kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, July 31, 2014
புத்தியைத் தீட்டு !
புடமிட்டத் தங்கமாகப் புத்தியைத் தீட்ட
தடம்வகுத்தே தந்தாரே தங்கனபி இங்கே
மடமைமிகு மாந்தரும் மான்புதனை நீக்கி
கடமையென உண்ணாமல் காட்டுகிறார் வாழ்வில்
நடுவினிலே நாயகன் நாட்டமே நிற்க
விடுதலிலே நற்பிறப்பு வீசிடுமாம், நோக்கம்
விடுபட்ட வீணர்கள் வேற்றுமையில் நின்றே
கடும்தவமாய் வேசங்கள் காண்பதே மிச்சம்
படைத்தவனும் ஆசையினைப் பாங்காகக் கூறி
நடைமுறைகள் பற்பலவை நாயகர் மூலம்
உடையவனே தந்தாலும் உற்றுநோக்க வில்லை
விடைகளிலே நீத வேற்றுமைகள் கண்டார்
தடைப்பட்டே ஒற்றுமை தங்காமல் வேறாய்
குடைகுடையாய் ஆகினக் கோலங்கள் பாராய்
எடையெடையாய் புத்தகங்கள் எத்தனை வந்தும்
விடைதனிலே சாந்திநிலை விட்டகன்றால் தோல்வியே.
நபிதாஸ்

Sunday, July 20, 2014
போலிகள் !? [ தரவித்தியாசங்கள் ]
அறிவுத்தேன் II
ஐந்தாவதாக சில பெரிய நிறுவனங்கள் தனது உற்பத்திசெயப்படும் பொருள்களுக்கு உதிரிப்பொருள்கள் அதே தரத்தில் தருவதில்லை. இதனை உபயோகிப்பாளர்கள் அப்பொருளின் பயன்பாட்டில் நன்கு உணர்வார்கள். ஒருவகையில் அடிக்கடி அவர்களின் முழுமை செய்யப்பட பொருளையே வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோர் வங்கும்படி செய்தலாகும். இந்த வகையில் சில நிறுவனங்கள் நுகர்வோர்கள் அப்பொருளை இடையிடையே சீர் செய்து பயன்பாட்டு தரத்தை நீண்டகாலம் அனுபவிக்க விடுவதில்லை. வியாபார இலாப நோக்கமே மையப்படுத்தப்படுகிறது.ஆறாவதாக சில பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் எல்லா நாட்டிலும் இலகுவாக உற்பத்திப் பொருள்கள் உடன் கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டாலும், அவர்களுக்கு இலாபம் அதிகப்படுத்தும் நோக்கிலும் வேறு சில நாட்டில் அவர்கள் அப்பொருளை உற்பத்தி செய்வார்கள். அவைகள் யாவும் ஒத்த தரம் உடையதாக இருப்பதில் சமம் இல்லை. அதிக தரம் உள்ளது எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. ஒரே பொருளின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி தரம் வேறுபாட்டால் உலக நுகர்வோர்களும் ஒருவகையில் பிரிக்கப்படுகிறார்கள். இதிலும் வியாபார இலாப நோக்கமே மையப்படுத்தப்படுகிறது.
ஒரு நிறுவனம் ஒருப் பொருளை திறமையாகவும், சிறந்ததாகவும், தன் நாட்டின் சட்டத் திட்டத்திற்கு உட்பட்டும், அதன் செயல்பாடு சோதனைகள் பல செய்தும் மனித பயன்பாட்டுக்கு குந்தகமில்லாமல் தரமானதாக உற்பத்தி செய்து, திருப்த்தியானவுடன் அதனைச் சந்தையில் விற்பனைச் செய்ய வரும். இது முறையான நல்ல வழிமுறையாகும்.
தரமானப் பொருள் என்பதால் அதன் மூலப்பொருளும், அது செய்யும் விதங்களும் உயர்வானதாக இருக்கும். அதனால் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். அந்தப் பொருளை வாங்கி உபயோகப்படுத்துபவர்கள் அதன் நம்பகத்தன்மை, அது உழைக்கும் விதம் அதனைப் பொருத்து அதன் விலை அதிகமாக இருந்தாலும் அதனையே விரும்பி வாங்குவார்கள்.
இவ்வாறு விற்கப்படும் பொருள் மிகப் பிரபலம் அடைந்து அதிகமாக விற்பனையானால், சில குறுக்குவழியில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் அந்த அசல் செய்து விற்பவர் பெயரிலேயும், அதனின் சந்தை அடையாளத்திலும் ( பிரான்ட் ) தரமற்ற நிலையில் அதே போன்ற உருவத்தில் ஒத்த நிலையாக போலிகளை உற்பத்தி செய்து இவர்கள் விற்பார்கள். இது முற்றிலும் தவறானது. தனது பெயரிலோ, தனது சந்தை அடையாளத்திலோ (பிராண்ட்) உற்பத்தி செய்து பொருள்கள் விற்பதில் தவறு இல்லை அது போலியாகாது. அசல் பொருள் செய்து விற்பவர்கள் இந்த போலிகள் செய்து விற்பவர்களைக் அடிக்கடிக் கண்டு பிடித்து தண்டனை பெற்றுத் தருவதும் உண்டு.
இந்த போலிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ,மூலப் பொருள்களின் தரத்தைக் குறைத்தும், அதன் உற்பத்தி முறையில் செலவுகள் குறைவான முறையிலும் அல்லது சில பொருள்களில் மூலப் பொருளையே மாற்றி அந்த அசல் பொருள் போலவே தோற்றத்திலும், அசல் உற்பத்தியாளர் பெயரிலும், பிராண்டிலும் அதனைச் செய்து முறையற்ற வழியில் விற்பனைக்கு விடுவதால், அது விலையில் மிகவும் குறைவானதாகவும், வாங்கி விற்பவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும் வகையிலும் இருக்கும். சிலர் அதனை அசல் என்று வாங்குபவர்கள் கவனத்தை ஈர்க்க அசலின் விலைக்கு சிறிது குறைவாக விலையிட்டும் விற்றுவிடுவார்கள்.
போலிகள் அல்லது தரமற்றவைகள் உபயோகத்தில் நீண்டகாலம் மட்டுமல்லாது செயல்பாடிலும் திருப்பதி இல்லாமல் இருக்கும். சில சமயம் உணவுப் பொருளானால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.
சில நடுத்தர மக்கள் தெரிந்தும் உணவுப் பொருள்களையும், பயன்பாட்டுப் பொருள்களையும் விலைக் குறைவானதாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
(தொடரும்)
நபிதாஸ்
Friday, July 18, 2014
[ 8 ] மகவே கேள் : நேசம் கொள் !
மகவே கேள் :
நேசம் கொள் !
அன்றாட வாழ்வில் நேசம் என்பது இன்றி அமையாத ஒன்று
நேசம் என்ற உணர்வு நேசம் கொள், மோசம் போக மாட்டாய்.
நேசம் என்பது ஒரு வழி பாதை. தியாக உணர்வு கொண்டது.
உதாரணமாக இல்லத்தரசி தன கணவன் மீது கொள்ளும் நேசம்
பணக்காரனாக இருந்தாலும் சரி... பரம ஏழையாக இருந்தாலும் சரி
அவன் மீது வைத்திருக்கும் நேச உணர்வு, கடும் கோபம் கொண்டபோதும் பரிவாய் சேவை செய்யும் பாங்கை கொடுக்கும்.
நேசம் என்ற உணர்விற்கும் .அன்பு என்ற உணர்விற்கும் நூலிழை
வித்தியாசம் .அன்பு உயிருள்ளவர்க்கு மட்டும் செலுத்த கூடியவை
ஆனால் நாம் ஒரு பொருளை நேசிக்கலாம் .அந்த பொருளை பேணி
பாது காப்போம் ....இயற்கையை நேசித்தால் ..அதற்க்கு பாதகம்
செய்ய மாட்டோம் ...மொழியை நேசித்தால் எந்த தேசம் சென்றாலும்
வாசித்து நேசிப்போம் .
* உன்னை நேசித்தால் ...நீ உன் உடல் நலம் காப்பாய்.
* உன் ..பொருளை நேசித்தால் ...அதனை பராமரிப்பாய்.
* உன் உறவை நேசித்தால் பொறுமை காப்பாய் .அவர் தம் வெற்றியில்
பெருமை கொள்வாய்.
* உன் மொழியை நேசித்தால் .பல புலமை கொள்வாய்.
* கல்வியை நேசித்தால் அறிஞனாகுவாய்.
* உழைப்பை நேசித்தால் ..உயர்வாய் வாழ்வில்.
* இறையை நேசித்தால் எல்லாம் அவனிடம் கேட்டு பெறுவாய்.
இறைஞ்சுதலும், வணங்குதலும் உன் வாழ்வில் தலையாய
கடமை என்பாய்.
* தாய் ..,தந்தையை நேசித்தால் .அவர்தம் பிள்ளைகளை (சகோதர்களை .,சகோதரிகளை ) பாசம் கொள்வாய்
* தேசத்தின் மீது நேசம் கொண்டால் நல்ல குடிமகனாய் .திகழ்வாய்
* நேசம், உன் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும் .
நேச வலையை மோசமான ஒன்றில் வீசி விடாதே.
விடுபட்ட நேசங்களை... என் அன்பு நேசர்களே பின்னூட்டம் மூலம் தாருங்களேன்...

அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Monday, July 14, 2014
போலிகள் !? [ உற்பத்தியாளர்கள் ]
அறிவுத்தேன் II
இதுவரை ஓர் உண்மை அல்லது ஒரு கருத்து அவரவர் அறிவின் நிலைக்கேற்ப சிதைந்து போலியாகிவிடுதலும், ஒருவரைப்போல் பேசுதல் அல்லது நடித்தல் போலியாகும் எனப் பார்த்தோம். இனி பொருள்களில் போலியைப் பற்றிப் பார்ப்போம்.
பொருள் போலியில் பலவகையுண்டு. ஒன்று, உணவுப்பொருளின் ஒத்த உருவத்தில் உள்ளவைகளை அந்தப் பொருளுடன் கலப்படம் செய்து மறைவான வழிகள் மூலம் சந்தைப்படுத்தி ஏமாற்றுவது . இது மகாக் குற்றம். மனித இனத்தை அழிக்கக்கூடியது. இவர்கள் தீவிர தண்டனைக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
இரண்டாவதாக, உணவல்லாத அனைவருக்கும் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் பொருள்கள். இவைகள் தரமற்ற மூலப் பொருள்களால் செய்து அசல் போலவே அசலின் பெயரிலேயும், அதன் சந்தைப்படுத்தப்பட்ட பெயர் (பிரான்ட்) பிரபலத்தை பயன்படுத்தி, மறைவானத் தவறான வழிகள் மூலம் சந்தைப்படுத்துவது. இவைகள் நீண்ட நாட்கள் உழைக்காது. அசல் உற்பத்தியாளருக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும். பயன்பாட்டாலருக்கும் ஏமாற்றுவதின் மூலம் பயன்பாடு நஷ்ட்டம் விளைவிக்கக்கூடியது. இவர்களால் தரமான பொருள் உற்பத்தி செய்ய முடியாமையினால், தரம் குறைவாக உற்பத்தி செய்தவைகளை அனைவராலும் பிரபலம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரான்ட் பெயரில் மறைவான வழிகள் மூலம் விற்பனைச் செய்வார்கள். இவர்களின் போலி உற்பத்திக் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
மூன்றாவதாக, எந்திரம், வாகனம் போன்றவைகளுக்கு உண்டான அடிப்படை பாகங்கள், உதிரி பாகங்கள், அதற்குண்டான அழகு, வசதி பொருள்கள். இவைகளும் நீண்ட காலம் உழைக்காது அல்லது கலர் அல்லது தாங்கும் திறனில் நிலைமாறும், சக்தி குறைவானது. அவசரத் தேவைகளுக்கு பயன்படும். அசலைப் போல் அங்கிகரிக்கப்பட்ட அவர்கள் பெயரிலேயே உற்பத்திச் செய்யும் இவர்களை கண்டுபிடித்து குற்றம் சாற்றப்பட்டால் தண்டனைக்கு உட்படுவார்கள்.
நான்காவதாக, மேற்கண்டவைகள் பிரபலமாக சந்தைப்படுத்தப்பட்ட பிராண்டில் ஒரு சில மாற்றம் செய்து, ஒத்த உச்சரிப்பு அல்லது ஒத்த தோற்றம் அமைத்து பயனாளர்கள் துரித கவனத்தில் தரமற்ற போலி எனப் படாமல் தந்திரமாக விற்பனை செய்வார்கள்.. இவர்கள் சட்ட விவகாரத்தில் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் பயனாளர்கள் கவனக்குறைவால் ஏமாறுவார்கள். சிலப் பயனாளர்கள் விபரம் புரிந்தாலும் அவசர தேவைகள் அல்லது விலை குறைவின் நிமித்தத்தால் வாங்கி பயன்படுத்தவார்கள்.

நபிதாஸ்Sunday, July 6, 2014
அடிப்படையும்... அல்லாதவையும்...
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் சிறப்பினில் கொண்டும்
பிடிப்புடன் திகழ்ந்திட முதலும்
.....பேற்றினில் உயர்ந்திடத் துணையும்
கம்பியும் மரங்களும் மண்ணும்
.....கற்களும் சிமிட்டியும் நீரும்
நம்பிட இல்லமாய் ஆகும்
.....நயத்தினில் மெச்சிடத் தகுமா ?
திறம்படக் கலைகளும் அமைத்தே
.....தேவைகள் நிறைந்திடச் செய்தே
சிறப்பினில் உயர்வினைப் பெறவே
.....சிலசில வசதிகள் மிகவே
இவ்விதம் சிறப்புகள் சமைத்தே
.....இருப்பிடம் திறம்பட அமைத்தே
அவ்விதம் யாவுமே கொண்டே
.....ஆகிடும் இல்லமும் நன்றே
வாகனம் சக்கரம் பொறியில்
..... வசதியாய் இருக்கையின் நெறியில்
பாகமும் பக்குவம் அமைத்தும்
.....பார்த்திடப் பாரினில் இல்லை !
அழகுடன் வசதிகள் நிறைந்த
.....அமைவினை நாடுவார் சூழ்ந்தே
தழுவிடும் இவைகளே இயற்கை
.....தலைவனும் அவ்விதம் முறையே
அடிப்படை வழிமுறைக் கடமை
.....அதைவிட அதிகமும் தேவை
அடியுடன் அதிகமும் சேர
.....அழகுகள் ஆற்றலும் கூடும்
அண்ணலும் தனிமையில் இணங்கி
.....அவனையே அதிகமாய் வணங்கி
உண்ணலும் உறக்கமும் குறைத்தே
.....உலகினில் அவனருள் நிறைந்தார்
வழக்கினில் வந்திடச் செயலும்
.....வழிகளில் கணக்கிட வேணும்
பழக்கமும் ஆகிடில் இன்னும்
.....பழுத்திடச் செய்யணும் வணக்கம்
எண்ணிட எல்லையும் இல்லை
.....எங்கனம் நினைப்பினில் எல்லை
உண்பதில் கணக்கிட வேண்டும்
.....உன்னிலே வணக்கமில் வேண்டாம்
அடிக்கடி மெருகிடப் பொன்னும்
.....அழகுடன் பளிச்சிட மின்னும்
துடிப்புடன் பற்றிடத் திகழ்வோம்
.....தூயவன் அருளினைப் பெறுவோம்
அடிப்படை வசதியை மட்டும்
.....அனைவரும் நாடலைச் சட்டும்
அடிப்படை அதனுடன் சேர்த்தே
.....அநேகமும் அழகுகள் பார்த்தே
விரும்பிடும் இல்லமும் நாடும்
.....விரைந்திடும் வாகனம் தேடும்
கருத்திதில் படிப்பினைக் கண்டே
.....கவனமும் கொள்ளுதல் நன்றே
அடிப்படை வணக்கமும் வேண்டும்
.....அதனுடன் அதிகமும் வேண்டும்
துடிப்புடன் நிகழ்த்தியும் சென்றார்
.....துயவனின் அருளினைச் சுமந்தார்
அனைத்திலும் அதிகமும் மனதில்
.....அவனையே வணங்குதல் கணக்கில் ?
நினைத்திட வேண்டியே இதனில்
.....நினைவுகள் கொட்டினேன் பதத்தில்
வணங்கிடப் படைத்தான் அவன்சொல்
.....வழியினில் குறைத்திடல் யார்சொல் ?
வணங்கிடும் ரகசியம் அறிந்தால்
.....வாழ்வுகள் வணக்கமாய் தெரியும்
சுருக்கிட நாடுதல் தகுமா ?
.....சுகங்களும் சுருங்கினால் புரியும் !
பெருக்கிட விரும்புதல் கொண்டே
.....பெரியவன் விரும்புவான் கண்டே
அடிப்படைக் கடமையும் ஆற்றி
.....அதனுடன் அதிகமும் போற்றி
பிடிப்புடன் வாழுதல் வேண்டும்
.....பிரியமும் காட்டுவன் அவனும்.
கருவினில் நழுவிடா நின்றே
.....கச்சிதம் கவனமும் கொண்டே
அருளினை அடைவது உண்மை
.....அவனது விருப்பமும் திண்மை
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் நிறைந்திடக் கொண்டும்
படிப்பினை இதனிலே நின்றும்
.....பக்குவம் பெற்றிடல் வேண்டும்.
நபிதாஸ்
அரையடிக்கு விளம் விளம் மா
.....அடுத்ததும் சிறப்பினில் கொண்டும்
பிடிப்புடன் திகழ்ந்திட முதலும்
.....பேற்றினில் உயர்ந்திடத் துணையும்
கம்பியும் மரங்களும் மண்ணும்
.....கற்களும் சிமிட்டியும் நீரும்
நம்பிட இல்லமாய் ஆகும்
.....நயத்தினில் மெச்சிடத் தகுமா ?
திறம்படக் கலைகளும் அமைத்தே
.....தேவைகள் நிறைந்திடச் செய்தே
சிறப்பினில் உயர்வினைப் பெறவே
.....சிலசில வசதிகள் மிகவே
இவ்விதம் சிறப்புகள் சமைத்தே
.....இருப்பிடம் திறம்பட அமைத்தே
அவ்விதம் யாவுமே கொண்டே
.....ஆகிடும் இல்லமும் நன்றே
வாகனம் சக்கரம் பொறியில்
..... வசதியாய் இருக்கையின் நெறியில்
பாகமும் பக்குவம் அமைத்தும்
.....பார்த்திடப் பாரினில் இல்லை !
அழகுடன் வசதிகள் நிறைந்த
.....அமைவினை நாடுவார் சூழ்ந்தே
தழுவிடும் இவைகளே இயற்கை
.....தலைவனும் அவ்விதம் முறையே
அடிப்படை வழிமுறைக் கடமை
.....அதைவிட அதிகமும் தேவை
அடியுடன் அதிகமும் சேர
.....அழகுகள் ஆற்றலும் கூடும்
அண்ணலும் தனிமையில் இணங்கி
.....அவனையே அதிகமாய் வணங்கி
உண்ணலும் உறக்கமும் குறைத்தே
.....உலகினில் அவனருள் நிறைந்தார்
வழக்கினில் வந்திடச் செயலும்
.....வழிகளில் கணக்கிட வேணும்
பழக்கமும் ஆகிடில் இன்னும்
.....பழுத்திடச் செய்யணும் வணக்கம்
எண்ணிட எல்லையும் இல்லை
.....எங்கனம் நினைப்பினில் எல்லை
உண்பதில் கணக்கிட வேண்டும்
.....உன்னிலே வணக்கமில் வேண்டாம்
அடிக்கடி மெருகிடப் பொன்னும்
.....அழகுடன் பளிச்சிட மின்னும்
துடிப்புடன் பற்றிடத் திகழ்வோம்
.....தூயவன் அருளினைப் பெறுவோம்
அடிப்படை வசதியை மட்டும்
.....அனைவரும் நாடலைச் சட்டும்
அடிப்படை அதனுடன் சேர்த்தே
.....அநேகமும் அழகுகள் பார்த்தே
விரும்பிடும் இல்லமும் நாடும்
.....விரைந்திடும் வாகனம் தேடும்
கருத்திதில் படிப்பினைக் கண்டே
.....கவனமும் கொள்ளுதல் நன்றே
அடிப்படை வணக்கமும் வேண்டும்
.....அதனுடன் அதிகமும் வேண்டும்
துடிப்புடன் நிகழ்த்தியும் சென்றார்
.....துயவனின் அருளினைச் சுமந்தார்
அனைத்திலும் அதிகமும் மனதில்
.....அவனையே வணங்குதல் கணக்கில் ?
நினைத்திட வேண்டியே இதனில்
.....நினைவுகள் கொட்டினேன் பதத்தில்
வணங்கிடப் படைத்தான் அவன்சொல்
.....வழியினில் குறைத்திடல் யார்சொல் ?
வணங்கிடும் ரகசியம் அறிந்தால்
.....வாழ்வுகள் வணக்கமாய் தெரியும்
சுருக்கிட நாடுதல் தகுமா ?
.....சுகங்களும் சுருங்கினால் புரியும் !
பெருக்கிட விரும்புதல் கொண்டே
.....பெரியவன் விரும்புவான் கண்டே
அடிப்படைக் கடமையும் ஆற்றி
.....அதனுடன் அதிகமும் போற்றி
பிடிப்புடன் வாழுதல் வேண்டும்
.....பிரியமும் காட்டுவன் அவனும்.
கருவினில் நழுவிடா நின்றே
.....கச்சிதம் கவனமும் கொண்டே
அருளினை அடைவது உண்மை
.....அவனது விருப்பமும் திண்மை
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் நிறைந்திடக் கொண்டும்
படிப்பினை இதனிலே நின்றும்
.....பக்குவம் பெற்றிடல் வேண்டும்.
நபிதாஸ்
அரையடிக்கு விளம் விளம் மா
Friday, July 4, 2014
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !
2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் :
GDP (PER CAPITA) : $ 56,694

GDP (PER CAPITA) : $ 51,959

5. புருனை :
GDP (PER CAPITA) : $ 48,333
GDP (PER CAPITA) : $ 46,860

GDP (PER CAPITA) : $ 41,950

10. நெதர்லாண்ட் :
நாணயம் : கோல்டன்
GDP (PER CAPITA) : $ 40,973
Subscribe to:
Posts (Atom)