kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, July 31, 2012
“ஒளரங்கசீப்”பின் உணர வைக்கும் உயில் !
முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ).
'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : ஒளரங்கசீப் வரலாறு
படம் : கூகிள்
'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : ஒளரங்கசீப் வரலாறு
படம் : கூகிள்
Saturday, July 28, 2012
வருமான வரி : முந்துங்கள் !
ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு:https://incometaxindiaefiling.gov.in/
1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கணக்கை எப்படி உருவாக்குவது?
2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.
5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்
நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்
(இடையில் Space வராது)
என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே ?
வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 !
Thanks : www.aalunga.in
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு:https://incometaxindiaefiling.gov.in/
1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கணக்கை எப்படி உருவாக்குவது?
- தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )
- அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
- உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token)
- செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
- உங்கள் கணக்கு தயார்!!
2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்
- உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
- மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
- தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள் !
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
- விண்ணப்பப் படிவம்:ITR-1
- உதவிக் கோப்பு (ITR-I Help Manual)
இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.
- படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
- ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
- அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
- அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும்.
- "Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
- அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
- வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
- இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.
4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்
- உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
- இடது பக்கத்தில் உள்ள "Submit Return" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்
- வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
- உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், "No" கொடுக்கவும்.
- Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் "Next" என்பதைச் சொடுக்கவும்
- வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள்.
- தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!
5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்
இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!
- எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form) சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
- மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!]
முகவரி:
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!
நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்
(இடையில் Space வராது)
என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே ?
டிஸ்கி:
தாமதமாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும், இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால், பெருவாரியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பதிவிடுகிறேன்!!வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 !
Thanks : www.aalunga.in
Tuesday, July 24, 2012
Saturday, July 21, 2012
“விழிப்புணர்வு” பக்கங்கள் மின்னூல் [ E-BOOK ]
“விழிப்புணர்வு” பக்கங்கள் மின்னூல் [ E-BOOK ] :
“விழிப்புணர்வு” பக்கங்கள் என்ற எனது நூலை நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கும் / பதிவு இறக்கம் செய்வதற்கும் இலகுவாக “நூல் வடிவில்” [ E-BOOK ] இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் மூலமாக நீங்கள் பெற்ற பலனை உங்கள் மூலமாக பலரும் பெற இந்த புத்தகத்தை இலவசமாக நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிடலாம்.
அன்புடன்,
சேக்கனா M. நிஜாம்
Thursday, July 19, 2012
தமிழக அரசின் அவசர கவனத்திற்கு !!!
புனித ரமலான் மாத நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் அரசால் மானிய விலையில் பச்சரிசியைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் பொறுப்புகளில் இதற்குரிய பணிகள் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றன.
கடந்த வருடம் 3,801 டன்கள் பச்சரிசியை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மேலும் பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் அந்ததந்த பள்ளி நிர்வாகமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரைப்பட்டினம் ஏறக்குறைய 29 பள்ளிவாசல்கள் உள்ளன. அதில் ஓன்று அல்லது இரண்டு பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளிலும் நோன்பு திறப்பதற்காக கஞ்சி ஏற்பாடுகளை அந்ததந்த பள்ளிகளின் நிர்வாகத்தால் திறம்பட செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த வருடமும் அரசின் மானிய விலையில் கிடைக்கும் பச்சரிசியை பயன்படுத்தும் விதமாக கடந்த முறை அனுமதி பெற்ற நமதூரைச் சார்ந்த பள்ளி வாசல்கள் மற்றும் புதிதாக அனுமதி கோரும் பள்ளிவாசல்கள் என அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் ஒப்புதலுடன் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் கடந்த இரண்டு மாதம் முன்பாக அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணையின் ( ந.க எண் : 24479 / 2012 / க6 ) அட்டவணையில் நமதூரைச் சார்ந்த 13 பள்ளிவாசல்கள் மட்டுமே அதில் இடம்பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அரசின் அட்டவணையில் இடம்பெறாத நமதூரைச் சார்ந்தப் மற்ற பள்ளிகளின் விவரங்கள் பின் வருமாறு :
1. பெரிய ஜும்ஆ பள்ளி
2. அல் பாகியத்துஸ் சாலிஹாத் பள்ளி – மேலத்தெரு
3. ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளி
4. மஸ்ஜித் நூர் – வண்டிப்பேட்டை
5. சித்திக் பள்ளி – புதுமனைத்தெரு
6. மக்தூம் பள்ளி – சால்ட் லேன்
7. முஹைதீன் ஜும்ஆ பள்ளி – தரகர் தெரு
8. கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி
9. அர் ரஹ்மான் பள்ளி – ஆதம் நகர் ( M.S.M. நகர் K.S.A. லேன் உள்ளடக்கிய பகுதி )
10. உமர் (ரலி ) பள்ளி – சுரைக்காப் பள்ளி
11. இஜாபா பள்ளி – C.M.P. லேன்
12. மஃப்ரூர் பள்ளி - C.M.P. லேன்
இதற்குரிய பொறுப்புகளை முன் நின்று கவனிக்கும் ஹழ்ரத் பிலால் ( ரலி ) நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லியும், AAMF மற்றும் பைத்துல்மால் நிர்வாகியும் ஆகிய சகோ. S.M.A. அஹமது கபீர் அவர்களைச் சந்தித்து விளக்கம் கோரினோம்.
தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு :
1. ரமலான் மாத நோன்பிற்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் பச்சரிசியை அதிரைபட்டினத்தில் கிடைக்கப்பெறாத மற்ற பள்ளிவாசல்களுக்கும் துரிதமாக வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
2. காலச் சூழலுக்கேற்றவாறு மானிய அரிசியை அனைத்து பள்ளிவாசலுக்கும் அதிகளவில் வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
3. காலதாமதத்துடன் வழங்குவதை தவிர்த்து புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பிக்கும் முன்பாகவே வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
4. அரசால் வழங்கப்படும் பச்சரிசியை அந்தந்த பள்ளிவாசல்களுக்கு அரசின் செலவில் நேரடியாக விநியோகம் செய்ய வாகனங்களை ஏற்பாடு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...................
Wednesday, July 18, 2012
போலீசில் புகார் தெரிவிக்க !!!
1. காதை செவிடாக்கும் ஒலிபெருக்கி தொல்லையா ?
2. பட்டாசு வெடிக்கிறார்களா ?
3. வீட்டுச் சுவற்றில் அனுமதியில்லாமல் போஸ்டர் ஓட்டுகிறார்களா ?
4. வானுயர கட் அவுட்கள் தொல்லையா ?
5. விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா ?
6. அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நடுகிறார்களா ?
7. அனுமதியின்றி சாலையோரம் கொடித் தோரணங்களைக் கட்டுகிறார்களா ?
8. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?
9. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?
10. பொது இடங்களில் புகை பிடிக்கிறார்களா ?
11. பெண்களிடம் ஈவ்டீசிங் செய்கிறார்களா ?
12. சந்தேகப்படும்படி தெருவில் அறிமுகமில்லாத நபர்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறார்களா ?
13. பள்ளி, கல்லூரி அருகே மாணவர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்கிறார்கள ?
14. பட்டை சாராயம் விற்பனை செய்கின்றார்களா ?
உடனடியாக புகார் தெரிவிக்க......
- தஞ்சை மாவட்ட எஸ்.பி. அவர்களிடம் 4362 – 277110
- பட்டுக்கோட்டை வட்ட டி.எஸ்.பி. அவர்களிடம் 4373 - 255567
- அதிரைப்பட்டினம் நகர இன்ஸ்பெக்டர் அவர்களிடம் 4373 - 242450
Thursday, July 12, 2012
அதிரையை வியக்க வைக்கும் உழைப்பாளிகள் !!!
ஆயுள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளிக்கு நன்றி செலுத்தும் வகையில் உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும். அவர்களின் உழைப்பை நாம் பெருமையுடன் நினைவுகூற வேண்டும் !
அதிரைப்பட்டினம் – இவ்வூரில் சிறந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டா விளங்கக்கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் நம் நினைவில் என்றென்றும் குடியிருப்பவர், நன்கு அறிமுகமானவர், நல்ல பண்பாளர், கடின உழைப்பாளி போன்றவர்களில் சிலரை எடுத்துக்கொண்டு அவர்களைப்பற்றிய சிறுகுறிப்புடன் தொகுத்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவர்கள் நமக்கு நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு கடின உழைப்பிற்கும், சிறந்த பண்பிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்...
“ஆ”ரம்பம் செய்வோம்...
S.M. சுலைமான் :
குலசேகரப்பட்டினத்திலிருந்து
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு
வந்து ஓறு சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றவர்.
இன்னும் அதே பெட்டிக்கடை...! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும்
இருந்துகொண்டு சேவைகள் செய்துவருவது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும். இவர் மேலத்தெருவில் வசித்து வருகிறார்.
முஹம்மது அப்துல்லா :
நடுத்தெருவைச் சேர்ந்த இவர் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றுள்ளவர். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்...இவரின் பேச்சு நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவது கூடுதல் சிறப்பாகும்..... நமதூர் கடைத்தெருவில் சிறிய கடையொன்றை வைத்து அதன் மூலம் சிறுதொழிலாக அரிசி வியாபாரத்தை செய்து வருகின்றார்.
M.P. சிக்கந்தர் :
1968 முதல் இன்று வரை நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறும் இவர் நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நமதூரில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரது நட்பு வட்டம். ஞாபக சக்தியில் சிறந்தவராக உள்ள இவர் வசிப்பது தரகர் தெருவில்.
P. அப்துல் ரெஜாக் :
“கொடுவா பிஸ்க்” என்றாலே முதலில் நம் நினைவில் வருபவர் இவர்தான். மீனை அழகாக துண்டுகள் இட்டு கூறு கட்டுவது இவரின் தனிச்சிறப்பு. தன் சிறுவயது முதலே “மீன் வியாபாரம்” செய்யும் இவர் கடின உழைப்பாளியும்கூட இன்றும் சுறு சுறுப்பாய் வேலை செய்வது என்பது இவரின் இயல்பு. கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் இவர் கீழத்தெருவைச் சார்ந்தவர்.
K.S.A. சாகுல் ஹமீத் :
உயரமான மனிதர்... துரு துரு பார்வை....சமூக சேவைகள்....இவரின் கூடுதலான சிறப்புகளாகும். கடற்கரைத்தெருவில் வசிக்கும் இவர் இப்பகுதியின் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவரின் தொழிலாக உணவகம் உள்ளது.
S.M. முஹம்மது பாருக் :
முதியவரான இவர் ஹாஜா நகர் பகுதியைச் சார்ந்தவர். இவரின் தொழில் முடிதிருத்தம் செய்வது. கடற்கரைத்தெருவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இச்சலூன் கடை மிகவும் எளிமையாகக் காட்சி அளிக்கின்றது. இவருக்கு சிறு தொழில் செய்வதற்கு சமூதாய அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.
சாகுல் ஹமீத் :
“தட்டு வண்டி” சாகுல் என்றாலே பட்டென்று அனைவரும் அறிவர். இவரின் கடின உழைப்பு, பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். சின்ன தைக்கால் தெருவைச் சார்ந்த இவர் பகுதி நேர தொழிலாக தெருத் தெருவாக “புட்டு” விற்று வருகின்றார்.
S. முஹம்மது ஹசன் :
“பட்டர் பிஸ்கட்” என்றால் முதலில் நினைவில் கொண்டு உச்சரிப்பது இவரின் பெயரைத்தான். நெசவுத்தெருவில் வசிக்கும் இவர் சொந்த தொழிலாக கடைகளுக்கு “பட்டர்” பிஸ்கட் விநியோகம் செய்துகொண்டு இருந்தவர் தற்போது நெருக்கமானவர்களுக்கு தென்னைந் தோப்புகளை பராமரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.பிலால் நகரில் வசிக்கும் இவர் ஏழ்மையான கடின உழைப்பாளி. நீண்ட காலமாக வடை, சம்சா, போண்டா போன்ற பலகாரங்களை தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றார். இவற்றின் விலை மற்ற கடைகளைவீட குறைவு என்பது தனிச்சிறப்பு. கடைத்தெரு சந்திப்பு அருகே இவரின் அன்றாட வியாபாரம் செய்யும் இடமாக உள்ளது.
இறைவன் நாடினால் ! 'உழைப்பாளிகள்' இன்னும் தொடர்வார்கள்... பதிவுகளில் கம்பீரமாக
சேக்கனா M. நிஜாம்
Sunday, July 8, 2012
பொறா(ஆ)மை !!!
தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு “பொறாமை” என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்...
இங்கே வசிக்கும் ஒருவர், எங்கேயோ வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை... மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.
1. ஒருவர், பிறரிடம் உள்ள “வளர்ச்சி”யைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...
2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள “நிம்மதி”யான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...
3. நான் தான் “நம்பர் 1” னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1” னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்...
4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான்... அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்...
5. எனக்கு “அந்த பொருள்” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்...
6. “ஆ” அவளிடம் பார்... அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்...
7. அவனுக்குப் பார்....சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்...
8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார்.....அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் “ஜெலஸ்”களும்........
9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார்..... தன் இளம் வயதில் என்னை வீட பெரிய “ஆளா”யிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்...
10. நான் தான் அந்த “தலைமை”ப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் "ஜிக் ஜாக்"காக செயல்படுவோரும்....
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
“பல்லு” இருக்கிறவன் தட்டில் வைக்கும் “பக்கோடா”வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக “ஈ” என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?
நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
( நபியே ! ) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். ( திருக்குர்ஆன் 20:131 )
“நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது ” ( நூல்: அபூதாவூத் )
“தான்” என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள “பொறாமை” என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில், அவர்களின் ஈமான் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.
பொறாமைக்காரர்களின் “பொறாமை” எனும் கொடிய தீங்கிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! என்று “துஆ” செய்தவனாக....
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்............
Friday, July 6, 2012
பணக்கார நாடுகளாம்ப்பா....!?
1.கத்தார் (Qatar)
வருட வருமானம் : $ 88,222
தலைநகரம் : Doha
மொத்த மக்கள் தொகை: 1.8 மில்லியன்
2.லுசேம்பெர்க் (Luxembourg)
கண்டம் : மேற்கு ஐரோப்பா
வருட வருமானம் : $ 81,466
மொத்த மக்கள் தொகை: 52 இலட்சம்
3.சிங்கப்பூர் (Singapore)
கண்டம் : தென்கிழக்கு ஆசியா
வருட வருமானம் : $ 56,694
தலைநகரம் : Singapore
மொத்த மக்கள் தொகை: 4.9 மில்லியன்
4.நோர்வே (Norway)
கண்டம் : வடக்கு ஐரோப்பா
வருட வருமானம் : $ 51,959
தலைநகரம் : Oslo
மொத்த மக்கள் தொகை: 4.9 மில்லியன்
5.புர்னே (Burnei)
வருட வருமானம் : $ 48,333
தலைநகரம் : Bandar Seri Pkawan
மொத்த மக்கள் தொகை: 3 இலட்சம்
6.அரபு எமிரேட்ஸ் (UAE)
வருட வருமானம் : $ 47,439
தலைநகரம் : Abu Dhabi
மொத்த மக்கள் தொகை: 8.2 மில்லியன்
7.அமெரிக்கா (US)
வருட வருமானம் : $ 46,860
தலைநகரம் : Washington DC
மொத்த மக்கள் தொகை: 313 மில்லியன்
8.ஹாங் காங் (HongKong)
வருட வருமானம் : $ 45,944
மொத்த மக்கள் தொகை: 7 மில்லியன்
Tuesday, July 3, 2012
வாகனங்கள் : பள்ளிக் குழந்தைகளின் நண்பனா ? விரோதியா ?
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று நமது சமுதாயம் சார்ந்த காலஞ்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி நமதூருக்கு பெருமை தேடித்தந்தவர்கள். இந்நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடு மற்றும் மேலை நாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் மேலும் வலுவூட்டும் விதமாக சில தனியார் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை திறம்பட செய்து ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.
சரி விசயத்துக்கு வருவோம், நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு கல்வி கற்பதற்காக சென்று வர பயன்படுத்துவது வாகனங்களையே குறிப்பாக ஆட்டோ, ஆம்னி வேன், குட்டி யானை போன்றவற்றில் நிற்கும் நிலையிலும், டிரைவர் சீட்டின் மிக அருகிலும், பின்புற சீட்டில் உட்கார்ந்தும் மற்றும் நிற்கும் நிலையிலும், தலை, கைகளை கரம் சிரம் புரம் நீட்டிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே இவை உள்ளன.
இதில் அதிக எடையுடன் கூடிய அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக மாணவ, மாணவிகள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவ, மாணவிகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர்.
அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வதனால் கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் மேலும் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் முதுகு கூன் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஒரு ஆட்டோவில் அரசின் விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்ட இவர்கள், ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்னுதாரனமாக கடந்த கால தின நாளிதழில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் நாம் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோரின் கனிவான கவனத்திற்கு !
இதுபோன்ற பாதுகாப்பாற்ற வாகனங்களில் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதி வேகத்தை தவிர்த்து, கூடுதலான குழந்தைகளை ஏற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.
தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் அச்சங்கள் நீங்கி அவர்களிடம் நற்பெயரை பெற்று பள்ளியின் தரம் மேலும் உயர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ( இன்ஷா அல்லாஹ் ! )
விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...................
Subscribe to:
Posts (Atom)