.

Pages

Tuesday, October 22, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் !?

ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தார் அவருக்கு ஒரு ஆட்டு மந்தை இருந்தது தினமும் அதை மேய்த்துக்கொண்டு தனது காலத்தை போக்கி கொண்டு இருந்தார் தினமும் காலை சூரியன் உதயமானதும் ஆடுகளை மேய்பதற்காக காட்டுக்குள் செல்வார் மாலை வெயில் சாய்ந்ததும் வீடு திரும்புவார் இதுவரை ஒரு ஆடுகூட வேட்டை மிருகங்களிடம் அகப்பட்டது இல்லை.
       
ஒரு சமயம் இடையனுக்கு உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது  அது என்னவென்று அப்போது அவருக்கு புரியவில்லை நாட்கள் செல்ல செல்ல அவரின் குணம்,என்னம்,அனைத்திலும் ஒரு வித்தியாசமான மாற்றம். அது என்னவென்றால் ஒரு ஓநாயின் மூர்க்கம்,குணமும் அவருள் தோன்றியது ஓநாயின் குணாதிசயங்கள் அவருள் உருவெடுக்க அவர்  காட்டிற்குள் சென்றவுடன் அது அதிகமானது.
     
தான் மேய்க்கின்ற ஆட்டையே அடித்து தின்னும் அளவிற்கு அவரின் குணங்கள் மாறிப்போயின தினம் ஒரு ஆடு குறைய தொடங்கியது அவரை நம்பி ஆட்டை மேய்க்க அனுப்பியவர்கள் சிறிது காலம் கடந்தே  சுதாரித்து கொண்டார்கள் அவரை பின்தொடர்ந்து சென்று அவரின் நிலை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தனர் ஊர் மக்கள் அவரிடம் ஒப்படைத்த ஆடுகளை திரும்ப பெற்றுக்கொண்டு அவருக்கு நல்ல மருத்துவம் பெற ஏற்பாடு செய்தனர் அந்த ஊர் மக்கள். இவ்வளவு நேரம் படித்தது கதைதான் இனி உண்மை சம்பவங்கள்.

இன்றைய நாளிதழ்களில் வரும் தலைப்பு செய்திகளை வருசைப்படுத்துகிறேன்... 

1. பள்ளி மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியருக்கு அடி உதை 
2. டியுசன் வரும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசிய ஆசிரியர் கைது 
3. ICU வார்டில் அட்மிட்டான பெண்ணிடம் டாக்டர் பலாத்காரம்  
4. ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை செய்த ஆசிரியர்! பொது மக்கள் அடி உதை  
5. ஆபாச CD விற்ற தனியார் பள்ளி ஆசிரியர் கைது 
   
இது போன்ற செய்திகள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி தினசரிகளில் பார்க்க முடிகிறது என்ன காரணம் தன்னுடைய மாண்பு,மகத்துவம் தெரியாமல் ஆசிரியரும்,டாக்டர்களும் அத்துமீரும்போழுது இப்படி சம்பவங்கள் நடை பெறுகிறது தொழில் செய்பவரை தொழில் அதிபர் என்றும்,கட்டுமான வேலை செய்பவரை கட்டிட தொழிலாளி என்றும் கூறும் நாம் ஆசிரியர், டாக்டர் போன்றோரை ஆசிரிய தொழில் என்றோ மருத்துவத்தொழில் என்றோ கூறுவது கிடையாது மாராக ஆசிரிய பணி மருத்துவப்பணி என்று மகத்துவமாக அழைக்கிறோம் ஆனால் அவர்களோ தினசரிகளில் தவறான செயலுக்கு தலைப்பு செய்தியாகிறார்கள் வெளியே பயிரை மேய்தல் தகுமோ? இடையனின் ஓநாய் குணம்தான் பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மருத்துவர்கள் ஆவார்கள் அவர்களிடம் மனித குணம் தழைத்தோங்க செய்ய வேண்டும் தவறுகள் செய்யும் இவர்களுக்கு தண்டனை கூடுதலாக வழங்க வேண்டும் இவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள் ?  

காரணங்கள் பல கூறலாம். அது ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை சொல்வார்கள் இன்று 7 ஆம் வகுப்பு மாணவி ஹார்மோன்கள் மாற்றங்களால் கல்லூரி பயிலும் பெண்களைப்போல் தோற்றம் அளிக்கிறாள் அத்தகையோர்களுக்கு குட்டை பாவாடை சிருடையாக பள்ளி நிருவாகம் கட்டாயப்படுத்துகிறது.அதுவும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்
   
பள்ளிகளில் பாடங்கள் போதிக்கப்படும் அளவிற்கு ஒழுக்கங்கள் போதிக்கப்படுவது இல்லை ஆபாசங்கள் தலை விரித்தாடுகிறது இது போன்ற எண்ணற்ற காரணங்கள் சொல்லலாம் வாசகர்களாகிய தாங்களும் காரணங்களையும் ஆலோசனைகளையும் கருத்திடுங்கள்.

அடுத்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தைப்பற்றி பார்ப்போம்.
தொடரும்...
  மு.செ.மு.சபீர் அஹமது

16 comments:

  1. முதலில் அனைத்து விசயங்களிலும் பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு அவசியம் வேண்டும்...

    ReplyDelete
  2. கால சூழலுக்கேற்ற நல்லதொரு பதிவு. அருமை வாழ்த்துக்கள்.

    இக்காலகட்டத்தில் ஓநாய்களை ஒழிப்பது கடினமான காரியம்.காரணம் எல்லா ஓநாய்களும் பசுந்தோல் போர்த்திய ஓநாய்களாக இருக்கின்றன. ஆகவே நாம் நமது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. தற்காப்பு அறிவை சொல்லிக்கொடுக்கும் வயது அடையும் முன்பே கயவர்களால் சூரையாடப்படும் பிஞ்சுகள் ஏராளம்

    ReplyDelete
  4. திரையரங்குகளைக் கலக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு விமர்சங்களில் மதிப்பெண்ணைப் பெற்றுக் கொண்டிருக்கும் “ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்” திரைப்படத்தின் தலைப்பே, இக்கட்டுரைக்கும் இட்டு வாசகர்களைக் கவரும் உத்திக்கு முதல் “ஷொட்டு”

    அதிகமாக வலைத்தளங்களிலும், தாளிகைகளிலும் ஆய்ந்தெடுத்த அண்மைக்கால நிகழ்வுகளைக் கருவாய் வைத்து எழுதியமைக்கும் இரண்டாவது “ஷொட்டு”

    ஏற்கனவே, துபாய் மாப்பிள்ளை என்னும் கதை எழுதியபொழுதே உங்களின் கதாசிரியர் திறன்வியந்து, செயல்மறந்து வாழ்த்தியிருக்கிறேன்; என் வாழ்த்து வீணாகாமல், மீண்டும் மிகச் சிறந்த கதாசிரியராக வளர்ந்து வரும் எழுத்தாற்றலுக்கு மூன்றாம் “ஷொட்டு”

    பன்முக ஆற்றல் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் உங்களை எண்ணி வியக்கிறேன்; வாழ்த்துகிறேன்; மாஷா அல்லாஹ்!

    ReplyDelete
    Replies
    1. கவியன்பரின் உளமார்ந்த பாராட்டை பெற்று அகமகிழ்கிறேன் நம் வலைதளத்தில் நல்ல நல்ல படைப்புகள் மேலும் மேலும் வரவேண்டும் தங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    அருமையான படைப்பு.

    இன்றைய சூழலில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்படிதல் முற்றிலும் குறைந்து கொண்டு வருகின்றது, காரணம் என்னெவென்றால் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி விரிந்துகொண்டே போகின்றது, முடிவு தான்தோன்றிதனமாக வளரும் பிள்ளைகள், நட்புகள் போன்றவற்றால் சகிக்கமுடியாத சம்பவங்கள் நடக்கின்றன. அப்போ தூங்கிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் என்ன செய்யும்,

    இன்றைய ஸ்பெஷல் ஓநாய்கள் யார் யார் தெரியுமா? ஒரு சில தகப்பன்மார்கள், சகோதரன்மார்கள், கணவன்மார்கள்.

    மேலே சொன்னதுபோல் குடும்பத்தில் ஓநாய்கள் இருக்கும்போது, வெளியில் இல்லாமலா போய்விடும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. மேலும் நல்ல பல கருத்துக்களை சொல்லி இருக்கும் KMA.Jஅவர்களின் ஈடுபாடு நம் வலைதளத்திற்கு தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன்

      Delete
  6. விளைவு தவறு என்றால் வழிகளில் தவறுகள். எனவே கல்வி போதனைகளில் எதோ ஒரு கல்வி விடுதல்.

    அது வேறொன்றுமில்லை, மனிதனாக வாழும் வாழ்வியல் கல்வி. அது ஒன்று அவசியம் எல்லா வகுப்பிலும் சேர்க்கவேண்டும்.

    இன்றைய கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் சில மனித மனதில் ஆடு போன்ற இவன் சில சந்தர்ப்பங்களில் ஓநாய் ஆக மாறிவிடும் உணர்வுகளை தூண்டும் நிலையில் இருக்கின்றது.

    விதைத்ததுதானே முளைக்கும் !
    தேவையறிந்து விதையை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது வேறொன்றுமில்லை, மனிதனாக வாழும் வாழ்வியல் கல்வி. அது ஒன்று அவசியம் எல்லா வகுப்பிலும் சேர்க்கவேண்டும். [நபி தாஸ்]////
      உண்மைதான் வாழ்வியல் கல்வியை தரவேண்டியது ஆசிரியர்கள் அவர்களே ஒழுக்கமின்மையில் இருக்கையில் மாணவர் நிலை யோசிக்க வைக்கிறது அன்பரே

      Delete
  7. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்கலாம்.

    நியமிக்கும் மனநல ஆலோசகர்களை வைத்து பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கி வழிகேடுகளை தடுக்க முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  8. மிக மிக அருமை கதையும் காரணமும்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டை மனதார ஏற்கிறேன் வாழ்க வளமுடன்

      Delete
  9. வருடாந்திர விடுப்பில் 10 நாட்கள் ஆசிரியர்களுக்கு counselling மற்றும் பண்பாட்டு முறைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் .
    இவ்வளவு ஆவேசமாக நான் கூறுவதற்கு காரணம் இருக்கின்றது நான் இந்த கட்டுரையை தங்களுக்கு அனுப்பிவிட்டு பிரசுரம் ஆவதற்குள் இரண்டு பாதகமான விஷயம். "ஆசிரியர்கள் பற்றியது" செய்திகளில் கண்டேன் ஆதலால்தான் தொடரும் என தங்களிடம் பிரசுரிக்க சொன்னேன் இன்ஷா அல்லாஹ் அதன் விபரம் வரும் வாரம் காண்போம்

    ReplyDelete
  10. மேய்ப்பாளனின்..ஏய்ப்பால்...மந்தையே குறைந்த விந்தை ..
    அற்புதமான கதை ...ஆசிரியனும் ஒரு வகை மேய்ப்பாளன் தானே ...நல்ல விளக்கம் வாழ்க நண்பா

    ReplyDelete
  11. அருமையான விலக்கதோடு உங்கள் ஆக்கம் விழிப்புணர்வு மிக்க பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிக நல்ல பதிப்பு. வாழ்த்துக்கள்

    Mohamed Naina
    Dubai

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers