.

Pages

Thursday, April 24, 2014

வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி !

அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

குறையைச் சுட்டும் விரலில்தான்
************குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
**********களையச் செய்யும் கறைதானே
இறைவன் நாட்டம் விடுப்பினிலே
*********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
*********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!

புகைப்படம் : அதிரை நியூஸ்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

20 comments:

  1. பொறுப்புள்ள குடிமகனாக தனது கடமையை சிறப்பாக செய்துள்ளீர்கள்

    வாழ்த்துக்கள் கவிக்குறள்

    ReplyDelete
    Replies
    1. எதிர்பாராமல் சந்தித்த காலையில், இருவரும் சிந்தித்த வேளையில் இந்தப் படமும் எடுத்தீர்கள்; இல்லம் வந்து என்றன் உள்ளம் வழிந்த கவிவரிகளை அனுப்பினேன்; சுடச்சுட பதிவுக்குள் கொணர்ந்தீர்கள்; வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கே உரித்தாக்குகின்றேன்.

      Delete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. எப்படி என்ற விளக்கம் என் தனி மின் அஞ்சலுக்கு அறிவிக்க வேண்டுகின்றேன்.

      Delete
  3. மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  4. வணக்கம்
    ஒரு குடிமகனின் கடமை சிறப்பாக செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எல்லாத்தையும் சொன்னீங்க
    யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு
    சொல்லலையே!? ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. இதயத்தில் என்றும் இருந்துவரும் காலை
      உதயத்தில் காண்போம் உணர்

      Delete
  6. வந்த நோக்கம் நிறைவேற
    .........வல்லோன் அருளை வேண்டுகிறாய்
    இந்த வாக்கில் வாக்களித்தே
    ..........இனிமை உணர்ந்தே மகிழ்கின்றாய்
    சொந்த பந்தம் உறவுகளுள்
    ..........சுவர்க்கம் கண்டும் இருந்திருப்பாய்
    தந்த விபரம் தப்பாதே
    ..........தரமாய் காத்தே நிற்பாயே.

    அன்று சின்னம் குத்திட்டாய்
    ..........அதுபோல் அல்ல கண்டிருப்பாய்
    இன்று அழுத்தி வாக்களிக்க
    ..........எல்லாம் இலகாய் கண்டிருப்பாய்
    நன்றே இவைகள் மாறினாலும்
    ..........நம்மில் மாற்றம் இல்லைதான்
    என்றே சொல்ல வேதனைதான்
    ..........என்ன செய்ய நமினத்தை.!

    ReplyDelete
    Replies
    1. இன்று நன்மை கிடைத்ததனால்
      .....இறைவன் நாட்டம் கொண்டவனாய்
      நன்று பெருக நாடியவனாய்
      ....நன்றி உமக்கும் கூறியவனாய்
      சென்று வருவேன் இறையருளால்
      ...சீராய் வருவேன் மீண்டுமொரு
      வென்று படைக்கும் பாடலுடன்
      ....வேண்டி நிற்பேன் துஆவினை!

      Delete
  7. வாக்களித்த உந்தன் வனப்பினது தோற்றமதை

    சேக்கனா தந்தார் சிறப்பாக - தாக்கம்;

    தனித்தஉம் சந்தோசம்; தாம்தவறாக் கண்டோம்

    இனித்த இதயம் இதம்.

    ReplyDelete
  8. சிகரம் தொட்ட உம் வரிகள்
    நிகரே இல்லாப் புது மொழிகள்
    உலகே நோக்கும் ஓட்டெடுப்பில்
    உனதும் கலந்தது தேன்பாலாய்
    எதிலும் குடுப்பினை வல்லதுவே
    ஏகமாய்ச் செய்திடு நல்லதையே

    ReplyDelete
    Replies
    1. சந்திக்கும் வாய்ப்பிருந்தும் சந்திக்க இயலாமையுடன் இருந் தோம் தொடர் பணியால்! வாழ்த்துரைக்கு நன்றி

      Delete
  9. பதிவுக்கு நன்றி.

    என்ன மச்சான் நல்ல சுகமா?

    இந்த வேவா வெயிலில் ஓட்டு போட்ட களைப்பில் என்ன நடக்குமோ என்று மக்களின் நினைப்பு,

    இவ்வளவு பாடு பட்டும் ஜெயித்துடுவோமா என்று வேட்பாளர்களின் நினைப்பு,

    இவ்வளவு கடுமையாக பாதுகாப்பு போட்டும் அசம்பாவிதம் ஏதும் நடந்துடுமா என்று காவல் துரையின் நினைப்பு.

    எப்படா டாஸ்மார்க் திறப்பாணுக என்று குடிமகன்களின் நினைப்பு..

    இப்படி பல நினைப்புகளுக்கு மத்தியில், கடும் வெயிலில் குளிர்ந்த பதநீர் குடித்ததுபோல் ஒரு கவிதையை கொடுத்து எங்களையும் ஒரு கணம் உங்களின் அகரத்தை நினைக்க வைத்து விட்டீர்களே.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. அகரம் (ஆங்கிலம்:Agaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

      Delete
    2. கல்யாண சபையில் கலகலப்பாய் பேசி மகிழ்ந்த நம் சந்திப்பு; என்றும் நினைவில் தித்திப்பு.

      Delete
  10. அடடா இந்த முறை வாய்ப்பிருந்தும் ஊர் வராமல் வாக்களிப்பதை மிஸ் பன்னிட்டோமே என வருந்தத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் 2016ல் சட்டசபைக்கு வாக்களிக்க மறக்க வேண்டாம். வருகைக்கு நன்றி

      Delete
  11. ஜன நாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி
    தங்கள் முகத்தில் பிரதி பலிக்கிறது ...மகிழ்ச்சி நல்ல
    குடிமகனின் அடையாளம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers