ? இதை அறிந்தால் மனிதன் வணக்கத்தை விடமாட்டான். அனுதினமும் வணக்கிகொண்டேயிருப்பான். செயல் முறைகளில் பலமுறைகள் இருந்தாலும் வணக்க அடிப்பாடைகளில் எங்கும் மாற்றமில்லை. இரண்டு அடிப்படை முறைகளே உள்ளது. ஒன்று உருவ வணக்கம். மற்றது அரூப வணக்கம். இரண்டையும் மனிதன் தெளிவாக விளங்கினால் அவரவர் வணக்கமுறைகளில் தவறுகள் ஏற்படாது. இந்த இரண்டு வணக்கமுறைகளிப் பற்றிதான் இத்தொடரின் நோக்கமாக இங்கு விளக்கப்படுகிறது.

      நன்றி !

      Delete
  4. இறைவன் இயக்கத்தில் இவைய்யகம் இயங்குகிறது ...

    அவனில்லாமல் ஒரு அணுவும் அசையாது ..இது

    அனைவரின் நம்பிக்கை மதங்கள்கூறும் கருத்தும்

    அதுவே ...தங்களின் ஆக்கத்தில் தெளிவு உண்டு ..

    வாழ்த்துக்கள் அறிஞர் நபிதாஸ் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! அறிஞர் அதிரை சித்திக் அவர்களே.

      உங்களது தெளிவான புரிதலுக்கு நன்றி !

      Delete
  5. வணக்கத்திற்கு ஓர் இணக்கமும் அதற்குள் ஓர் இலக்கணமும் ஞானப்பாட்டையில் நலமாய்ப் பகர்ந்தீர் ஞானியாரே!



    வணக்கம் புரிய இன்னுமேன் சுணக்கம்?

    http://kalaamkathir.blogspot.ae/2012/05/blog-post.html ( புதன், 9 மே, 2012)


    நின்று மரங்களும் நீள்வணக்கம் செய்யுமே
    கன்றும் பசுவும் கனிவாய்க் குனியுமே
    தின்று குடித்துத் தினமு முறங்குகின்ற
    உன்றன் நிலையை உணர்


    பறக்கு மினங்கள் பறந்தே வணங்கும்
    பிறக்கு முயிர்கள் பிறப்பில் வணங்குமே
    மார்க்க மிருந்தும்இம் மானிட வர்க்கத்தால்
    யார்க்கும் உளபயன் யாது?


    நலம்பெற வைத்திடும் நல்வணக்கம் நம்மைப்
    பலம்பெற வைத்திடும் பக்குவம் நல்கும்
    விடைதரும் நாளை விசாரணை நேரம்
    தடைகளைப் போக்கும் தரம்

    மனிதனும் ஜின்னும் மறையோனை வாழ்த்தி
    புனிதமாய் மின்னப் புலமையோன் நாட
    இனிவரும் காலம் இழக்காதுக் கையில்
    கனியென மார்க்கத்தைக் காண்


    பயிர்க்குச் செலுத்தும் பலந்தரும் நீர்போல்
    உயிர்க்குச் செலுத்தும் உயிரே வணக்கமாம்
    இம்மை மறுமை இரண்டிலு மிவ்வணக்கம்
    நம்மை உயர்த்தும் நலம்.

    ReplyDelete
    Replies
    1. இல்லாத ஒன்றையாரும் எங்கனம் வார்த்தையாட
      உள்ளதை நன்குணர்ந்து ஒப்புதல் நல்லறிவு
      சொல்லுகிறேன் சொல்லினில்நல் உண்மையறி தல்ஒன்றே
      கொள்ளுதல் நன்மை உயர்வு

      நல்லது உங்கள் " வணக்கம் புரிய இன்னுமேன் சுணக்கம்?"

      வாழ்க கவிஞரே !

      Delete
  6. கடந்த சில வாரங்களுக்கு பிறகு நபிதாஸ் அவர்களின் விளக்கத்தை வாசித்ததில் மகிழ்ச்சி

    'சமூக நல்லிணக்கம்' என்ற கருத்தை வலியுறுத்தி குறுந்தொடரை நெடுந்தொடராக எழுத வேண்டும். குறிப்பாக ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் பல கருத்துகள் அதில் இடம்பெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்து மனித சமூக நல்லிணக்கம் பெறவேண்டும் என்நோக்கில் என்னிடம் வேலைகள் ஒப்படைத்துவிட்டீர்.

      அதிலும் ஒற்றுமையே மையமாக என்பதின் கருத்து, அனைத்து மனித சமூக நல்லிணக்கம் என்பதில் பொதிந்தே மருவுருவில் நிற்கின்றது.

      நன்றி ! அன்பர் சேக்கனா M. நிஜாம்.
      உங்களது உயர்ந்த நோக்கம் மின்னுகிறது.

      Delete
    2. மறுவுருவில் என்று வாசிக்கவும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers