.

Pages

Saturday, April 13, 2013

[ 5 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

குழந்தைகள் எதிர்காலம் குறித்து பெரியவர்கள் உள்ளம் கேட்கும் MORE… MORE… என்று பிள்ளைக்கு அது ஆரோக்யமானதா ? என்பதை இந்த வாரம் காண்போம்.

குறிப்பாக இரண்டு விதாமான பார்வை ஒன்று தான் சாதித்த துறையில் தன் பிள்ளையும் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது. இரண்டாவது தான் பார்த்த தொழில் ஒருபோதும் தன் பிள்ளை வந்து விடக்கூடாது என நினைப்பதும் உண்டு.

டாக்டர், சமூகத்தில் நல்ல மதிப்பு, நல்ல வருவாய் மற்றும் உதவியாளர் என்று  பலர் இருப்பர், அதே போல திறமையான வழக்குரைஞர்கள், பெரிய  வர்த்தகர்கள் வாழ்வில் வளம்பெற்ற துறையினர் தனது பிள்ளையை அத்துறையில் வர ஆசைப்படுவர். பெரும்பாலான பிள்ளைகள் தந்தை வழியில் மிக இலகுவாக தொடர்ந்து விடுகின்றனர் அதற்கு காரணம் தெளிவான வழிகாட்டுதலே காரணம் பிள்ளைகள் உள்ளத்தில் நல்ல எண்ணத்தினை விதைப்பதுதான் காரணம். ஒரு சிலர் பிள்ளைக்கு அதிகமான சுமை கொடுத்து உள்ளத்தில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர் இலக்கு நிர்ணயிப்பது  இதனை நீ செய்தே ஆக வேண்டும் இல்லை எனில் உனக்கு அது கிடையாது என்பது அல்லது  தண்டனை கொடுப்பது போன்ற செயல்களால் பிள்ளைகளின் சகஜ நிலைகூட பாதிக்கப்படும்.

பெரிய நிலையில் உள்ளவர்கள் அதிக நேரம் அலுவலில் ஈடுபடுவதால் பிள்ளைகளுக்கு தொல்லை தருவதில்லை அதே போன்று தொழிலாளியாக கஷ்டப்படும் குடும்ப தலைவன் பிள்ளை எப்படியாவது படித்து பெரிய பதவியில் அமர வேண்டும் என்ற ஆசையே மேலோங்கி இருக்கும் அவர்களாலும்  பிள்ளைகளுக்கு தொல்லை இருக்காது.

ஆனால் படிக்காத, பரம்பரை சொத்துக்களை அனுபவித்து கொண்டு  வேலை பார்க்காத சிலர் தன்பிள்ளை  நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் ஆனால் எப்படி கையாள்வது என்று தெரியாமல் பிள்ளைகளுக்கு இலக்கு நிர்ணயிப்பது .செய்ய தவறினால் தண்டனை   அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் அதன் விளைவு பிள்ளைகளின் உள்ளம் கலக்கம் ஏற்பட்டு மன நோயாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது.

இதனை ஒரு சம்பவம் மூலம் விளக்க விரும்புகிறேன்...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் இயற்கையாகவே துருதுருப்பாய் இருப்பான் இரவு நேரங்களில் வீட்டு வாசலில் விளையாடுவது வழக்கம் ..ஒரு நாள் மகன் விளையாடுவதை கவனித்த தந்தை கர்னமிடுவதும்... பிறர் போல நடித்து காண்பிப்பது போன்ற செயல்களால் பிறரை மகிழ்வித்து கொண்டு இருந்தான் இது தந்தைக்கு பிடிக்க வில்லை. இனி இது போன்று செய்ய கூடாது என கண்டித்தார் தந்தை ஆனால் தந்தை இல்லாத சமயம் தனது சேட்டைகளை தொடந்தான் சிறுவன்...

ஒரு நாள் தந்தை இல்லை என்று நினைத்த சிறுவன் சேட்டைகளை தொடர ஆனால் தந்தை வீட்டினுள்ளே இருந்து கவனித்த வண்ணம் இருந்துள்ளார். அச்சிறுவனை அடித்து உதைத்தும் பிள்ளையை கலங்கடித்து விட்டார் தந்தையின் கண்டிப்பு என்ற பெயரில் ஒரு அராஜகத்தை  நிகழ்ந்த கொடுமையை அக்கம் பக்கத்தினர் பார்க்கத்தான் முடிந்தது தடுக்க முடியவில்லை .அதன் பின்னர் அச்சிறுவன் தந்தை மேல் .பயம் ஏற்பட்டு அதன் பின்னர் தந்தை என்றாலே பயந்த சிறுவன் சகஜ நிலைக்கே திரும்ப வில்லை நாற்பத்து ஐந்து வயதாகி விட்டது. ஆனால் சிறுவன் வயது நினைவுகளே அவனிடம் உள்ளது ..

பாவம் அவன் வாழ்க்கை கருகியது  தான் மிச்சம் !

தயவு செய்து பிள்ளைகளுக்கு தண்டனை என்று எதுவும் கொடுத்து விடாதீர்கள்.

எச்சரிக்கை செய்யுங்கள், அதை தான் உளவியல் வல்லுனர்களும் சொல்கிறார்கள்.

தண்டனை கொடுத்து விட்டால் பயம் தெளிந்து விடும்.

கவனம் தேவை !

அடுத்த ஆக்கத்தில் ஆசிரியரும்... மாணவனும்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

16 comments:

  1. குழந்தைகளின் நலன் கருதி உளவியல் ரீதியாக தொகுத்து சொன்னவிதம் அருமை

    துன்பியல் நிகழ்வை சுட்டிக்காட்டி முடித்திருப்பது தனிச்சிறப்பு

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..தம்பி நிஜாம் ...

      உள்ளம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்

      அனைத்தையும் இறைவன் ஒருவனே பொதுவான

      நிகழ்வை ஆராய்வோம் ..ஆதரவுக்கு நன்றி

      Delete
  2. பிள்ளைகளுக்கு கொடுக்கும் தண்டனை, தமக்கே கொடுத்து கொள்ளும் தண்டனை...

    MORE தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் ...

      தன்னை விட அதிகமாக பிள்ளைகளை நேசிப்பதுதான்

      ஆவேசத்திற்கு காரணம் அதுவே எதிர்மறை விளைவை

      ஏற்படுத்துகிறது ...நன்றி சகோ தனபாலன் அவர்களே ..!

      Delete
  3. பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கும் அளவுக்கு மனம் விரக்தி அடைந்து விட்டால் மூளை வளர்ச்சி குன்றிப்போய் மன நோய்க்கு ஆளாகிடுவர்.

    ஆகவே ஒவ்வொரு மரிணாம வளர்ச்சிபெறும் போதும் ஒவ்வொரு வகை அணுகு முறையை பிள்ளைகளிடம் கையாள வேண்டும்.

    நல்லதொரு அவசியமான உளவியல் கட்டுரை தொடரட்டும்
    அதிரை.சித்திக் அவர்களே.!

    வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே ...!

      தங்களின் கவி இலண்டன் தொலை காட்சியில்

      ஒலி பரப்பியதை அறிந்து மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள்

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம். பாராட்டக்குரியது.
    பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்கள், ஆனால் வேகத்தடையாக இருப்பார்கள்.

    எந்த இடத்தில் தடையாக இருக்கணும், எந்த இடத்தில் வேகத்தடையாக இருக்கணும் என்று சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.

    இது தடையா அல்லது வேகத்தடையா என்று சரியாக தெரிந்து கொள்வதில் இருந்து சில பிள்ளைகள் தவறி விடுகின்றனர்.

    குழப்பத்துக்கு காரணம் சில பெற்றோர்களும் பிள்ளைகளும்தான்.

    ஆக, இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், காரணம் காலம் அன்று போல் இல்லை.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்தை பதிந்தீர்கள் ஜமால் காக்கா

      Delete
  5. பிள்ளைகளுக்கு பிடித்ததை முதலில் ஆர்வம் மூட்டவேண்டும் அவர்களுக்கும் ஒரு திறமை ஒளிந்துகொண்டு இருக்கும் அதன் வழியில் நாமும் செல்லவேண்டும் அது நல்லதாக மட்டும் இருந்தால்.

    அவர்களை அடிப்பதுனாலையோ மிதிப்பதுனாலையோ அவர்கள் திருந்துவது கஷ்ட்டம் அன்பாலும் அறைவனப்பாலும் சொல்லிபாருங்கள் நிச்சயம் வெற்றிப்பெறுவார்கள்.

    பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆக்கம் அருமை சகோதர் சித்திக் அவர்களே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தம்பி ..இக்காலத்தில் பிள்ளைகளிடம்

      அன்பால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்

      கருத்திற்கு நன்றி சகோ ஹபீப்

      Delete
  6. // தயவு செய்து பிள்ளைகளுக்கு தண்டனை என்று எதுவும் கொடுத்து விடாதீர்கள்.//

    சரியாகச்சொன்னீர்

    ReplyDelete
  7. ஐந்தில் வளையாதது ஐமபதில் வளையாது

    ReplyDelete
    Replies
    1. முதியோர் சொல் முற்றிலும் உண்மை

      Delete

  8. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆக்கம் அருமை சித்திக் அவர்களே வாழ்த்துக்கள்.
    குழந்தைகளின் நலன் கருதி உளவியல் ரீதியாக தொகுத்து சொன்னவிதம் அருமை
    நலமோடு நல்ல பல கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்க எனது பிரார்த்தனை என்றும் உண்டு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers