kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, February 28, 2013
ஐ-ஸ்கிரீ[ம்]ன் வேண்டுமா !?
ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம் தான் ! ஏன் பெரியவர்களுக்கும் கூட ஆனால் சளி பிடித்துக் கொள்ளும், உடம்பு வெயிட் போட ஆரம்பித்துவிடும் என ஐஸ்கிரிமுக்கு பெரும்பாலும் தடா போடப்படும். வெறும் குச்சி ஐஸ், கோன் ஐஸ் இருந்த காலம் போய் இன்று வெண்ணிலா, கோக்கோ, மேங்கோ, நட்ஸ் ஃபில்டு என் விதவிதமாய் ஐஸ்கிரீம்கள் வந்துவிட்டன.
இப்படி மனதையும் நாவையும் மயக்கும் வகையில் வந்துவிட்ட ஐஸ்கிரீமில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதாம். கால்சியம் அதிகம் கொண்ட பால் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறுகின்றனவாம். ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் பல் ஈறுகள் வலுப்பெற்று பற்கள் பலமாகின்றன.
சாக்லெட் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்பது இன்றைய மருத்துவ ஆய்வின் முடிவாக இருக்கிறது. சாக்லெட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. பாலில் உள்ள ஆடைகளை நீக்கிவிட்டுத்தான் ஐஸ்கிரீம் தயாரிக்கிறார்கள் என்பதால் ஐஸ்கிரீமால் குண்டாவோம் என்பது தவறு. நொறுக்குதீனிகளை நிறைய சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தான்..!? பழி ஐஸ்கிரீம் மேல் விழுகிறது. ஐஸ்கிரீமை மட்டும் அளவாக சாப்பிட்டு வந்தால் உடும்பு குண்டாகாது.
ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே, பி12 ஆகியன உள்ளன இதனால் பார்வை கோளாறு, சிறுநீரகக் கோளாறு இருந்தால் கூட சரியாகிவிடும். உடலுக்கு தேவையான புரோட்டீன் எளிதில் கிடைக்க ஐஸ்கிரீம் சாப்பிட்டாலே போதுமாம் உடலில் உள்ள தசை திசுவை தினமும் சரி செய்யும் ஆற்றல் இந்த புரோட்டினுக்கு தான் உண்டாம். ஐஸ்கிரீம் தயாரிக்க தரமான தண்ணீரை உபயோகிக்க வேண்டும்.
கெட்டுப்போகாத பாலை உபயோகிக்க வேண்டும். சேர்க்கப்படும் எஸன்ஸ், ஜெலட்டின் பவுடர் அளவுக்கு அதிகமாக போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறீனால் ஐஸ்கிரீம் கிரீமாக இருக்காது. நீராகிவிடுமாம் !
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தலை வழி, ஜலதோஷம் வராது எற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அவை தீவீரப்படும். சைனஸ் பிரச்சனை இருந்தால் சாப்பிடக்கூடாது.
மழை காலதில் தான் அதிகம் பேர் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறார்களாம். அது உடலுக்கு சென்றவுடன் புத்துணர்ச்சியளிக்கிறதாம் ! தரமான கடைகளாக பார்த்து ஐஸ்கிரீம் வாங்க வேண்டும்.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஆய்வாளார்களுக்கு தனியார் விண்கலம் மூலம் ஐஸ்கிரீம் கப்புகளை அனுப்பி வைத்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும்போது ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவர்களின் உடலை சீராக வைக்க உதவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலே உள்ள செய்திகள் ஒரு தினப்பத்திரிக்கையில் படித்தது. நான் வைத்த தலைப்பிற்கும் நீங்கள் படித்த செய்திக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும் அல்லது தலைப்பில் எழுத்து பிழையோ என யோசிக்கத்தோனும் !? நிச்சயம் இல்லை !
உடல் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு அதுபோல் பார்வை கட்டுப்பாடு [ Eye Screen ] வேண்டும். ஆண்டவன் படைத்த அற்புதங்களை ரசிப்பதற்கு தான் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் அன்னியப் பெண்களை பார்வையால் ரசிக்கின்றனர்.
Youtube-ல் வரும் ஆபாசக் காணொளிகளை கண்டு களிக்கின்றனர் ஒன்றுக்கும் உதவாத நாவள் போன்றவைகளை பார்ப்பதை விட்டும் கண்ணுக்கு திரை இட்டு கொள்வது தான் ஐஸ் ஸ்க்ரீன் [ EYE SCREEN ]
Wednesday, February 27, 2013
[ 5 ] ஏன் பிறந்தாய்…?
நிலை தன்னில்
ஊசலாடும் நிலையினிலே
உயிர் காக்கும் நோக்கோடு
கார் என்னும் ஊர்தியிலே
ஏற்றி கொண்டு விரைந்தார்கள்
ஒரு குடும்பம்
ஒரு மணி நேரத்திற்குள்
வைத்தியமும் செய்ய வேண்டும்
விரைந்தததுவே வாகனமும்
வீதியிலே ஓர் கூட்டம்
வாகனத்தை மரித்ததுவே
விலை வாசி ஏறியதால்
சாலை மறியல் போராட்டம்
எங்கள்கட்சி...நேற்றே
அறிவித்தது தெரியாத
என்றதுவே அந்த கும்பல்
கட்சிஎனும் பெயரில்
மிரட்டியது அந்த கும்பல்
தலை பிரசவம்
வீறிட்டாள் ஒரு பெண்ணும்
வழி விட்டால் நல்லதப்பா
என்று ஒரு தனையன் கூறிடவே
கட்சி ஆணை என்று கூறி
கும்பலுமே மறுத்ததுவே
பொது தேர்வு எழுதிடவே
கிராமத்து மாணவனும்
கண் மலங்கி கேட்கின்றான்
பட்டணம் சென்று நானும்
பரிச்சை எழுதிடணும்
வழி விட்டால்
நடந்து நான் சென்றேனும்
பரிச்சை நான் எழுதிடுவேன்
இட ஒதிக்கீடு உனக்கும் தான்
கட்சி அது சொல்லுதடா
காலை முதல் மாலை வரை
சாலை அதை மறித்து விடு
என்று கும்பல் சொல்லியது
என்ன நியாயம் என்ன நியாயம்
ஏன் பிறந்தாய்
கட்சி எனும் கொடும் குணமே
[ கட்சியின் பதில் அடுத்த ஆக்கத்தில்... ]
அதிரை சித்திக்
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
Tuesday, February 26, 2013
[ 3 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !
நடுநிசி நேரத்துல
நானுந்தான் உறங்கல
கடுதாசி வரும்வரை
கதவையும் திறக்கல
என்னெஞ்சைப் புரிஞ்சவரே
எழுதுங்கக் கடுதாசி
மின்னஞ்சல் வேணாங்க
மின்னலாய் மறைஞ்சுடுமே
வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவைத் திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு
மண்ணுக்குள் உழுதாக்கி
மறைச்சு வச்ச விழுதாக்கி
எண்ணத்தை எருவாக்கி
என்னையே கருவாக்கி
கடுதாசிப் பூ தந்தாய்
காகிதப் பூ ஆனாலும்
தொடுநேசிப்பு உணர்ந்தேனே
தொடரும் மன வாசனையில்..
கண்ணுக்குள் வாழுமென்
கண்ணான மச்சானே
பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள
பொக்கிசமாய் வச்சானே
உண்"மை"யால் நிரப்பிய
உன்கடுதாசி என்பேனா
உண்மையில் மனசாய்
உள்ளதெனக் காண்பேனா ?
அழியாத காகிதம்
அதுவென் இதயம்
கிழியாத அதன்மேலெ
கிறுக்கினாய் உன்கடிதம்
அழியாத ஓவியம்
அழகான காவியம்
விழியோர முத்தம்
விழிக்கும் உணர்வின் சத்தம்
உன்கடுதாசிக் கவிதை
உள்ளத்தினுள் விதை
உன்கடுதாசிக் கதை
உரசி உணர்வூட்டும் சதை!
படுதாயின்னுப் பரிதாபமாய்ப்
பாடுவதாய்ப் படிக்கின்றேன்;
கடுதாசி என்னோடு
கதறுவதாய்த் துடிக்கின்றேன்!
தூக்கத்தைக் கலைச்சுப்புட்டு
தூரத்தில் இருப்பவரே!
ஏக்கத்தை விதைச்சுப்புட்டு
ஏனுங்கக் கடுதாசி ?
பாயும் பழமும்
பார்த்தென்னைச் சிரிக்குது
நோயும் நோவும்
நித்தமுமென அரிக்குது
கடுதாசி வேகத்திலெ
கடிதாக வாங்க மச்சான்
படுத்தாலும் தூக்கமில்லா
பரிதாபம் ஏங்க மச்சான் ?
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Sunday, February 24, 2013
[ 4 ] ஏன் பிறந்தாய்…?
நயம்பட உழைத்த
செந்நீரை [ இரத்தத்தை ]
வெந்நீராக்கி [ வியர்வையாய் ]
உழைத்த உழைப்பாளிக்கு
ஊதியம் கிட்ட
ஏங்கும் தருவாயில்
என் பிறப்பு
அவனுக்கு உவப்பு
வருட கணக்கில்
வளைகுடாவில்
வாழ்வை கழிக்கும்
எம்மவர்கள் விடுப்பு
ஏன் பிறப்பின் முதல் நாள்
வாழ்விற்கு வளம் சேர்க்கும் நன்னாள்
சிறு சேமிப்பின்
முதிர் தொகையும்
கிடைக்கும் நாள் என் பிறப்பே…!
உழைப்பாளிக்கு என் பிறப்பு
வசந்தத்தின் பிறப்பு
வாழ்வில் வளமில்லா சிலர்
விட்டியில் வீழ்வதால்
அவர்களுக்கு ஒவ்வொரு
விடியலும் கசப்பு தினமே
வரவுக்கேற்ற செலவு செய்தால்
ஒவ்வொரு விடியலும் வசந்தமே
ஏழ்மைக்கு ஏற்ற எளிமையான வாழ்வு
என்றும் நலமே
வருமானம் இல்லா வீட்டில்
வசதிக்கு ஆசை...! அது
சோம்பல் குடியிருக்கும் கூடாரம்
பிள்ளைகள் படிப்பிற்கு
நர்சரி என்பதெல்லாம்
பகட்டு சொல் மட்டுமே
பகட்டிற்கும் படிப்பிற்கும்
ஒரு நூலிழை இடைவெளியே
அரசு பள்ளி
படிப்பின் அசுர வளர்ச்சி
ஏழ்மைக்கு
எளிமையே தோழன்
வாழ வழியுண்டு
வருடங்கள் கடந்தாலும்
வலியில்லாமல் வாழலாம்
உழைத்தால் உயரலாம்
வல்லவன் வகுத்த காலம்
வதை செய்யாது ஒருபோதும்
நல்ல நேரம் கெட்ட நேரம்
என்பதெல்லாம் மனிதன் கூறும்
சாக்கு போக்கு நேரத்தினை
செலவிடவும் நேர்த்தியாக
கற்று கொண்டால்
நலம் பெயக்கும் எந்நாளும்
எந்நாளும் நன்னாளாய்
அமைந்திடவே வாழ்த்துகிறேன்
சோம்பலுக்கு துணை போகும்
கேபிலுமே தேவையில்லை
தவணை முறை பொருட்கள்
தாறு மாறாய் வாங்க வேண்டாம்
துயில் மறந்து
உழைத்தெழுவாய்
ஊதியங்கள் வந்து சேரும்
வெளிநாடு என்றில்லாமல்
உள்ளூரில் உயர்ந்திடுவாய்
பிறர் பிறப்பு ஒருபோதும்
உனக்கு தொல்லை தராது
என கூறி காலமது கடந்ததுவே
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
Saturday, February 23, 2013
நிதிநிலை அறிக்கை [ ‘பட்ஜெட்’ ] நீண்டதொரு கோரிக்கை !
...இடுக்கண் வந்தால்
முந்தியே எழுந்து
...முழங்கல் வேண்டும் !
திருச்சி அபுதபி
...தினமும் வானூர்தி
திரும்ப இயக்கிட
..திடமாய் வாக்குறுதி !
தங்கம் கொணர
..தாராளச் சலுகை
எங்கள் உழைப்பால்
..ஏராளம் வருகை !
அன்புடன் நடத்தும்
..அலுவலர் வேண்டும்
பண்புடன் பழகப்
...பயிற்றுதல் வேண்டும்!
கடவுச் சீட்டுடைக்
..காலம் ஆயுளைக்
கடக்கும் நாள்வரை
..காலம் நீட்டவும் !
:
பட்டம் பெற்றதும்
..பட்டென வேலை;
திட்டம் நன்றெனத்
..தீட்டுக நாளை !
தொலைபேசிக் கட்டணம்
..தொலைவாய் இலாமலும்
விலைவாசி ஏற்றமும்
..விரைவாய் இறங்குக !
சதிசெய் அரசியல்
..சண்டைகள் சரிசெய
நதிநீர்ப் பிரச்சினை
..நன்றென முடிக்கலாம் !
வேலிப் போலவே
..விதைக்கும் வரியால்
போலிச் சாமியார்ப்
..பிழைப்பும் ஒடுங்கும் !
ஒளிரும் இந்தியா
...ஒட்டுக்கு மட்டுமா
மிளிரும் திட்டமே
...மின்சாரம் கிட்டுமே !
ஆவனச் செய்க
..ஆக்கும் அறிக்கை
ஆவலும் மிஞ்ச
...ஆகும் நெஞ்சே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Friday, February 22, 2013
சூடான மேட்டரு !?
சூடான செய்திகள் பிரபல நடிகைக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், தந்தையே மகளை சூறையாடிய அவலம், ஓபாமாவின் செல்ல நாய்குட்டிக்கு உடல்நலக்குறைவு என இது போன்ற செய்திகளை தாங்கிய பத்திரிக்கைகளை விற்பதற்காக சிக்னல் அருகே ஒரு சிறுபையன் சப்தமாக கூவிக்கொண்டு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம் பத்திரிக்கையை வாங்கியும் இருப்போம் .
சூடான செய்திகள் என்ற பெயரோடு [ கேவலமான ] செய்திகளை முந்தித் தருவதில் முன்னணியாய் இருக்கும் பத்திரிக்கை என்ற விளம்பரத்தோடு பல பத்திரிக்கைகள் இன்று இயங்குகிறது.
சாமான்யர்களாகிய நாமும் அதைத்தான் விரும்புகிறோம். உதாரணத்திற்கு ஒரு உணவு விடுத்திக்கு சென்றால் சூடா என்ன இருக்கின்றது என்றுதான் கேட்கிறோமே தவிர சாப்பிடுவதற்க்கு ஆரோக்கியாமாக நல்ல பண்டம் ஏதும் இருக்கின்றதா ? என வினாவுவது இல்லை.
தொடர் வண்டி நிலையத்தில் சூடா இட்லி, வடை, பொங்கல் என்றுதான் கூறிக்கொண்டு போவார்கள் ! உடலுக்கு ஆரோக்கியமான சாப்பாடு என விற்பனை செய்வதை பார்த்திருக்கிறீர்களா ?
இதோ ஓர் உரையாடல் :
பயணி : ஏம்பா சூடா இட்லி வடைன்னு கூரிக்கொண்டு செல்கிறாயே சுவையான சத்தானதுன்னு எப்பவாவது கூவி இருக்கிறாயா ?
விற்பனையாளர் : சார் நான் பொய் பேசுவது கிடையாது !
பயணி : சந்தோசம், சூடானதுன்னு பொய் சொல்றியே ?
விற்பனையாளர் : தயார் செய்யும் போது சூடாகத்தான் இருந்தது சார்
பயணி : நல்லா சமாளிக்கிறியே வாழ்க்கையிலே நீ முன்னுக்கு வந்திடுவே.
நாம் அனைவரும் சூடான விஷயத்திற்கு ஆசைப்பட்டு கண்ட கன்றாவி செய்திகளை மேய்வதை தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதிக சூடு உடம்புக்கு ஆகாது !
சரி சமூக விழிப்புணர்வுக்காக இரண்டு சூடான செய்திகள்.
1. சூடான உணவை சாப்பிடுவது பற்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணும்.
2. வருகிறது வெயில் காலம் வெள்ளரி, இளநீர் போன்ற உணவை உட்கொண்டு உடல் சூட்டை தவிருங்கள்.
சரி நண்பர்களே உடல் சோர்வாக இருக்கின்றது சூடா ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருகிறேன் மீண்டும் சந்திப்போம் [ இறைவன் நாடினால் ! ] வேரு ஒரு தலைப்பில்...
மு.செ.மு.சபீர் அஹமது
Wednesday, February 20, 2013
இப்படியும் ஒரு சந்தேகம் !
ஒரு சிறிய கிராமம். கதையின் நாயகியான சிறுமி, தன் சக மாணவிகளுடன் காலைப்பொழுதில் சிறிது தொலைவிலிருந்த குர்ஆன் மதரசாவில் ஓதச் செல்பவள். திரும்பி வரும் நேரத்தில் அக்கிராமத்தைக் கடந்து செல்லும் ஒரே ரயில் வரும்வரை தாமதித்து நின்று அதற்கு டாட்டா சொன்ன பிறகு தான் அனைவரும் வீடு திரும்புவர்.
வளர்ந்து பெரியவளானதும் அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவனுக்கு துபையில் நல்ல வேலை. இவளையும் துபைக்கு அழைத்துச்செல்ல எல்லா ஏற்பாடும் ஆகிவிட்டது. புறப்பட வேண்டிய நாளும் வந்தது. பிறந்து இவ்வளவு காலம் வாழ்ந்த ஊரை மீண்டும் எப்போது காண்போமோ ? என்ற ஏக்கம் அவளுக்கு பிரயாண நாளின் காலையில் ஊரை ஒரு முறை சுற்றிப்பார்த்து விட்டு வரும் ஆசையை கணவனிடம் தெரிவிக்கிறாள். அவனும் சம்மதிக்க, இருவரும் வெளியே செல்கின்றனர். அவள் சிறு வயதில் ஓதிய மதரஸா……வழியில் ரயில் கடக்கும் பாதை…
அந்நேரத்தில் ரயில் வருகிறது. ஆசையுடன் நின்று பார்த்துக்
கொண்டிருக்கிறாள். அவளை அறியாமலேயே அவளது கை உயர்ந்து
அப்பாவித்தனமாக ரயிலுக்கு டாட்டா சொல்கிறது. ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த எவனோ ஒருவன் பதிலுக்கு கையசைத்துச் செல்கிறான்.
கணவனை சந்தேக நோய் பற்றுகிறது. "யார் அவன் ?" என்று கேட்கிறான்.
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவள் "சத்தியமாக எனக்குத் தெரியாது"
என்கிறாள். கணவன் ஒன்றும் பேசவில்லை. வீடு திரும்பும் வழியிலும் பேசவில்லை. பிரயாண நேரம் வந்தும் பேசவில்லை. தன்னுடைய உடைமைகளை மட்டும் எடுக்கொண்டு அவளை விட்டு விட்டு தனியாக புறப்பட்டுச் சென்று விடுகிறான் அனலிலிட்ட புழுவாக அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள்...
கண்ணால் பார்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தலே சரியான தீர்வாக இருக்கமுடியும் விட்டு விட்டு போன கணவனும் மனபுழுக்கத்துடன் தான் [சந்தேக எண்ணத்தோடு] சென்றிருப்பான். சந்ததேகமெனும் கொடிய நோயிலிருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக
முஹம்மது சலீம்
குறிப்பு : தோப்பில் மீரான் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதை
Tuesday, February 19, 2013
மின்வாரியமும்...!? அவர்களின் மின் விநியோகமும்...!?
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு அழகான ஊர் உள்ளது என்றால் அதுதான் அதிரை என்று அழைக்கப்படும் அதிராம்பட்டினம். கிழக்கு மேற்கு வடக்கு இம்மூன்று பகுதிகளையும் நிலத்தாலும் தெற்கு பகுதி;யை கடலாலும் ஆகிய எல்லைப்பகுதிகளை கொண்டதாகும்.
இவ்வூரில் கல்விக் கூடங்கள் பலவகையான வங்கிகள் மருத்துவமனைகள் சிறிய மற்றும் பெரிய வணிக மையங்கள் அதோடு தொழிற்சாலைகள் சமுதாய அமைப்புகள் அதோடு சமுதாய கூடங்கள் நற்பணி மன்றங்கள் இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டுபோனாலும் கடைசியாக வந்தோரை வாழவைக்கும் ஊர் எங்கள் அதிரையூர்.
அதிரைக்கு மின் இணைப்பு 1957-ம் ஆண்டில் வழங்கப்பட்டது அதே ஆண்டில்தான் நம் இந்தியாவில் செம்பு உலோகத்தாலான ஒருபைசா அதாவது நயாபைசா என்று அழைக்கப்பட்ட நாணயமும் வெளியிடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது மேலும் நான் பிறந்ததும் 57-ல்தான் என்றால் அதுவும் எனக்கு ஒருவகையில் சந்தோஷமே அதேநேரத்தில் இந்த 56-வருடங்களை கடக்கும் இந்த மின் இணைப்பைக் குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது காரணம் அந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்தின் வரவு ஒரு ஒளிமயமான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் அன்று 1957-ல் அதிரையின் மையப்பகுதில் ஒரே ஒரு மின்மாற்றியைவைத்து ஏறக்குறைய அநேக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் விவசாயப் பகுதிகளுக்கும் மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வந்தார்கள்.
இன்று அதிரையில் துணை மின்நிலையத்தையும் அமைத்து அதிலிருந்து பெறப்படும் 11000 ஆயிரம் உயர்மின்அழுத்தத்தை வைத்து 110-க்கும் அதிகமான மின்மாற்றிகளை நிறுவி மின்சாரத்தை வழங்கி வந்தாலும் அதிரையின் முழுத் தேவையை மின்வாரியத்தால் முழுதும் பூர்த்தி செய்யமுடியாமல் திணறுகின்றது என்றால் அதுவே உண்மை. காரணம் பல இருந்தாலும் ஏன் இந்த நிலை ?
இன்று அதிரையில் துணை மின்நிலையத்தையும் அமைத்து அதிலிருந்து பெறப்படும் 11000 ஆயிரம் உயர்மின்அழுத்தத்தை வைத்து 110-க்கும் அதிகமான மின்மாற்றிகளை நிறுவி மின்சாரத்தை வழங்கி வந்தாலும் அதிரையின் முழுத் தேவையை மின்வாரியத்தால் முழுதும் பூர்த்தி செய்யமுடியாமல் திணறுகின்றது என்றால் அதுவே உண்மை. காரணம் பல இருந்தாலும் ஏன் இந்த நிலை ?
நேரம் அறியாத அறிவிக்கப்படாத மின் வெட்டால் பள்ளிகளுக்கு செல்லும் மற்றும் உயர் கல்வியை பயின்று எதிர்காலத்தில் நம் பாரத இந்தியாவை வல்லரசாக மாற்றத் துடிக்கும் மாணவச் செல்வங்கள் தினம் தினம் அன்றாட வாழ்;க்கையை தொடங்கும் குடும்பங்கள் வேளைகளுக்கு செல்லும் பலதரப்பட்ட பணியாட்கள் ஏகப்பட்ட தொழில் மற்றும் வணிக மையங்கள் விவசாயிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனகைள் ஆக மொத்தத்தில் எல்லாமே நிலைகுழைந்து காணப்படுகின்றன. இது ஒரு ஊரில் என்றால் இதுபோல் தமிழகத்தில் எத்தனை ஊர்கள் உள்ளன ?
பொதுமக்களின் பொறுமைக்கு ஒரு நல்ல ஒளிமயமான எதிர்காலம் உண்டு நம் தமிழக அரசும் இந்த மின்வெட்டிலிருந்து விடுதலையடைய அதிதீவிரமாக செயல்பட்டுவருகிறது என்றால் அதுவே உண்மையிலும் உண்மை.
வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்டண மீட்டரில் உள்ள அளவுகளை குறித்துக்கொண்டும் அந்த அளவுகளுக்கான மின் கட்டணம் எவ்வளவு என்பதனை அவரிடம் உள்ள ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட வேண்டிய தொகையினை குறித்துக் கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகையை நாமும் அப்படியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்திவிட்டு வருகின்றோம்.
வீட்டு இணைப்புகளுக்கு:
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூ.1.00
நிலைக்கட்டணம் இல்லை.
நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும்தான் கூடுதலாக எந்த கட்டணமும் கடையாது.
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.1.50
நிலைக்கட்டணம் ரூ.20.00
நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 இதோடு நிலைக்கட்டணம் ரூபாய் 20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.2.00
201-500 யூனிட் வரை ரூ.3.00
நிலைக்கட்டணம் ரூ.30.00
நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை ரூ.2.00 வீதம் ரூ.400.00ம் மீதம் உள்ள 10 யூனிட்டுக்கு ரூ.3.00 வீதம் ரூ.30.00ம் நிலைக்கட்டணம் ரூ.30.00 ஆக மொத்தம் ரூ.460.00 செலுத்தவேண்டும்.
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.3.00
201-500 யூனிட் வரை ரூ.4.00
500க்கு மேல் ரு.5.75
நிலைக்கட்டணம் ரூ.40.00
நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.00 வீதம் ரூ.600.00ம் அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ.4.00 வீதம் ரூ.1200.00ம் மீதமுள்ள 10 யூனிட்டுக்கு ரூ.5.75 வீதம் ரூ.57.50ம் நிலைக்கட்டணம் ரூ.40.00 ஆகமொத்தம் ரூ.1897.50 நீங்கள் செலுத்த வேண்டும்.
கடைகளுக்கானது:-
1-100 யூனிட் வரை ரு.4.30.
100 யூனிட்டுக்கு மேல் உபயோகித்தால் 1 யூனிட்டுக்கு ரூ.7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிற்று ரூ.120.00 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, February 18, 2013
[ 3 ] ஏன் பிறந்தாய்...?
ஏன் பிறந்தாய்
வட்டிக்காரன் வாசலிலே
வசைபாடி நிற்கின்றான்
கேபிள் காரனவன்
கொடுக்கின்றான் பெரும் செலவை
பாலுக்கு மணியடித்து
அழைக்கும் பால்க்காரன்
பணம் கேட்டு அழுகின்றான்
நர்சரி பள்ளிக்கு
நலமாக செல்லும் பிள்ளை
தயங்கி போக மறுக்கிறது
ஆசையாக வாங்கி வந்த
தவணை திட்டம் பொருட்களுக்கு
தந்து விட்டான் எச்சரிக்கை
தவணை கட்டாது
போகுமாயின் பொருட்களையும்
எடுத்து சென்றிடுவேன்
என்று மிரட்டுகிறான்
இதற்கிடையே வீட்டுக்காரன்
வாடகை என்ன ஆச்சு என்று
இருமளால் சைகை காட்டிவிட்டான்
ஏன் பிறந்தாய் முதல் திகதியே
நிம்மதியை குலைப்பதற்கா
ஏன் பிறந்தாய்...?
[முதல் தேதியின் பதில் அடுத்த ஆக்கத்தில் ]
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
Sunday, February 17, 2013
வினோதினிகளுக்கு அறிவுரை !
வினோதினி மரணச் செய்தி கேட்டு மரணத்திற்கு காரணமான சுரேஷ் அதிர்ச்சி. தன்னாள் மரணமடைந்த, தன்னை விட்டு பிரிந்த வினோதினியின் இடத்திற்க்கே என்னையும் கொண்டுபோய் சேர்த்திடுங்கள் என்னை தூக்கிலிடுங்கள் என்று புலம்பல். இது செய்தியாக ஒரு பத்திரிக்கையில் கண்டேன் !
நாமெல்லாம் வினோதினி மரணச் செய்தி கேட்டு வருத்தப்பட்டோம் ஒரு துளி கண்ணீர் விட்டோம். மரணத்திற்கு காரணமான அந்த ஆடவன் தன்னுயிரை எடுக்கச்சொல்லி கதறுகிறான் புலம்புகிறான் தன்னுயிரை துச்சமாக கருதுகிறான். தான் காதலித்த பெண்னவளை படுகாயப்படுத்தி பரிதவிக்க விட்டு பரலோகம் அனுப்பிய படு பாதகச்செயலை செய்துவிட்டு இன்று தன்னுள் புலம்புகிறான் காரணமென்ன ?
பொதுவாக ஓர் ஆண் தன் பெண் நண்பர்களோடு பழகையில் நன்றாய் பழகினாளே காதலை சொல்லும் பொழுது தவிர்க்கிறாளே காரணம் புரியாது பரிதவிக்கின்றனர் பல ஆடவர்கள். சிலருக்கு வேரு சம்பவங்கள் காதலை ஏற்றுக் கொண்டவள் வேரு வசதியுள்ள ஆடவர் கிடைக்கயில் முதலாவது காதலித்த ஆடவண் கைவிடப் படுகையில் பாதகச்செயலை செய்து விடுகிறான்.
ஓர் ஆணும் பொண்னும் தனிமையில் இருக்கையில் சைத்தானும் கூடவே இருக்கிறான் இது முஹம்மது [ ஸல் ] அவர்களின் பொன்மொழி கூடப்பிறந்த இரு பாலினரும் சிரு வயதில் ஒன்றாய் படுத்துறங்கியதை வயதிற்கு வந்த பின்னும் தொடர்வது எப்படி சரியில்லையோ அது போல்தான்
அன்னிய ஆணுடன் பெண்ணும் அன்னிய பெண்ணுடன் ஆணும் பழகிடலும் கூடாது.
Boy Friend, Girl Friend கலாச்சாரம் ஆபத்தில் கொண்டுபோய் முடியும் பழகும் போதே விலகி இருந்தால் பாதகச் செயலுக்கு வேலை இல்லை.
Friday, February 15, 2013
[ 2 ] ஏன் பிறந்தாய்…?
நாளும் அறியுமுன்னே
நல்ல ஒரு பொருள் கூறி
உனக்கு நானுமதை
விளக்குகிறேன்
தங்கமது உசத்தி என்று
தரணிக்கே தெரியுமையா
குண்டுமணி நகையானாலும்
பாதுகாப்பாய் வைக்க வேண்டும்
பொன்னை விட பெண்ணை தான்
தரமாக மதித்திடனும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைக்கு
பாதுகாப்பை கொடுத்திடனும்
பள்ளியறைக்கு அழைக்கும்
பாதகனின் கண்ணுக்கு
குளிர்ச்சியான ஆடைகள்
அணியாமல் அலங்காரம்
பல செய்து ஆசையையும்
தூண்டாமல் பத்திரமாய்
அனுப்ப வேணும்
ஆசைக்கு இணங்காத
பெண்ணுக்கு ஆசிட்டை
ஊற்றும் காலமிது
ஆசையை தூண்டும்
அங்கங்கள் மூட வேண்டும்
ஆணுக்கு சமமாக
அலைவதையும் தடுத்திடனும்
பணத்தாசை பிடித்த இடம்
மனதாலும் தொட வேண்டாம்
தாயாக இருக்கும் பேரு
பெண்மைக்கு உள்ளது தான்
தாய் செய்யும் கடமைகள்
தவறாமல் செய்தாலே
தரித்திரங்கள் ஒரு போதும்
முதுமையத்தில் வந்திடாது
பேருந்து பயணமதில்
தக்க துணை யோடு
நடுநிசி நேரமில்லா
பயனமத்தை கொள்ள வேண்டும்
வீட்டிற்கு பெண்
விளக்காக இருந் தாலே
ஏன் பிறந்தாய் என்ற சொல்லும்
ஒரு போதும் வந்திடாது
அந்நியனின் கண்ணுக்கு
அசிங்கமாக தெரிந்திடனும்
குரலில் கூட இனிமைதனை
அன்னியருக்கு காட்டாதே
வீட்டில் இருக்கும்போதும்
அன்னியர்கள் விவரங்கள்
கேட்க வந்தால் தடித்த
குரலில் பதில் தரவே
திருமறையும் கூறுகிறது
பெண் என்றால் போன்னன்றோ ..
பெண் உரிமை என்று சொல்லி
பெண் விடுதலை என்று சொல்லி
பெண்ணை போக பொருளாய்
பார்ப்போரை ஏன் பிறந்தாய்
என்று கேளும் என்று
பதிலுரைத்தாள் பெண் அவளும்...!
ஏன் பிறந்தாய் ? தொடரும்...
அதிரை சித்திக்
Wednesday, February 13, 2013
We Know... வினோதினி !
சிக்கிக் கொண்டவளே
வாழ்க்கை கனவுகள்
பலகண்டவளே
பாவிமகன் வீசிட்ட ஆசிட்டில்
தன்னுயிரை மாய்த்தவளே
வினோதினி உன்னை
நண்பர்கள் செல்லமாய்
வினோ என்றழைப்பர்
அதை We Know
உன் பெற்றோர் பட்ட
வேதனையும் We Know
ஆண் மகனின்
ஆணவம்தான் We Know
அன்பாய் அழகினாலும்
ஒரு அடி தள்ளி நின்று
பழகிடல் நன்று
என்பதையும்
போதித்து விட்டாய்
வினோ [We Know]
வினோதினி !
நீ தீனியானாய்
மரணத்திற்க்கு
சிறிது காலமாய்
பத்திரிக்கைகளுக்கும்
தீனியானாய்!
ஏனியாவாய்
என காத்திருந்த
பெற்றோருக்கு?
வயிற்று பசிக்காக
வேலை செய்யவரும்
பெண்களுக்கு
உங்கள் காமப்பசிக்கு
இரையாக்கிட நினைக்காதீர்
ஆடவரே
Tuesday, February 12, 2013
ஏன் பிறந்தாய்...?
நீ ஏன் பிறந்தாய்
பள்ளி செல்லும் உன்னை
பள்ளியறை அழைக்கும்
பாதகர் நிறைந்த பூமியில்
ஏன் பிறந்தாய் பெண்ணே...!
உன் முக அழகை
பார்த்து பார்த்து
ஒரு தலை காதலால்
ஈர்த்து ஈர்த்து
தன்வய படுத்த எண்ணி
தோற்ற கயவன்
உன் முகத்தை
தீ நீரால் சிதைக்கும்
கயவன் நிறைந்த
பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே..!
மலராய் மலர்ந்து
மனம் கமழும் உன்னை
மணமுடிக்க பணம் கேட்கும்
கயவர் பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே
மனித இனம் பெருகிடவே
மகத்துவத்தை உன்னிடமே
வல்ல இறை தந்து
தரணியிலே தாய் என்று
போற்ற படவேண்டிய நீ
தள்ளாத வயதிலுமே
தண்டிக்க படுகின்றாய்
தரணியிலே வந்து நீயும்
வேதனைதான் பட்டிடனுமா...?
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்
பேருந்தில் சென்றாலும்
போக பொருளாய்
பார்க்கும் காலத்தில்
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்...
[ பதில் அடுத்த ஆக்கத்தில்... ]
ஏன் பிறந்தாய் ? தொடரும்...
தண்ணீர் சேமிப்பீர் !
தண்ணீர் ஆம் அது ஒரு இயற்கையின் வரம் என்றே சொல்ல வேண்டும் தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை அந்த அளவுக்கு உலக மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததே.
பண்டைய காலங்களில் வாழ்ந்து வந்தவர்கள் ஆங்காங்கே குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் வெட்டி மழைநீரை சேமித்து தடையில்லா தண்ணீரைப் பெற்று வந்ததோடு குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் எந்த விதத்திலும் மாசுபடாதவாறு காத்துவந்தார்கள்
ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரை எப்படி சேமிப்பது தண்ணீரை எப்படி மிச்சப்படுத்துவது தண்ணீரை தடையில்லாமல் பெற என்ன செய்வது இன்னும் பல கோணங்களில் சிந்தித்து ஆய்வுகளை நடத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்த உலகம் இருந்தாலும் தண்ணீரினால் ஏற்பட்ட தின்டாட்டங்களும் போராட்டங்களும் குறைந்தபாடில்லை தீர்வும் கிடைத்தபாடில்லை.
மூன்றாவது உலக யுத்தம் வந்தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான் என்று பல வருடங்களாக அறிஞர்களும் விஞ்ஞானிகளும்; எச்சரித்து வருகிறார்கள்.
மனித வரலாற்றில் பல வகையான நாகரீக சமூகங்களும் பல வகையான உயிரினங்களும் பல வகையான தாவரங்களும் அடியோடு அழிந்து போனதற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.
ஏற்கனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையைவிட பெரியவை. எனவே ஆறு குளம் ஏரி கிணறு இவைகளை மாசுபடுத்தாமல் காப்பது மணற் கொள்ளையை நிறுத்துவது மழை நீர் சேகரிப்பு கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தை கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.
இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஒரு ஆய்வு நடத்தனால் ஏகப்பட்ட குளங்களும் ஏறிகளும் ஆறுகளும் கிணறுகளும் காணாமல் போய்விட்டது இருக்கின்ற ஒரு சில குளங்கள் ஏறிகள் ஆறுகள் கிணறுகள் இவைகளை சுத்தமாக தூர்வாரி அதன் எல்லாப் பக்கங்களிலும் வலுவான உயரமான மண் அடைப்டபுகளை இட்டால்கூட ஓரளவுக்கு தண்ணீர் பற்றாக் குறையிலிருந்து தமிழகம் மீளமுடியும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் வசதியுள்ள இடங்களில் தடுப்பணைகளைகட்டி ஆங்காங்கே மழைநீரை சேமித்தால் நமக்கு முல்லை பெரியாரும் தேவையில்லை காவிரியும் தேவையில்லை போராட்டங்களும் தேவையில்லை எந்தப் பிரச்சனையும் தேவையில்லை.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் தடையில்லா மின்சாரமும் வற்றாத நீரும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அங்கு மழைநீரை சரியான முறையில் சேமித்து வருகின்றனர். இதையே நாமும் தமிழகத்திலும் பின்பற்றி வந்தால் நமக்கு திண்டாட்டமும் போராட்டமும் இல்லாமல் அமைதியானமுறையில் தண்ணீர் கிடைக்கும் என்பதில் கொஞ்சங்கூட சந்தேகமே இல்லை.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று தஞ்சை மாவட்டம் அன்று அழைக்கப்பட்டு வந்தது அதே மாவட்டம் இன்று தமிழகத்தின் வீடுமனைகளுக்கு பிரசித்திபெற்ற மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தடையில்லா மழையைப் பெறுவதற்கு மரங்களை பாதுகாப்போம் புதிய மரக்கன்றுகளை நடுவோம் மழைநீரை சேமிப்பதற்கு குளம் ஆறு ஏறி கிணறு இவைகளை பராமரிப்போம்.
சிந்திப்போம்...
செயல்படுவோம்...
சந்தோஷமாக இருப்போம்...
எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.
செயல்படுவோம்...
சந்தோஷமாக இருப்போம்...
எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, February 11, 2013
[ 15 ] கவிஞானி மௌனித்தார் ! சிரிப்பது முற்றும்
நடு நிசி நேரமதில்
நன்றாக உறக்கமதி
யாவருமே திளைத்திருக்க
உள்ளமதில் உறங்கியிருக்கும்
நினைவு மட்டும் விழித்திருக்க
உல்லாச கனவுகளாய்
உறங்கியவரை கிறங்க வைக்க
நடு நிசி பொழுது
நல்லதொரு நேரமது
நம் கவிஞானி கனவிலும்
காட்சியது வந்ததுவே
கன பொழுதில் பதறியுமே
படுக்கையிலிருந்து எழுந்து விட்டார்
சுற்றுமுற்றும் பார்த்து விட்டு
சில நிமிடம் மௌனமானார்
அவர் கனவில் கண்ட காட்சி
மௌனத்தின் காரணமாம்
என்றும் போல் சபைதனில்
கவி ஞானி அமர்ந்திருக்க
பிறர் துன்பத்தின் காரணமதை
சொல்லி அவர் திருந்த செய்த
காரியங்கள் நன்மைதான்
என்றாலும்... உனக்கு நீ என்ன செய்தாய்
என்று ஒருவர் கேட்பது போல் கனவு கண்டார்
கவிஞானி...
அவர் பயணிக்கும் நாலதுமே
சில காலம் இருப்பதுவை
கனவின் அறிகுரியால்
நன்றாக உணர்ந்த அவர்
இனி வயதான காலமதில்
இறை தியானங்கள்
செய்திடவும்... உபரி தொழுகை தொழுதிடவும்
தனிமையதில் திருமறையை ஓதிடவும்
Sunday, February 10, 2013
வழி விடுங்க... வழி விடுங்க... ஆம்புலன்ஸ்சுக்கு !
ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !
சேக்கனா M. நிஜாம்
இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ள ஒருவராலும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர முடியும்.
நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !
எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
சேக்கனா M. நிஜாம்
Saturday, February 9, 2013
குஷியை வரவழைக்குதா !? குல்பி ஐஸ்கிரீம் !
ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தெரியாதவர்கள் யாரும் இல்லயென்றே சொல்லமுடியும் கோடைகாலம் என்றில்லாமல் எல்லா நாட்களிலும் ஐஸ்கிரீம் என்ற ஜில் ஜில் உணவை ஜில்லென்று சாப்பிட ஏராளமானவர்கள் இருக்கின்றனர் சிறியவர் பெரியவர் என்றில்லாமல் எல்லா வயதினரும் தயார் என்றால் பாருங்களேன் எந்த அளவுக்கு அமோகம் என்று. ஐஸ்கிரீம்களில் எத்தனையோ வகையராக்கல் உண்டு அதில் ஒன்றுதான் குல்பி என்றழைக்கப்படும் ஒரு வகையான ஐஸ்கிரீம்.
இதை ஆங்கிலத்தில் முரடக அல்லது ஞரடக என்று அழைக்கப்படும் இது இந்திய துணைக் கண்டத்தில் ஒரு பிரசித்திபெற்ற ஐஸ்கிரீம் மேலும் பாகிஸ்தான், வங்காளதேஷம், நேபாள் பர்மா போன்ற நாடுகளிலும் நாளடைவில் மத்திய கிழக்கு ஐரோப்பா கிழக்கு ஆசியா வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் மக்களால் விரும்பி சாப்பிடும் ஒரு விஷேசமான ஐஸ்கிரீம்.
முகலாய பேரரசர் ஜஹாங்கீர் அவர்களுடைய மனைவி நூர்ஜஹான் அவர்களால் உறைந்த ஹிமாலயன் ஏரிகளில் இருந்து பெறப்பட்ட ஐஸ் கட்டிகளை கொண்டு சுண்டிய இனிப்பான பால் மற்றும் பழ கூழ்களைக் கலந்து கி.பி.1600-ன் முற்பகுதியில் உருவாக்கியதாகவும் நவீன குளிர்பதன பெட்டிகள் வரும் வரை இந்த முறையில்தான் வட இந்திய உயர்குடி மக்களாலும் தயாரிக்கப்பட்டு வந்தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
வட இந்தியாவில் குல்பி ஒரு பாரம்பரிய ஐஸ்கிரீம் உணவாக கருதப்பட்டு வருகின்றது. விஷேச நாட்களிலும் விருந்தினர்களுக்கு பரிமாறும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
அதே நேரத்தில் நாம் இதை ஒரு உணவாக உட்கொள்ளும்போது பல விஷயங்களை சிந்திக்க வேண்டியிருக்கு.
(2) இதன் தயாரிப்பின் ஆரம்ப மற்றும் முடிவுபெறும் கால அவகாசம் என்ன.
(3) இதை தயாரிப்பவருக்கு மருத்துவச் சான்றிதழ்கள் இருக்குதா ?
(4) தயாரிக்கப்படும் நிறுவனத்தின் முழு முகவரி.
(5) இதில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள்.
போன்ற அநேக விவரங்கள் விதிமுறைகளை நாம் பார்த்து வாங்க வேண்டும். சரியான விவரங்கள் இல்லாத பொருள்களை வாங்குவதிலிருந்து தவிர்த்து கொள்ளுதல் நல்லது எதையுமே வருமுன் காத்துக் கொள்வது மிக மிக நல்லது.
குடிசைத் தொழிலோ அல்லது வேறு எந்த தொழிலோ அது முக்கியமல்ல முறையான விவரங்கள் வேணும் அவ்வளவுதான். தற்போது சில இடங்களில் உணவுப்பொருள்களின் தயாரிப்பு முறை மிகவும் மோசமாதாகவும் சுகாதார கேடு விளைவிக்கும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது. பொதுமக்கள் அவசர வேலைகள் நிமித்தம் எதையும் சிந்திக்காது வாங்கி சாப்பிட்டுவிடுகின்றனர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் பக்கத்து மாநிலத்தில் உலகமுழுதும் ஒரு பிரசித்திபெற்ற உணவு தயாரிக்கும் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட கோழிக்கறியில் நோய்களை உண்டாக்கும் பல கிருமிகளை கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததை இந்த உலகம் மறந்திருக்காது.
இது குல்பியோடு நின்றுவிடவில்லை பால்கோவா, பஞ்சுமிட்டாய் பொரிச்ச முறுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆக இதன் தயாரித்தலை விழிப்புணர்வோடு ஆராய்ந்து பரிசோதித்து பார்ததல் பொதுமக்களின் கடமை. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் இப்படி செய்தால் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக மிகவும் எச்சரிக்கையோடு தரமானதை தயாரித்து விற்பனை செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.
பொதுமக்களே பசி பொறுக்க முடியாததுதான் ஆனால் நோய் அதைவிட பொறுக்க முடியாதது நோய் கடுமையான வேதனையை தரக்கூடியது. நோய் பணச்செலவை எற்படுத்தக்கூடியது நோய் சில நேரம் உயிரையும் குடித்துவிடக்கூடியது. ஆகவே பசியோடு இருக்கும் நீங்கள் கொஞ்சநேரம் சிந்தித்து ஆலோசித்து நல்ல உணவுகளையே வாங்கிப் பருகுங்கள் கூடுமானவரை சொந்தமாக சமைத்தே பருகுங்கள். மற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் நீங்கள் உணவிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

[ 2 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !
சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்
முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி
நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்
பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்
கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்
இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்
கடைக்கண் திறக்காதோ காவிரி உன்றன்
மடைத்தாள் திறக்காதோ மனம்
பூக்கள் பூக்க மறந்தனவே
புற்கள் மடிந்து உறங்கினவே
நாட்கட் செல்ல மறுப்பதுமே
நாங்கள் பட்டத் துன்பமாமே
காவிரி நீயும் வீணிலே யாங்குக்
.....கைதியாய் நிற்பதும் ஈண்டுப்
பூவிரிச் சோலை நெற்கதிர் கூட்டம்
.....பூமியில் செத்திடக் காண்பாய்!
பாவிகள் உன்னை அடைத்திடக் கண்டும்
......பாடலில் வடித்திடும் கருத்தை
மேவிடும் தமிழ்நாட் டின்நிலை கண்டும்
....மெச்சவும் கையறு நிலைதான் !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Thursday, February 7, 2013
உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !
2. கட்சியின் 'தல' பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...
3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...
4. கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...
5. கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு...
6. தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றி மிட்டாய் பொவுரும் உங்களுக்கு...
7. எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு...
8. சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு...
9. மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு...
10. கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு...
உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...
1. சமூக நலன்
2. உள்ளூர் வளர்ச்சி
3. வேலைவாய்ப்புகள்
4. விளையாட்டுப் பயிற்சிகள்
5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு
6. சமூக குற்றங்கள் ஒழிப்பு
7. கல்வி மேம்பாடு
8. சுகாதார விழிப்புணர்வு
9. வட்டி
10. லஞ்சம் ஒழிப்பு
11. ரேஷன் முறைகேடுகள் தடுப்பு
12. முதியோர் நலன்
13. இலவச மருத்துவ முகாம்
14. கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி
15. நலத்திட்ட உதவி
என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?
உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !
சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
Wednesday, February 6, 2013
கவனம் : பால் வாங்கும் முன் !
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்ககும் ஒரு உணவுப் பொருள் பால்.
பெரியவர்களுக்கென்று மாட்டுப்பால் ஆட்டுப்பால் ஒட்டகப்பால் இப்படி இருக்கின்றது எல்லா நாட்களிலும் பால் ஒரு அதீத தேவையான உணவுப் பொருளாக இருக்கின்றது குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தாய்பால் உண்டு ஆனால் தாய்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் "பாக்கெட் பால்", "பவுடர்பால்" மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால்.
அயல் தேசங்களில் 100-க்கு 90-சதவிகிதம் தாய்மார்கள் தாய்பால் புகட்டுவதற்கு பதிலாக மாட்டுப்பால் அல்லது பவுடர்பால் வகைகளை குழந்தைகளுக்கு புகட்டி வருகின்றனர். நம் பாரதத்தில்கூட தற்போது வெளி மாநிலங்களில் தாய்ப்பால் புகட்டுவது முற்றிலும் குறைந்து காணப்படுகின்றது நம் தமிழ்நாட்டில்கூட இதுமாதிரி தாய்மார்கள் உருவெடுக்கின்றனர் என்பதை கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
முன்பெல்லாம் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் தாய்பால் புகட்டி வந்தார்கள் தற்காலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் முறையாக சுரப்பதில் சிக்கல் இருக்கின்றது பல தாய்மார்களுக்கு தாய்;பால் முறையாக சுரந்தாலும் தன் அழகு இழந்துவிடுமே என்றதொரு பயத்தினால் குழந்தைகளுக்கு பசும்பால்களையும் பவுடர் பால்களையும் புகட்டி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும் இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும் அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும் இதையெல்லாம் யார் சிந்திப்பது ? தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும் இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும் அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும் இதையெல்லாம் யார் சிந்திப்பது ? தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.
அதே போல் பெரியவர்களுக்கு இருக்கவே இருக்கு பசும்பால் ஆம் பசும்பாலிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றது. பசும்பாலிலிருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் போன்ற உணவு வகைகளும் பெறப்படுகின்றது. சுத்தமான மாட்டுப்பாலை அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு தேவையில்லாத சில தீய பக்க விளைவுகள் வராது.
கடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுக்கொரு கரவை மாடு வைத்து வளர்த்து அதை பராமரித்து தனக்கு தேவையான பாலை பெற்று வந்தார்கள் நாளடைவில் அதுவே தேவைக்கு அதிகமாக கிடைக்கவே வெளியில் விற்கவும் செய்தார்கள் நாளடைவில் பல விஞ்ஞான நவீன வளர்சியினால் வீட்டுக்கொரு மாடு என்ற நிலை போய் மிக்ஸி கிரைன்டர் பிரிஜ் பின்பு டிவி போன்ற நவீன சாதனங்களால் மக்களின் வாழ்க்கை தரமும் தடம் மாறி கிடக்கின்றது.
இன்றைய மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கின்றது ?
எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதை பணம் கொடுத்து பெறவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர் அப்படி பெறப்படுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்குதா என்று பார்த்தால் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து புருவத்தை மேலும் கீழும் அசைப்பதோடு சரி.
உதாரணத்திற்கு நாம் அன்றாடம் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் பசும்பாலில் ஏகப்பட்ட கலப்படம் நிறைந்துள்ளது என்று பல ஆய்வறிக்கைகள் எடுத்துரைக்கின்றன. இப்படி கலப்படமுள்ள பாலை அருந்துவதினால் நமக்கே தெரியாத எத்தனையோ நோய்கள் வர ஏதுவாகின்றது.
சைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்தால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்திலும் மூன்று சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் வீடு வீடாக சென்றும் ஆங்காங்கே ஒரு நிறுத்தத்தை உண்டு செய்தும் பால் விநியோகம் செய்து வருகின்றனர் இரண்டு கரவை மாடுகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விநியோம் செய்கின்றார். பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்கவேண்டும்.
அன்பின் தாய்மார்களே உங்கள் அன்பு குழந்தைகள் நோயின்றி சீராக வாழவேண்டுமா ? காற்றுகூட எட்டிப் பார்க்க முடியாத தாய்ப்பாலை புகட்டுங்கள் வெளியில் விற்க்கப்படும் பால்களை புகட்டினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் கலந்த எதிர்காலம் சீர்குழைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அன்பின் பொதுமக்களே வெளியில் பால் வாங்கும்போது கவனமாக இருங்கள் இது சுத்தமான பால்தானா என்று கேட்டு வாங்குங்கள். ஆக மொத்தத்தில் உங்களுடைய விழிப்புணர்வு ஊரை திருத்திவிடும்.
சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கும் நவீனமே உன்னால் அதே சோதனைக் குழாயகள் மூலம் தாய்பாலை உருவாக்க முடியுமா ?
தாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா ? அதுபோல்தான் உங்கள் குழந்தையும்.
விற்பனைக்கு உட்படுத்தபடும் பாலுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதா ?
விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாலுக்கு வழியில் பாதுகாப்பு இருக்குதா ?
இப்படி ஒவ்வொரு கோணத்திலும் மக்கள் விழிப்புணர்வோடு சிந்துத்து செயல்பட்டால் சுத்தமான பால் கிடைக்கும் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம் கிடையாது.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, February 4, 2013
[ 14 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...
பயணிகளின் ஆர்வம் செல்லும்
ஊருக்கு பேருந்து வருகிறதா
என்ற ஆர்வம்
பயணி என்றால் பைத்தியகாரன் என்பர்
உண்மையிலேயே பைத்தியம் போல்
ஒருவர் அங்கும் இங்குமாக
அலைந்தவராய் இருந்தார்
கண்கள் எதையோ தேடியது
அங்கிருந்தோர் சிலர் என்னாயிற்று
என கேட்க பல ஆயிரம் பணத்தோடு
சில தங்க நகைகளும் தொலைந்ததை
கூறி அழுதார் பார்போர் மனம்
பதை பதிக்க கவிஞானி மட்டும்
ஏளனமாய் சிரித்து விட்டார்
என் சிரித்தீர் ? என சிலர் கேட்க
பதில் பகர்ந்தார் கவிஞானி.
இவன் தொலைத்தது பணம்
மட்டுமல்ல வாழ்க்கையையும் தான்
பெரும் பணம் படைத்த செல்வன் இவன்
சூது எனும் மாய நோயில் இவன் மனமும்
கலந்ததையா தினம் இவன்
இல்லாளின் நகையை எடுத்து வந்து
சூதில் தொலைப்பதுவே இவன் வேலை
வீதியில் தொலைத்த பணம்
இவன் கையில் கிடைத்து விட்டால்
சூதில் போய் தொலைத்திருப்பான் ஐயா
தொலைக்க இவனிடம் ஏதுமில்லை
எனவே தான் அழுகின்றான்..!
சூதும் மாதும் வேதனை செய்யும்
என்ற மூதாட்டி அவ்வை சொல்
அறியாதார் யாருமுண்டோ...!
என் சொல்லி சிரித்தார்
கவிஞானி
[ சிரிப்பது தொடரும் ]
Subscribe to:
Posts (Atom)