.

Pages

Friday, July 19, 2013

'கவித்தீபம்' கலாமின் 'தவம்'

அறிவிப்பு :
'கவித்தீபம்' என்னும் பட்டத்தை கவியன்பன் அபுல் கலாம் அவர்கள், இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து பெற்றுள்ளார்.

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் குழுமத்தின் சார்பாக 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களுக்கு பாரட்டுக்களையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.

தவம் :
வரம் என்னும் கனிதரும்
மரம் தான் தவம்!

இறைவனுக்கு
இணை கற்பிக்காத
முறையான வழிபாடும்
மேன்மை தரும் தவம்!

சுவனமென்னும் வரம்
சுபச்சோபனம் தரும்
கவனமுடன் நோனபாய்க்
கடைபிடிக்கும் தவம்!

ஏழைக்குரிய வரியை
ஈந்துவக்கும் நெறியை
ஆழமாய் நோக்கினால்
ஆங்குண்டு தவம்!

இறுதிக் கடமையாய்
இறையில்லம் நோக்கி
உறுதியுடன் பயணித்தல்
உண்மையிலே தவம்!

பாவம் களைந்து
பகைமை ஒழிந்து
கோபம் இல்லாக்
குணமே தவம்!

காட்டில் தனித்துக்
காட்டுதல் தவமன்று;
நாட்டில் நன்மைகள்
நாட்டுதலே தவம்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இக்கவிதை 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் 57-ஆம் பிறந்த நாளான [ 18-07-2013 ] அன்று இலண்டன் வானொலியில் ஒலிபரப்பட்டன. அதன் காணொளி இதோ...

18 comments:

  1. சர்வேதேச அளவில் இன்னும் பல படைப்புகள் எழுதி பல பட்டங்கள் பெற்று இளம் எழுத்தாளர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கவிக்குறளுக்கு பாரட்டுக்கள் - வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பின் விழிப்புணர்வு வித்தகரே! அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!

    நோன்பின் களைப்பை மறந்து, எங்களின் கலைப்படைப்பை எப்படியும் காலஅட்டவணைக்குள்/குறிப்பிட்ட திகதிக்குள் பதிவுக்குள் கொணரும் உங்களின் ஊக்கம் தான் எங்களின் ஆக்கத்தின் ஆணிவேராகும்!

    உங்களின் உளம்கனிந்த வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் உளம்நிறைவான் நன்றிகள்.

    என்றும் உங்களின் ஆசிகளைத் தேக்கி,,,,
    குன்றாப் புகழென்னும் சிகரத்தே நோக்கி,,

    இவ்வலைத்தளத்தின் ஒரு பங்களிப்பாளானாகிய தமியேனுக்கு இப்பட்டமும் மதிப்பும் சர்வதேச அளவில் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றதென்றால், அதில் இவ்வலைத்தள நிர்வாகியான உங்கட்கு இப்பாராட்டுகளைச் சமர்ப்பிக்கின்றேன்!

    பட்டங்களை அடியேன் தேடி அலைவதில்லை
    பட்டங்கள்/ அங்கீகாரங்கள் என்னும் அந்தஸ்தில் தரப்படும் ஓர் அரிய சான்றிதழ் என்பதாலும், அதனை மனமுவந்து அளிப்பவர்களின் மனம் நோகாமல் ஏற்பதென்பதை மட்டும் உளத்தூய்மையான நோக்கத்துடன் செயல்பட்டு, இச்சான்றிதழை ஈண்டு பதிய அனுமதிதேன். மேலும், சர்வதேச அளவில் நமதூர் கவிஞர்களும் அடியேனின் வழியில் அங்கீகாரம் பெற வைக்கும் ஓர் “ஊக்கம்” மட்டும் தான் இதன் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால், எண்ணோட்டமும், கண்ணோட்டமும் தவறாகிப் புரிதலில் குறைபாடுடையோர் எவரேனும் தவறான செய்திகளைப் பரப்பி விட வேண்டாம் எனபதற்காகவே இம்முன்னோட்ட தன்னிலை விளக்கமாகும்.

    ReplyDelete
  3. வரிகள் சிறப்பு...

    'கவித்தீபம்' பட்டத்தை பெற்ற கவியன்பன் அபுல் கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. என் சொந்த வலைத்தளத்தின் தொடர் வருகையாளாராகி இன்று என் நெஞ்சில் நிலைத்துள்ள அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அன்பான வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள்!

    ReplyDelete
  5. இனி கவித்தீபம் எனும் பட்டத்துடன் வலம் வந்து பல விழிப்புணர்வு கவிதைகளைத்தந்து நற்ப்பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க எனது உளம் நிறைவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அதிரைக் கவிஞர் மெய்சா அவர்களின் அகமுவந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அடியேனின் அகம்நிறைந்த நன்றிகள்.

      இறையருளால் இன்று நடந்தேறிய அபுதபி அதிரைபைத்துல்மால் கிளை திறப்பு விழாவில் உங்களை எதிர்பார்த்தேன்; கவிவேந்தர் சபீர் அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      Delete
    2. கவிதீபம் அவர்களே அதிரை பைத்துல்மாலின் அபுதாபிக்கிளை இப்தார் நிகழ்வு பற்றி எனக்கு யாதொரு அறிவிப்பும் தாங்கள் கூறவில்லை. நண்பர் சபீரிடம் தொலை பேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போது தான் அதுபற்றி சொல்லிக்காட்டினார். எனக்கு வருத்தமேதுமில்லை. நல்லவைகள் எங்கு நிகழ்ந்தாலும் தூரத்திலிருந்தே ஆதரிப்பேன்.

      Delete
    3. அதிரைக் கவிஞர் மெய்சா அவர்களே! அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை நிருபரில் விளம்பரம் செய்யப்பட்டது தான் தவிர மின் மடல் மூலமாகத் தெரிவிக்க வில்லை என்று நினைக்கிறேன்; இருப்பினும் என் முகநூல் வழியாகவும் அறிவிக்க அனுமதி பெற்று அவ்வண்ணம் செய்தேன். பரவாயில்லை; கவிவேந்தர் சபீர் சொல்லித்தான் உங்களையும் அவர் அழைத்ததாகவும் அறிந்தேன்; தனிப்பட்ட முறையில் அழைப்பிடாததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

      அல்லாஹ் உதவியால் நலமாய் நடந்தேறியது; அதற்காக தமியேன் 2 ரக் அத் ஹாஜத் தொழுகை தொழுது விட்டுத் தான் அறையை விட்டுப் புறப்பட்டேன்; என் துஆவை அல்லாஹ்வும் அங்கீகரித்து மிகச் சிறப்பாக நடந்தேறியது; விவரம் சற்று முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது; காண்க.

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    மச்சான் உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    மேலும் பல வெற்றிகளை கடந்திட துஆ செய்கின்றேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. அன்பின் மச்சான் ஜமால் முஹம்மத் அவர்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. கவியன்பன் அபுல் கலாம் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
    MAy "May Allâh reward him [with] goodness."
    jazaakkallah khairan

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அண்ணன் முஹம்மத் அலி ஜின்னா (நீடூர்) அவர்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

      Delete
  8. நாட்டில் நன்மைகள்
    நாட்டுதலே தவம்!

    வாழ்த்துக்கள் கவித்தீபம் கலாம்

    ReplyDelete
  9. உண்மையில் தவம் என்பது அஃதே என்பதைச் சுட்டிக் காட்டிய அன்பு நண்பர் அன்புடன் புகாரி அவர்கட்கு என் அகம்நிறைவான நன்றிகள்.

    ReplyDelete
  10. தங்களது கவித்தீபங்கள் பலரது அகத்தை வெளிச்சமாகியாதால் இன்று தங்களுக்கே 'கவிதீபம்' பட்டமாக வந்து அழங்கரிக்கப்பட்ட
    கவியன்பன் அபுல் கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    வாழ்க பல்லாண்டு !

    ReplyDelete
    Replies
    1. ஆம். அப்படியும் இருக் கலாம்!

      எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      உங்களின் அன்புநிறை வாழ்த்துகட்கு என்றன் உளம்நிறையும் நன்றிகள்! ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!

      Delete
  11. கவியன்பன் கலாம் அவர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் உங்களுக்கு நிறைய பட்டங்கள் வரவேண்டும். அதற்குரிய அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  12. முனைவர், அறிஞர் இ.அ. காக்கா அவர்களின் உளம்நிறைவான ஆசிகள் தமியேன் பெறும் பேறு என கருதுகிறேன்; தங்களின் மனம்நாடும் அனைத்தும் மாபெரியோன் அருளால் கிட்டும், இன்ஷா அல்லாஹ்.

    இஃது ஓர் சிற்றங்கீகாரம் மட்டும் தான்; இன்னும் சாதனைகளின் சோதனைகளில் அடியேனின் பங்களிப்புகளும் அதற்கான அங்கீகாரம் மற்றும் பட்டயங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன; காலக்கிரமத்தில் இன்ஷா அல்லாஹ் தங்களின் கண் முன்னே காட்சி தரும். பட்டங்களை யான் தேடிச் செல்லவே இல்லை; அல்லாஹ் என்னும் மாபெரியோன் என்பால் உள்ள அன்பால்- என் உழைப்புக்கு தரும் வெகுமதியாக இப்படிப்பட்ட கவரங்களைத் தருகின்றான் என்பதை மனப்பூர்வமாக எண்ணியே உளத்தூய்மையுடன் ஏற்கிறேன்.

    மேலும்,இலக்கியத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மற்றவர்களுக்கு சளைத்ததல்ல என்பதற்கு இத்தகைய அங்கீகாரங்கள் சான்று.

    இதை இதைத் தான் என் நோக்கமாக உளத்தூய்மையுடன் செய்தும், மண்ணின் மற்ற கவிஞர்களும் முன்வந்து பேறு பெற வேண்டும் என்பதே என் பேரவா!

    தமியேன் இணைந்துள்ள “சந்த வசந்தம்” என்னும் இணைய தள யாப்பிலக்கணக் குழுமத்தில் இதுகாறும் முஸ்லிம் கவிஞர் என்று சொல்லும் அளவுக்கு என் இனிய நண்பரும் என்னை மக்காவில் சந்தித்தவருமான கவிஞர் இப்னு ஹம்தூன் (ரியாத்) அவர்கள் மட்டுமே இருந்தார்கள்; இறையருளால் அடியேன் அடியெடுத்து வைத்தேன்; இப்பொழுது இப்பட்டயத்தை வழங்கி என்னை கவுரவப்படுத்தியுள்ள என் மரியாதைக்குரிய சகோதரி (இலங்கை)ஹிதாயாறிஸ்வி அவர்களையும் அழைத்துச் சேர்த்துள்ளேன்; இன்னும் முஸ்லிம் கவிஞர்களில் குறிப்பாக யாப்பின் வழிநின்று மரபுப்பாக்கள் மட்டும் வனையும் பலர் என்னிடம் அத்தளத்தில் இணைய காத்துள்ளன்ர் என் வழிகாட்டுதலின்படி. இப்படியாக, ஊடகம் என்னும் மாபெரும் ஈர்ப்புச் சக்தியுள்ள இணையத்தில் நம்மவரின் பங்களிப்பு அவசியம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

    ஜஸாக்கல்லாஹ் கைரன்!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers